முகேஷ் அம்பானி வங்கி கணக்கில் எவ்வளவு பணம் இருக்கு..?!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உச்ச நீதிமன்றத்தில் தற்போது மிகவும் சுவாரஸ்யமான வழக்கு ஒன்று நடந்து வருகிறது. ஆம், நாட்டு மக்கள் முகேஷ் அம்பானி, டாடா, பிர்லா ஆகியோரின் வங்கி கணக்கில் எவ்வளவு பணம் வைத்துள்ளார்கள் என்பதை மக்கள் தெரிந்துகொள்ளக் கூடிய வாய்ப்பு உள்ளது என்றும், அதை எதிர்த்து வங்கி தரப்பு தொடுத்த வழக்கு நடைப்பெற்று வருகிறது.

 

இந்த வழக்கில் மக்கள் பக்கம் தீர்ப்பு வந்தால் தகவல் அறியும் அமைப்பிற்கு இந்தியாவின் டாப் பணக்காரர்கள் முதல் மோடி வரையில் அனைவரின் வங்கி கணக்குகள் குறித்துத் தெரிந்துக்கொள்ள கோரிக்கை குவியும்.

ஜெயந்திலால் என் மஸ்திரி வழக்கு

ஜெயந்திலால் என் மஸ்திரி வழக்கு

6 வருடத்திற்கு முன்பு ஜெயந்திலால் என் மஸ்திரி வழக்கில் உச்ச நீதிமன்றம் ரிசர்வ் வங்கி வெளிப்படைத்தன்மை உடன் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களின் தரவுகளைச் சமர்ப்பிக்க வேண்டும் எனத் தீர்ப்பு அளித்தது. இதை அடிப்படையாகக் கொண்டு தற்போது வங்கிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளது.

RTI மூலம் கோரிக்கை

RTI மூலம் கோரிக்கை

நாட்டின் பெரும் பணக்காரர்கள், தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்களின் வங்கிக் கணக்கு குறித்த தரவுகளை RTI மூலம் கோரினால் அளிப்பதா வேண்டாமா என்பது தான் தற்போது வங்கிகள் உச்ச நீதிமன்றத்தில் தொடுத்துள்ள வழக்கு.

வங்கி தரவுகள் வெளியீடு
 

வங்கி தரவுகள் வெளியீடு

இந்த வழக்கின் விசாரணையை எல்.என்.ராவ் தலைமையிலான பென்ச் தற்போது தள்ளுபடி செய்திருந்தாலும், மறு விசாரணை வியாழக்கிழமை நடக்க உள்ளது. வங்கிகள் தரப்பில் 6 வருடங்களுக்கு முன்பு அறிவித்த தீர்ப்பு பெரும் புள்ளிகளின் வங்கி தரவுகளை வெளியிடுவதற்கு வாய்ப்பு உள்ளது. அதேபோல் நிறுவனங்களின் எதிர்காலத் திட்டத்தின் தரவுகளை வெளியிட முக்கியக் காரணமாக அமையும் எனத் தெரிவித்துள்ளது.

எஸ்பிஐ வங்கி, ஹெச்டிஎப்சி வங்கி

எஸ்பிஐ வங்கி, ஹெச்டிஎப்சி வங்கி

இந்த வழக்கிற்காக எஸ்பிஐ வங்கி சார்பாகத் துஷார் மேத்தாவும், ஹெச்டிஎப்சி வங்கி சார்பாக முகுல் ரஹோத்தி ஆகியோர் ஆஜராக உள்ளனர். இந்த வழக்கின் முடிவுகள் வங்கிகளுக்குப் பல முக்கியமான பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியும் என நம்பப்படுகிறது.

அடிப்படை கொள்கை

அடிப்படை கொள்கை

இதேவேளையில் வங்கி கணக்கு, பணப் பரிமாற்ற தரவுகள், மற்றும் இதர அனைத்து வங்கி கணக்கு தரவுகளும் அடிப்படையிலேயே பாதுகாக்கப்பட வேண்டியவை. இந்நிலையில் 6 வருடத்திற்கு முன் அறிவிக்கப்பட்ட உத்தரவு வங்கியின் அடிப்படை கொள்கையே ஆட்டிப்படைக்கும் விஷயமாக உள்ளது.

உறுதியான தீர்ப்பு

உறுதியான தீர்ப்பு

இதனாலேயே தற்போது வங்கிகள் இந்த வழக்கை வெறிகொண்டு தொடுத்து, உறுதியான தீர்ப்பை எதிர்பார்த்து வருகிறது. இல்லையெனில் ஆர்டிஐ மூலம் யார் வேண்டுமானாலும் வங்கி தரவுகளைப் பெற முடியும் நிலை உருவாகிவிடும்.

அதானி குழும நிறுவனத்தில் கைவைத்த செபி.. பங்குச்சந்தையில் தடாலடி சரிவு..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How much Mukesh Ambani has in his account?: Interesting legal battle in Supreme Court:

How much Mukesh Ambani has in his account?: Interesting legal battle in Supreme Court
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X