கொரோனா பாதிப்பு ஏற்பட்ட பின் இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் முடங்கியது எல்லோருக்கும் தெரியும். மக்கள் வீட்டிலேயே முடங்கி இருக்க அவசியம் ஏற்பட்டதால் தொழிற்துறை, உற்பத்தி, ஏற்றுமதி, இறக்குமதி என அனைத்தும் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டுள்ளது.
கொரோனா தொற்று குறைய வேண்டும் என்பதற்காக உலகில் தற்போது 75 சதவீத நாடுகள் முழுமையான ஊரடங்கு கடைப்பிடிக்கும் காரணத்தால் சாலை வழி போக்குவரத்து முதல் விமானப் போக்குவரத்து வரையில் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாகக் கச்சா எண்ணெய்-இன் தேவை உலக நாடுகளில் பெரிய அளவில் குறைந்துள்ளது.
கச்சா எண்ணெய் தேவை குறைந்ததை அடுத்து கச்சா எண்ணெய் உற்பத்தி, ஏற்றுமதி, சுத்திகரிப்பை மட்டுமே நம்பியிருக்கும் நிறுவனங்கள் மட்டும் அல்லாமல் சில நாடுகளும் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. இப்படியிருக்கையில் எந்த நாடுகள் எவ்வளவு கச்சா எண்ணெய் பயன்படுத்தி வருகிறது என்பதைத் தான் இப்போது பார்க்கப்போகிறோம்.
கொரோனா ரணகளத்திலும் கல்லா கட்டிய டெலிகாம் நிறுவனங்கள்..!

அமெரிக்கா
கொரோனா-வால் அதிகளவில் பாதிக்கப்பட்ட அமெரிக்காவில் தற்போது கச்சா எண்ணெய் தேவை ஒரு நாளுக்கு வெறும் 14.4 மில்லியன் பேரலாகக் குறைந்துள்ளது, இது 1990ஆம் ஆண்டுப் பயன்பாட்டு அளவை விடவும் குறைவான அளவு என்றால் உங்களால் நம்ப முடியுமா. சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் சுமார் 30 வருடம் பின்னுக்குச் சென்றுள்ளது அமெரிக்கா.

இந்தியா
இந்தியா முழுவதும் ஊரடங்கு கடைப்பிடிக்கும் காரணத்தால் நாட்டில் கச்சா எண்ணெய் தேவை கிட்டதட்ட 70 சதவீதம் வரையில் குறைந்துள்ளது. உலகிலேயே 3வது மிக்பெரிய கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடான இந்தியாவில் கச்சா எண்ணெய் பயன்பாடு 70 சதவீதம் குறைந்துள்ளது, கச்சா எண்ணெய் வர்த்தகச் சந்தையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றால் மிகையில்லை.

சீனா
கொரோனாவில் இருந்து மீண்டு வரும் சீனா தற்போது இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது. இதனால் கச்சா எண்ணெய் இறக்குமதியைக் கடந்த இரு வாரத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது சீனா. இது கச்சா எண்ணெய் சந்தைக்குச் சற்று சாகமான வாய்ப்பாக அமைந்துள்ளது. சீனா தான் உலகிலேயே அதிகளவிலான கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடு என்பது குறிப்பிடத்தக்கது.

கனடா
கொரோனா பாதிப்பின் காரணமாகக் கனடாவில் கச்சா எண்ணெய் தேவை மிகப்பெரிய அளவில் குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஒரு நாடுகளுக்குக் கனடா முழுவதுமே 1.1 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் பயன்படுத்துவதாகத் தெரிவித்துள்ளது.

ஸ்பெயின்
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனாவால் அதிகளவில் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் ஸ்பெயின் முதன்மையாக இருக்கிறது. ஸ்பெயின் நாட்டில் கச்சா எண்ணெய் தேவை மார்ச் மாதத்தில் மட்டும் சுமார் 23 சதவீதம் வரையில் சரிந்துள்ளது. மேலும் விமானங்களுக்குப் பயன்படுத்தும் எரிபொருள் தேவை 42.5 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.

இத்தாலி
கொரோனா பாதிப்பில் அதிகளவிலான உயிர் பலியை எதிர்கொண்டு இருக்கும் இத்தாலியில் கச்சா எண்ணெய் தேவை 85 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.

பிரிட்டன்
பிரிட்டனில் gasoline விற்பனையின் அளவு 66 சதவீதமும், டீசல் விற்பனை 57 சதவீதம் வரையில் சரிந்துள்ளது. இதிலும் பிரிட்டன் நாட்டின் மிகப்பெரிய gasoline விற்பனை நிறுவனமான டெஸ்கோ-வின் இப்பரிவு விற்பனை சுமார் 70 சதவீதம் வரையில் சரிந்துள்ளதாக அறிவித்துள்ளது.