யார் வருமான வரி கட்டணும்..? எப்படியெல்லாம் விலக்குப் பெறலாம்..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா தொற்று, இன்போசிஸ் உருவாக்கிய புதிய வருமான வரித் தளத்தில் இருக்கும் கோளாறு ஆகியவற்றின் காரணமாக மத்திய நிதியமைச்சகம் வருமான வரி செலுத்த மக்களுக்குக் கூடுதலான கால அவகாசம் அளிக்கப்பட்டது.

 

இதன் மூலம் மாத சம்பளக்காரர்கள் முதல் அனைத்து தரப்பினரும் வருமான வரி தாக்கல் செய்யக் கடைசி நாளாக இருந்த ஜூன் 30ஆம் தேதியை மேலே குறிப்பிட்ட காரணத்திற்காகச் செப்டம்பர் 30ஆம் தேதியாக நீட்டிக்கப்பட்டு உள்ளது.

வருமான வரித் தளத்தில் இன்னும் பல பிரச்சனைகள் இருக்கும் காரணத்தால் மீண்டும் இக்கால அளவீடுகள் நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இதுகுறித்து அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்பதால் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் வருமான வரி அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும்.

2020-21ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி அறிக்கை செப்டம்பர் 30க்குள் தாக்கல் செய்யவில்லை என்றால் 5000 ரூபாய் விதிக்கப்படும். 5 லட்சத்திற்கும் குறைவாக வருமானம் உள்ளவர்களுக்கு 1000 ரூபாய் அளவிலான அபராதம் விதிக்கப்படும்.

இந்நிலையில் யாரெல்லாம் வருமான வரி செலுத்த வேண்டும்..? எப்படியெல்லாம் வருமான வரியில் விலக்குப் பெறுவது..? என்பது குறித்து சமுக வலைத்தளத்தில் ஒரு பதிவு மிகவும் வைரலாகி வருகிறது. அதைத் தான் இப்போது பார்க்கப்போகிறோம்.

டிடிஎஸ் வரிப் பிடித்தம்

டிடிஎஸ் வரிப் பிடித்தம்

நீங்கள் மாத சம்பளக்காரர்களாக இருந்தால் உங்க நிறுவனமே வருமான வரி பிடிக்கணும். அதுக்குப் பேரு Tax Deducted at Source (TDS - டிடிஎஸ்). அப்படி எதுவும் இல்லை என்றால் என நினைத்தால் உங்க பே ஸ்லிப் இருக்கா பாருங்கள், இதிலும் தெளிவாக இல்லையெனில் வருமான வரித் தளத்தில் பார்ம் 26 AS படிவத்தைப் பார்த்தால் ஒரு நிதியாண்டில் எவ்வளவு வருமான வரிப் பிடித்தம் செய்யப்பட்டு உள்ளது என்பதை முழுமையாகத் தெரிந்துகொள்ள வேண்டும்.

வரி அளவீடுகள்

வரி அளவீடுகள்

5 லட்சத்துக்கு மேல உங்க வருமானம் இருந்தா கண்டிப்பா வருமான வரி கட்டணும். ரிட்டர்ன்ஸ் ஃபைல் பண்ணனும்.

வருமான வரி அளவீடு - புதிய வரி விதிப்பு முறை
 

வருமான வரி அளவீடு - புதிய வரி விதிப்பு முறை

₹0 - ₹2,50,000 : Nil

₹2,50,001 - ₹5,00,000 : 5%

₹5,00,001 - ₹7,50,000 : ₹12500 + ₹5,00,000 மேல் இருக்கும் தொகைக்கு 10%

₹7,50,001 - ₹10,00,000 : ₹37500 + ₹7,50,000 மேல் இருக்கும் தொகைக்கு 15%

₹10,00,001 - ₹12,50,000 : ₹75000 + ₹10,00,000 மேல் இருக்கும் தொகைக்கு 20%

₹12,50,001 - ₹15,00,000 : ₹125000 + ₹12,50,000 மேல் இருக்கும் தொகைக்கு 25%

₹15,00,000 மேல் : ₹187500 + ₹15,00,000 மேல் இருக்கும் தொகைக்கு 30%

வருமான வரி அளவீடு - பழைய வரி விதிப்பு முறை

வருமான வரி அளவீடு - பழைய வரி விதிப்பு முறை

₹0 - ₹2,50,000 : Nil

₹2,50,001 - ₹5,00,000 : 5%

₹5,00,001 - ₹7,50,000 : ₹12500 + ₹5,00,000 மேல் இருக்கும் தொகைக்கு 20%

₹7,50,001 - ₹10,00,000 : ₹62500 + ₹7,50,000 மேல் இருக்கும் தொகைக்கு 20%

₹10,00,001 - ₹12,50,000 : ₹112500 + ₹10,00,000 மேல் இருக்கும் தொகைக்கு 30%

₹12,50,001 - ₹15,00,000 : ₹187500 + ₹12,50,000 மேல் இருக்கும் தொகைக்கு 30%

₹15,00,000 மேல் : ₹262500 + ₹15,00,000 மேல் இருக்கும் தொகைக்கு 30%

பிஎப் மற்றும் standard deduction

பிஎப் மற்றும் standard deduction

உங்க கைக்கு வரக்கூடிய வருமானம் 6 லட்சம் என்று வச்சுப்போம். அதுல ஏற்கனவே PF பிடிச்சு தான் குடுத்திருப்பாங்க. அதனால் அந்தத் தொகைக்கும் திரும்ப வரிச் சலுகை பெற முடியாது. இந்த 5 லட்சத்தில் இருந்து 50,000 கழிச்சுக்கங்க. அதுக்குப் பேர் standard deduction. மாத வருமானம் வாங்கும் எல்லாரும் கழிச்சுக்கலாம். இப்ப உங்க வருமானம் 5.5 லட்சம்.

வரிச் சலுகை கொண்ட முதலீடுகள்

வரிச் சலுகை கொண்ட முதலீடுகள்

இதுலிருந்து நீங்க வரி விலக்குக் கொண்ட முதலீடு செய்திருந்தால் கழிச்சுக்கலாம். எடுத்துக்காட்டாக 5 ஆண்டு வைப்பு நிதி, வரிச் சலுகை கொண்ட endowment policy, என்பிஎஸ், என்எஸ்சி, ஈஎல்எஸ்எஸ், வீட்டுக் கடனில் செலுத்தப்பட்ட அசல் தொகை, லைப் இன்சூரன்ஸ் பாலிசி ப்ரீமியம். இது எல்லாம் சேர்த்து 1.5 லட்சம் ரூபாய் வரையிலான வரிச் சலுகை பெற முடியும். அதை 5.5 லட்சத்தில் இருந்து கழிக்க முடியும்.

மருத்துவக் காப்பீடு

மருத்துவக் காப்பீடு

இதைத் தவிர நீங்கள் மருத்துவக் காப்பீட்டை உங்களுக்கோ அல்லது உங்களைச் சார்ந்து இருக்கும் குடும்ப உறுப்பினர்க்கோ எடுத்திருந்தா அதையும் 25,000 லேந்து 50,000 வரை வரி விலக்குப் பெறலாம். இந்தத் திட்டத்தின் மூலம் உங்கள் மனைவி, குழந்தைகள், பெற்றோர் ஆகியோருக்கும் செலுத்த மருத்துவக் காப்பீட்டு தொகைக்கு வரிச் சலுகை பெற முடியும்.

வீட்டுக்கடன்

வீட்டுக்கடன்

வீட்டுக் கடன் வாங்கிருந்தா அதுக்குக் கட்டும் வட்டி தொகைக்கு வருடம் 2.5 லட்சம் வரைக்கும் சேமிக்க முடியும். 80சி பிரிவில் வீட்டுக்கடனுக்கு நீங்கள் செலுத்த அசல் தொகைக்குத் தான் வரி விலக்கு பெற முடியும். ஆனால் இதில் வீட்டுக் கடன் வட்டி தொகைக்கு வரிச் சலுகை பெற முடியும்.

வீட்டு வாடகை

வீட்டு வாடகை

வீட்டு வாடகை கட்டினா அதற்கு உங்கள் HRA அளவை பொருத்து வரிச் சலுகை பெறலாம். வீட்டு வாடகை விடவும் வீட்டு கடன் பெறுவதில் தான் அதிகளவிலான வரிச் சலுகை கிடைக்கும்.

5 லட்சம் வரம்பு

5 லட்சம் வரம்பு

மேல சொன்னதை எல்லாம் தாண்டி உங்க வருமானம் 5 லட்சத்துக்கு மேல இருந்தால் அதற்கு வருமான வரி கட்டணும். இல்லேன்னா கட்ட வேண்டாம். 5 லட்சத்திற்கு மேல் இருக்கும் தொகைக்கு எவ்வளவு சதவீத வரி செலுத்த வேண்டும் என்பதைக் கணக்கிட மேல கொடுக்கப்பட்டு உள்ள வருமான வரி பலகையைப் பாருங்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How to get Income Tax Relief for a salaried person

How to get Income Tax Relief for a salaried person
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X