காலியாகும் பெங்களுரு நகரம்.. சர்வதேச நிறுவனங்கள் தவிப்பு.. கேள்விக்குறியாகும் லட்சக்கணக்கான வேலைகள்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது மொத்தம் 21 மில்லியனை தாண்டியுள்ளது. இதில் 7 மில்லியன் பேர் ஏப்ரல் பாதியில் இருந்து பதிவாகியுள்ளது.

 

இப்படி அதிரடியான வேகத்தில் பரவி வரும் கொரோனாவின் தாக்கம் மக்களையும் நாட்டையும் மிகப்பெரிய அளவில் பாதித்து வருகிறது. அது இழப்பீடு செய்ய முடியாத அளவுக்கு இருந்து இருந்து வருகிறது. குறிப்பாக பெங்களூரு போன்ற மிகப்பெரிய நகரங்களில் இதன் தாக்கம் சற்று கடுமையானதாகவே இருக்கிறது.

பணத்தை வித்டிரா பண்ணுங்க.. பொதுத்துறை வங்கிகளுக்கு அரசு திடீர் உத்தரவு.. கெய்ர்ன் எனர்ஜி காரணமா..?!

குறிப்பாக பொருளாதாரம், வேலையிழப்பு, மக்கள் இறப்பு விகிதம் என பலவகையிலும், இழப்பீடு செய்ய முடியாத அளவு இழப்பினை ஏற்படுத்தி வருகிறது.

பல நிறுவனங்கள் பாதிப்பு

பல நிறுவனங்கள் பாதிப்பு

ஏனெனில் ஐடி நகரம் என்று அழைக்கப்படும் பெங்களுருவில், ஏராளமான ஐடி நிறுவனங்கள் மற்றும் பல சர்வதேச நாடுகளை சேர்ந்த பலதுறை சார்ந்த நிறுவனங்கள் உள்ளன. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவின் தாக்கம் என்பது இந்திய நிறுவனங்களை மட்டும் அல்லாது, மற்ற நாட்டு நிறுவனங்களையும் பெரும் அளவில் பாதித்து வருகின்றது. குறிப்பாக அமெரிக்காவை சேர்ந்த பல நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவின் பாதிப்பு

கொரோனாவின் பாதிப்பு

இது பல ஆயிரமாயிரம் ஊழியர்களின் வேலைக்கு பாதகமாக அமையுமே என்ற கவலையும் தற்போது எழுந்துள்ளது. ஏனெனில் கடந்த 24 மணி நேரத்தில் பெங்களுருவில் 50,000க்கும் மேற்பட்டோர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில் அடுத்த இரண்டு வாரங்களில் இன்னும் கொரோனாவின் தாக்கம் என்பது உச்சம் தொடும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

பெங்களூரு  டூ அமெரிக்கா
 

பெங்களூரு டூ அமெரிக்கா

பெங்களுரு நகரங்களில் தற்போது வணிக மற்றும் அலுவலக கட்டிடங்கள் காலியாக உள்ளன. இந்த இன்னும் பல மாதங்களுக்கு நீடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் எதிரொலி சுமார் 13,000 கிலோ மீட்டருக்கு அந்தபக்கம் இருக்கும் அமெரிக்க வால் ஸ்ட்ரீட்டிலும் எதிரொலிக்க ஆரம்பித்துள்ளது. இது ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளிட்ட பல காரணிகளால் பாதிக்கப்பட்டுள்ளது.

பல ஊழியர்கள் விடுமுறை

பல ஊழியர்கள் விடுமுறை

ஸ்டாண்டர்ட் சார்டர்டு பிஎல்சி நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில், அதன் இந்திய ஊழியர்கள் 20,000 பேரில், 800 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தது. இதே யுபிஎஸ்-சில் 25% ஊழியர்கள் விடுமுறையில் இருப்பதாக தரவுகள் கூறுகின்றன. இதனால் பலரும் வேலை இழக்கும் அபாயம் நிலையே தற்போது நிலவி வருகின்றது.

அவுட்சோர்ஸிங்க் பணிகள் பாதிப்பு

அவுட்சோர்ஸிங்க் பணிகள் பாதிப்பு

பல சர்வதேச நாடுகளின் நிறுவனங்கள் அவுட்சோர்ஸிங்க் பணிகளை, பல ஆண்டுகளாக இந்தியா நிறுவனங்களுக்கு கொடுத்து வருகின்றன. ஆனால் தற்போது கொரோனா நெருக்கடியில் வேறு நிறுவனங்களுக்கு, வேறு நாடுகளுக்கு மாற்றப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இதனால் சற்று பாதிப்பினையும் கண்டுள்ளன. குறிப்பாக செலவினங்கள் அதிகம் உள்ளிட்ட பல காரணங்களால் பாதிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி தான் சிறந்த வழி

தடுப்பூசி தான் சிறந்த வழி

கொரோனாவில் இருந்து மீண்டும் வர கொரோனா தடுப்பூசி ஒன்றே சரியான வழியாக கருதப்படுகிறது. இத்தகைய சூழலில் இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் என்பது புதிய உச்சத்தினை தொட்டு வருகின்றது. அதிலும் பெங்களுரு போன்ற நகரங்களில் மொத்த பாதிப்பில் பாதி, நகரங்களில் தான் உள்ளது. இதனால் நிலை இன்னும் மோசமாகி கொண்டே தான் செல்கிறது. ஆக இது சரியாக இன்னும் சிறிது காலம் ஆகலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஆள்குறைப்பு செய்யலாம்

ஆள்குறைப்பு செய்யலாம்

மேலும் கொரோனா பெருந்தொற்று என்பது இந்தியாவுக்கு மட்டும் பிரச்சனை அல்ல, உலகளாவிய நெருக்கடி என்றும் கார்ட்னரின் ஆய்வாளர் டிடி மிஸ்ரா கூறியுள்ளார். தற்போது நிலவி வரும் இந்த கொரோனா அலை மிகப்பெரியதாக இருக்கும். தேவைப்பட்டால் அண்டை நாடுகளின் நிறுவனங்கள் ஆள்குறைப்பை கூட செய்யலாம் என்றும் எச்சரித்துள்ளார்.

நகரத்தில் பாதிப்பு அதிகம்

நகரத்தில் பாதிப்பு அதிகம்

இந்தியாவில் தற்போது மொத்த கொரோனா தாக்கம் என்பது 21 மில்லியனை தாண்டியுள்ள நிலையில், கடந்த ஏப்ரல் பாதியில் இருந்து மட்டும் 7 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 50,000 பேர் புதியதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த தொற்றில் பாதி நகர்புற மக்கள் எனவும் தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன.

பலி எண்ணிக்கை உயரும்

பலி எண்ணிக்கை உயரும்

வரவிருக்கும் வாரங்களில் நெருக்கடியான நிலை மிக மோசமடையக் கூடும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ள நிலையில், ஜூலை இறுதிக்குள் பலி எண்ணிக்கையானது 1,018,879 ஆக அதிகரிக்கலாம் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். அதாவது தற்போதைய எண்ணிக்கையாக 2,30,168-ல் இருந்து நான்கு மடங்காக அதிகரிக்கலாம். எனினும் இந்த கணிப்புகளும் ஒரு அனுமானமே, ஏனெனில் இது மாறிக் கொண்டே இருக்கும் என கூறுகின்றனர்.

நிதி நிறுவனங்கள் பாதிப்பு

நிதி நிறுவனங்கள் பாதிப்பு

குறிப்பாக நிதி நிறுவனங்களின் செயல்பாடுகளுக்கு முக்கிய தளங்களான பெங்களூர், டெல்லி மற்றும் மும்பையில், தொற்று விகிதங்கள் ஆபத்தான அளவினை எட்டியுள்ளன. இதனால் மாநில அரசுகள் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இந்த நெருக்கடியான இரண்டாம் அலையானது 2.9 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தினை தாக்கியுள்ளது.

மாற்றுவது மிக கடினம்

மாற்றுவது மிக கடினம்

இதற்கிடையில் இந்த நெருக்கடியான நேரத்தில் 20-க்கும் மேற்பட்ட துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இவைகளில் பெரும்பாலான துறைகள் அவுட்சோர்சிங் பணியில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. அவற்றை மாற்றுவது என்பது மிக கடினம். ஏனெனில் இந்த துறைகளில் திறமையான தொழில்நுட்பம் மற்றும் சிறப்பாக ஆங்கிலம் பேசும் தொழிலாளர்கள் முக்கிய அங்கமாக உள்ளனர்.

என்ன திட்டம்?

என்ன திட்டம்?

தற்போதைய நிலவரப்படி, ஒரே நிறுவனத்தின் மற்ற துறைகளில் உள்ள ஊழியர்கள் பல்வேறு துறைகளுக்கு மாற்றப்பட்டு வேலை செய்ய நிறுவனங்கள் கூறுகின்றன. ஒருவரே பல ரோல்களையும் பார்ப்பது, இல்லாத ஊழியரகளுக்கான இடத்தில் புதிய பணி நியமன என திட்டமிடுகின்றன. எப்படியிருப்பினும் தொடர்ச்சியாக தாக்கம் அதிகரிக்குமேயானால், இந்த நிலை இன்னும் மோசமாகலாம்.

மற்ற நாடுகளுக்கு மாற்றம்

மற்ற நாடுகளுக்கு மாற்றம்

வெல்ஸ் பார்கோ நிறுவனத்தின் ஊழியர் ஒருவர், வேலைகள் தற்போது பிலிப்பைன்ஸுக்கு மாற்றப்பட்டு வருவதாக கூறியுள்ளார். சான் பிரான்சிஸ்கோவை தலைமையிடமாகக் கொண்டுள்ள இந்த வங்கி, சுமார் இந்தியாவில் 35,000 பணியாளர்களை பயன்படுத்துகிறது. சேவைகள் தடைபடாமல் இருக்க இந்த நிறுவனம் இப்படி ஒரு நடவடிக்கையை எடுத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

வேறு நாடுகளுக்கு மாற்றப்படும் சேவை

வேறு நாடுகளுக்கு மாற்றப்படும் சேவை

இதே யுபிஎஸ் வங்கியில் மும்பை, புனே, ஹைதரபாத் மையங்களில் பல 8,000 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். தற்போது பலரும் விடுமுறை என்பதால் போலந்து போன்ற நாடுகளுக்கு மாற்றப்பட்டு வருகின்றன. இந்தியாவில் நிலவி வரும் நிச்சயமற்ற நிலையில் இன்னும் எத்தனை ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள், இன்னும் எவ்வளவு காலம் ஆகும் என்பதும் தெளிவாக தெரியவில்லை.

நிலைமை இன்னும் மோசமாகலாம்

நிலைமை இன்னும் மோசமாகலாம்

இப்படியொரு நிச்சயமற்ற நிலையில் இந்திய நிறுவனங்கள் மட்டும் அல்ல, உலக நாடுகளின் வணிகமும் ஸ்தம்பித்து தான் போயுள்ளனர். இந்த நிலையானது விரைவில் மீண்டு வராவிட்டால், இன்னும் நிலைமை மோசமான நிலைக்கு செல்லலாம். இதனால் நிறுவனங்கள் மேற்கொண்டு தங்கள் வணிகத்தினை மற்ற நாடுகளுக்கு மாற்ற முற்படலாம். இதனால் வேலையிழப்பு, பொருளாதாரம் என்பது மிக மோசமடையும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How to impact’s huge coronavirus increases is impaction of big other country firms

coronavirus impact.. How to impact’s huge coronavirus increases is impaction of big other country firms
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X