தங்க நகையை வாங்கிய 3 வருடங்களுக்குப் பிறகு விற்கும் போது அதன் மூலம் கிடைக்கும் லாபத்திற்கு 20 சதவீத 'நீண்ட கால மூலதன ஆதாய வரி' செலுத்த வேண்டும்.
ஆபரணத் தங்கம், பத்திரம் வடிவில் வாங்கிய தங்கம் அல்லது டிஜிட்டல் தங்கம் என எல்லாவற்றுக்கும் இந்த விதி பொருந்தும். ஆனால் அதை நீங்கள் சிலவற்றுக்குச் செலவு செய்யும் போது அதற்கு விலக்கு பெறலாம். அது எப்படி என இப்போது விளக்கமாகப் பார்க்கலாம்.
தங்க நகை வாங்கும் போது அதன் ரசீதில் என்னவெல்லாம் இருக்க வேண்டும் தெரியுமா?

வருமான வரி சட்டம்
பங்குகள், பத்திரங்கள், தங்கம், சொத்து (வீட்டை தவிர) போன்றவற்றைக் குறிப்பிட்ட காலம் வைத்திருந்து லாபத்துடன் விற்கும் போது, அதற்கு செலுத்த வேண்டிய நீண்ட கால மூலதன ஆதாய வரிக்கு, வருமான வரி சட்டப் பிரிவு 54F கீழ் விலக்கு பெறலாம்.

எப்படி?
தங்க நகையை நீங்கள் வாங்கி 3 வருடங்களுக்குப் பிறகு விற்கும் போது, அதன் மூலம் கிடைக்கும் லாபத்தில் 20 சதவீதத்தை வரியாகச் செலுத்த வேண்டும். ஆனால் அதை சொந்த வீடு வாங்க பயன்படுத்தினால் வரி விலக்கு வழங்கப்படும்.

மூலதன ஆதாய கணக்கு
ஒருவேலை தங்க நகையை விற்ற பிறகு வீடு வாங்குவதற்குள் வருமான வரி செலுத்த வேண்டும் என்றால், பொதுத்துறை வங்கிகளில் உள்ள மூலதன ஆதாய கணக்கில் அதை டெபாசிட் செய்துவிட்டு, தங்கத்தை விற்ற 2 ஆண்டுக்குள் வீட்டை வாங்கும் போது அதை பயன்படுத்தி வரி விலக்கு பெறலாம்.

வீடு கட்டுதல்
அதுவே வீடு கட்டுகிறீர்கள் என்றால் 3 வருடம் வரை அந்த தொகைக்கு வரி செலுத்தாமல் விலக்கு பெற முடியும். அதன்பிறகும் தாதமானால் கண்டிப்பாக நீண்ட கால மூலதன ஆதாய வரியைச் செலுத்த வேண்டும்.

தங்கம்
நாட்டின் பணவீக்க உயர்விற்கு முக்கிய ஆதாரமாக கருதப்படும் தங்கத்தில் இந்திய மக்கள் அதிகளவில் முதலீடு செய்தும், பயன்படுத்தியும் வருகின்றனர். தங்கத்தை பாதுகாப்பான மற்றும் லாபகரமான முதலீடாகவும் சமானியர்கள் மட்டும் அல்லாமல் பங்குச்சந்தை முதலீட்டாளர்களும் இது முக்கிய முதலீடாக திகழ்கிறது. தங்களது அவசர தேவைகளுக்கு அதை அடகு வைத்தும், விற்றும் உடனே பணமாக மாற்ற முடியும். ஆனால் விற்உம் போது அதன் மூலம் கிடைக்கும் லாபத்திற்கு வரி செலுத்த வேண்டும் என்பதை மக்கள் தெரிந்து இருக்க வேண்டும்.