தனியார் வங்கியில் முன்னணி வங்கியான ஐசிஐசிஐ வங்கி, தற்போது ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த அதிரடியான சேவை மூலம் ஐசிஐசிஐ வாடிக்கையாளர் 24 மணி நேரமும், எல்லா ஐசிஐசிஐ வங்கி ஏடிஎம்களிலும் பணத்தை எடுத்துக் கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது. இது வாடிக்கையாளர்களை திருப்திபடுத்தும் விதமாக இந்த திட்டத்தினை கொண்டு வந்துள்ளதாகவும் இவ்வங்கி தெரிவித்துள்ளது.
இது குறித்து ஐசிஐசிஐ வங்கியின் நிர்வாக இயக்குனரை அனுப் பாகி கூறுகையில், ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்கள் ஏடிஎம் கார்டுகள் இல்லாமல் பணம் எடுக்கும் வசதியானது, எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தனித்துவமான அனுபவத்தை வழங்கும் என்றும் கூறியுள்ளார். மேலும் வாடிக்கையாளர்களுக்கு விரைவான நேரத்தில் சேவையை வழங்க முடியும் என்றும் நாங்கள் நம்புகிறோம் என்றும் கூறியுள்ளார்.
இதெல்லாம் சரி ஏடிஎம் இல்லாமல் எப்படி பணத்தை எடுப்பது: ஐசிஐசிஐ மொபைல் ஆப்பினை லாகின் செய்து கொள்ளவும். இங்கு சர்வீசஸ் அண்ட் கேஸ் வித்டிராவல் என்ற ஆப்சனை தேர்ந்தெடுங்கள். பின்பு உங்களது அக்கவுன்ட் நம்பரையும் தேர்ந்தெடுங்கள். மேலும் 4 இலக்க தற்காலிக நம்பரை கொடுத்து பதிவு செய்யவும்.
இப்போது ஐசிஐசிஐ வங்கி ஏடிஎம்மில் கார்டுலெஸ் கேஸ் வித்டிராவல் ஆப்சனை தேர்வு செய்து பணத்தை எடுத்து கொள்ளலாம்.
ஐசிஐசிஐ வங்கி ஏடிஎம்மில் கார்டுலெஸ் கேஸ் வித்டிராவல் ஆப்சனை தேர்வு செய்யவும். அங்கு உங்களது மொபைல் நம்பரை கொடுக்கவும். உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு வரும் ஒன் டைம் பாஸ்வேர்டை கொடுத்து உள்ளே செல்லவும். இதையடுத்து 4 இலக்க தற்காலிக நம்பரை பதிவு செய்யவும்.
ஆமா.. ரெண்டிலுமே நம்மகிட்டதான் வசூல் பண்றாங்க.. அப்புறம் வரி, செஸ் வித்தியாசம் என்ன?
இதன் பின்னர் உங்களுக்கு தேவையான தொகையை பதிவு செய்து, பணத்தை எடுத்துக் கொள்ளலாம். உங்களது பதிவு செய்யப்பட்ட ஒன் டைம் பாஸ்வேர்டு அடுத்த நாள் நள்ளிரவு வரை செல்லுபடியாகும் என்றும் கூறப்படுகிறது. ஆக வாடிக்கையாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்த கார்டுலெஸ் வித்டிராவலுக்கு ஏடிஎம் தேவையில்லை. இந்த கார்டுலெஸ் வித்டிராவல் ஆப்சனில் தினசரி பரிவர்த்தனை வரம்பு 20,000 ரூபாய் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.