இந்தியாவின் வளர்ச்சி மிக மோசமாக பாதிக்கும்.. எச்சரிக்கும் இக்ரா..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உள்நாட்டு மதிப்பீட்டு நிறுவனமான இக்ரா கடந்த புதன்கிழமையன்று மோசமான மந்தநிலை குறித்து எச்சரித்தது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தினை 2021ம் நிதியாண்டில் குறைக்கும் என்று மதிப்பிட்டுள்ளது.

 

மேலும் இந்த மதிப்பீட்டு நிறுவனம் மைனஸ் 5 சதவீதமாக குறைத்தது. இது நாடு தழுவிய லாக்டவுன், நிதி ஆதரவு மற்றும் தொழிலாளர் பற்றாக்குறையை சுட்டிக் காட்டுகிறது.

இந்தியாவின் வளர்ச்சி மிக மோசமாக பாதிக்கும்.. எச்சரிக்கும் இக்ரா..!

முன்னதாக இந்த நிறுவனம் நடப்பு நிதியாண்டில் வளர்ச்சி 1 -2 சதவீதமாக இருக்கும் என்று கணித்திருந்த நிலையில், தற்போது அதனை குறைத்துள்ளது. இந்த அறிக்கை 2021ம் நிதியாண்டின் முதல் மற்றும் இரண்டாவது காலாண்டுகளில் முறையே -25% மற்றும் -2.1% என வீழ்ச்சி காணும் என்று மதிப்பிட்டுள்ளது.

இதே முன்பு முதல் காலாண்டில் 16% - 20% வரையில் வீழ்ச்சி காணலாம் என்றும், இதே இரண்டாவது காலாண்டில் வளர்ச்சி 2.1% ஆக இருக்கும் என்றும் கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இது தொடர்ச்சியாக இரண்டு காலாண்டுகளில் பொருளாதாரம் தொடர்ந்து மந்த நிலையில் இருப்பதையே குறிக்கிறது.

இதற்கிடையில் அரசாங்கம் அறிவித்த ஊக்குவிப்பு சலுகைகள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதம் அல்லது 20.9 லட்சம் கோடி ஊக்குவிப்பு சலுகைகளை அரசாங்கம் கூறிக் கொண்டிருந்தாலும் ஆய்வாளர்கள், இதை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 0.8 - 1.2 சதவீதமாகக் கொண்டுள்ளனர்.

நாடு தழுவிய பூட்டுதலின் இரண்டு கட்டங்களுக்கு பிறகு, பல வல்லுனர்கள் வளர்ச்சியில் ஒரு சிறிய சுருக்கம் குறித்து எச்சரித்தனர். ஆனால் லாக்டவுன் மே இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களால் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பியதை தொடர்ந்து விநியோகச் சங்கிலிகளைப் பெறுவதில் கணிசமான தாமதங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இதன் தாக்கம் முதல் காலாண்டில் மிக ஆழமானதாக இருக்கும். மேலும் மீட்பும் குறைவான வேகத்தில் தான் இருக்கும் என்றும் இக்ரா கூறியுள்ளது.

 

இந்த நிலையில் மூன்றாவது காலாண்டில் பொருளாதாரம் 2.1 சதவீதமாக மிதமான வளர்ச்சியாக இருக்கும் என்றும், இது நான்காவது காலாண்டில் 5 சதவீதமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

பிப்ரவரி முதல் ரிசர்வ் வங்கி அறிவித்த நாணய நடவடிக்கைகளில் 8.02 லட்சம் கோடி ரூபாயும், மத்தியில் ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்ட 1.93 லட்சம் கோடி ரூபாயும் வரி சலுகைகள் காரணமாகவும் வருவாயும் குறையும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

ICRA expecting deep recession in coming quarters

ICRA expect a deep recession in coming quarters. Its also revised downwards the growth in -25% in first quarter, and second quarter growth -2.1%
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X