அந்தோ பரிதாபத்தில் ஐடிஎப்சி பர்ஸ்ட் பேங்க்.. கதறும் முதலீட்டாளர்கள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: ஐடிஎப்சி பர்ஸ்ட் பேங்க் கடந்த புதன் கிழமையன்று டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டு அறிக்கையினை வெளியிட்டுள்ளது. இதில் நிகர நஷ்டமாக 1,639 கோடி ரூபாயினை பதிவு செய்துள்ளது. இதில் கொஞ்சம் சந்தோஷப்படக்கூடிய விஷயம் என்னவெனில் முந்தைய ஆண்டு இதே காலாண்டில் 2,504 கோடி ரூபாய் நஷ்டத்தினை கண்டுள்ளது கவனிக்கதக்கது.

 

தொடர்ந்து பெருத்த அடியினை கண்டு வரும் ஐடிஎப்சி பர்ஸ்ட் பேங்க், அடையாளம் காணப்பட்ட தனியார் தொலைத் தொடர்பு நிறுவனத்திற்கு டிசம்பர் 31 வரையில் இந்த வங்கி 3,244 கோடி ரூபாய் கடன் வழங்கியுள்ளதாக வெளிப்படுத்தியுள்ளது. இதில் 2,000 கோடி ரூபாய் மாற்ற முடியாத கடனீட்டு வடிவத்திலும் (non-convertible debentures), இதே 1,244 கோடி ரூபாய் வங்கி உத்திரவாதங்கள் அடிப்படையிலும் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த தொலைத்தொடர்பு நிறுவனத்திடம் இருந்து இதுவரை கட்டணம் செலுத்தும் இயல்பு நிலையும் இல்லை என்றும் கூறப்படுகிறது.

அந்தோ பரிதாபத்தில் ஐடிஎப்சி பர்ஸ்ட் பேங்க்.. கதறும் முதலீட்டாளர்கள்..!

இதே இந்த வங்கியில் நிகர வட்டி வருவாய் 34% வளர்ச்சி கண்டு 1,534 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டோடு ஒப்பிடும்போது 1,145 கோடி ரூபாயாக இருந்தது. இதே நிகர வட்டி மார்ஜின் தொகையானது 3.86 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் இதே காலாண்டில் 2.89% ஆக இருந்துள்ளது.

மேலும் மொத்தம் செயல்படாத சொத்து மதிப்பு 2.83% அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே டிசம்பர் காலாண்டில் 2.62% ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதே இந்த வங்கியின் சில்லறை கடன் விகிதம் 51,506 கோடி ரூபாயாக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இது கடன் புத்தகத்தில் 49% பங்களிப்பு உள்ளதாகவும், டிசம்பர் 31 நிலவரப்படி, இணைப்புக்கு முந்தைய கடன் 13% ஆகவும் அதிகரித்துள்ளது.

இது குறித்து இந்த வங்கியின் நிர்வாக இயக்குனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான வி வைத்திய நாதன், இது வங்கி வளர்ச்சியை எதிர் நோக்குவதற்கான நேரம் என்றும் கூறியுள்ளார். இந்த நிலையில் இந்த வங்கி பங்கின் விலையானது பிஎஸ்இயில் 4.55% வீழ்ச்சி கண்டு 42.05 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

IDFC first Bank announced net loss Rs.1,639 cr in December quarter

IDFC first Bank announced net loss Rs.1,639 cr in December quarter. Its reported Rs.2,504 cr in December 2018. And IDFC First Bank shares today fell as much as4.55% to Rs.41.85 on BSE after the lender reported a huge loss.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X