வளர்ச்சி கண்ட இந்திய தொழில் துறை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்திய தொழிற்துறை உற்பத்தி கடந்த நவம்பர் 2019-ம் மாதத்துக்கு இன்று வெளியாகி இருக்கிறது. கடந்த நவம்பர் 2019-க்கான தொழிற்துறை உற்பத்தி அதற்கு முந்தைய நவம்பர் 2018-ம் மாதத்தை விட 1.8 சதவிகிதம் வளர்ச்சி கண்டு இருக்கிறது.

 

கடந்த அக்டோபர் 2019-ல் தொழிற் துறை உற்பத்தி வளர்ச்சி கடந்த அக்டோபர் 2018-ஐ விட -3.9 சதவிகிதம் சரிந்து இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்கள் கொஞ்சம் பலமான சரிவைக் கண்ட பின், இப்போது இந்திய தொழில் துறை வளர்ச்சி கொஞ்சம் மேல் நோக்கி வளர்ச்சி காணத் தொடங்கி இருக்கிறது என்பதை இந்த தொழில் துறை உற்பத்திக் கணக்கு நமக்கு தெளிவாகச் சொல்கிறது.

வளர்ச்சி கண்ட இந்திய தொழில் துறை..!

ஒட்டு மொத்தமாக இந்திய தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி கண்டு இருந்தாலும்,

மின்சாரம், முதன்மைப் பொருட்கள், கேப்பிட்டல் கூட்ஸ், கட்டுமானப் பொருட்கள், கன்ஸ்யூமர் டியூரபிள்ஸ் என பல முக்கிய துறைகள் இன்னும் சரிவைத் தான் சந்தித்துக் கொண்டு இருக்கின்றன.

கடந்த நவம்பர் 2018-ஐ விட இந்த நவம்பர் 2019-ல் மின்சாரம் -5.0 %, பிரைமரி கூட்ஸ் -0.3 %, கேப்பிட்டல் கூட்ஸ் -8.6 %, கட்டுமானப் பொருட்கள் -3.5 %, கன்ஸ்யூமர் டியூரபிள்ஸ் -1.5 % என சரிவைச் சந்தித்து இருக்கிறது.

இந்திய தொழில் துறை உற்பத்தியில் சில துறைகள் வளர்ச்சியும் கண்டிருக்கிறது. கடந்த நவம்பர் 2018-ஐ விட இந்த நவம்பர் 2019-ல் சுரங்கத் துறை 1.7 %, உற்பத்தி 2.7 %, இடைநிலைப் பொருட்கள் 17.1 %, கன்ஸ்யூமர் நான் டியூரபிள்ஸ் 2.0 %, என சில துறைகள் வளர்ச்சியும் கண்டிருக்கிறதாம்.

ஒட்டு மொத்த உலக சந்தைகளும், அமெரிக்க ஈரான் போர் பதற்றத்துக்குப் பின் கொஞ்சம் சமாதானம் அடையத் தொடங்கி இருக்கிறது. இந்த நேரத்தில் இந்தியாவின் தொழில் துறையும் வளர்ச்சி கண்டு கொண்டு இருப்பதை ஒரு நல்ல விஷயமாகப் பார்க்கலாம். ஆனால் இந்த வளர்ச்சி தொடர வேண்டும் என்பது தான் நம் எண்ணம். தொடருமா..? அடுத்த மாத கணக்கு வரட்டும் பார்த்துவிடுவோம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: iip industry ஐஐபி
English summary

IIP output is in positive zone after 3 months

The index of Industrial Production output data is showing that the industry is seeing some overall growth.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X