மார்டன் பர்னிச்சர்களைத் தயாரிப்பிலும், விற்பனையிலும் உலகிலேயே முன்னோடியாக விளங்கும் ஸ்வீடன் நாட்டின் ஐகியா நிறுவனம் நீண்ட காலத்திற்குப் பின் இந்தியாவில் தனது வர்த்தகத்தைத் துவங்கியது.
இந்திய வர்த்தகச் சந்தை மீது யாருக்குத் தான் ஆசை இருக்காது, ஆனால் 2018 வரையில் இந்தியா பக்கம் வராத ஐகியா ஆன்லைன் பர்னீச்சர் விற்பனைக்காகச் சந்தை உருவான பின்பு பெரிய நம்பிக்கையுடன் இறங்கியது.
இந்நிலையில் ஐகியா நிறுவனம் தனது முதல் கடையை மிகவும் பிரம்மாண்டமான முறையில் ஹைதராபாத்-ல் 2018 துவங்கிய நிலையில் வெறும் 2 வருட காலத்தில் 2வது கடையை மும்பையில் அடுத்த சில நாட்களில் துவங்க உள்ளது ஐகியா.
டிக்டாக் விற்பனை செய்ய கடைசி நாள் முடிந்தது.. டிரம்ப் முடிவு என்ன..?!

மும்பையில் ஐகியா
ஐகியா நிறுவனம் இந்தியாவில் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யும் முடிவில் வருகிற 18ஆம் தேதி இந்தியாவில் வர்த்தகத் தலைநகரான மும்பையில் 2வது பிரம்மாண்ட ரீடைல் பர்னிச்சர் கடையைத் திறக்க உள்ளது.
இதேவேளையில் மும்பை மக்கள் ஆன்லைனிலும் ஷாப்பிங் சேவை கொடுக்க உள்ளது ஐகியா.

இந்தியா உடன் வர்த்தகம்
ஐகியா நிறுவனம் இந்தியாவில் இருந்து தனது பர்னீச்சர் தயாரிப்புக்காகச் சுமார் 30 வருடங்களாகப் பல பொருட்களை வாங்கி வந்தாலும் 2 வருடத்திற்கு முன்பு தான் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்தது. ஆனால் துவங்கும்போதே இந்தியாவில் சுமார் 1000 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டைச் செய்து மிகவும் பிரம்மாண்டமாகத் துவங்கியது.

5 லட்சம் சதுரடி
ஹைதரபாத் ஐகியா ரீடைல் கடை 4 லட்சம் சதுரடியில் துவங்கப்பட்ட நிலையில் புதிதாகத் துவங்கப்படும் மும்பை ரீடைல் கடை சுமார் 5 லட்சம் சதுரடியில் கட்டமைத்துள்ளது. மேலும் மும்பை கடையில் சுமார் 1,200 ஊழியர்களைப் பணியில் அமர்த்தியுள்ளதாகவும், அதில் 50 சதவீதம் பேர் பெண்கள் என்றும் ஐகியா தெரிவித்துள்ளது.

2021 திட்டம்
மும்பையில் தற்போது துர்பி ரயில்வே நிலையத்திற்கு அருகில் துவங்கப்பட்டும் 5 லட்ச சதுரடி கடையுடன் 2 சிறிய கடைகளையும் மும்பையில் துவங்க முடிவு செய்துள்ளது ஐகியா. இதுவும் 2021க்குள் 3 கடைகளும் முழுமையாக இயங்கும் அளவிற்குப் பணிகளைத் திட்டமிட்டுள்ளது ஐகியா.