மத்திய அரசிடம் இருந்து டாடா குழுமம் கைப்பற்றிய ஏர் இந்தியா நிறுவனத்தின் சேவை தரம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில், இன்னும் சிஇஓ மற்றும் நிர்வாக இயக்குனர் நியமிக்கப்படாமல் இயங்கி வருகிறது.
பல மாதங்களாகக் கடுமையான திட்டமிடல், ஆலோசனைக்குப் பின்பு துருக்கி ஏர்லையன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவரான இல்கர் ஆய்சி-ஐ நியமிக்கச் சந்திரசேகரன் தலைமையிலான டாடா குழுமம் நிர்வாகம் பிப்ரவரி 14ஆம் தேதி முடிவும் செய்தது.
இல்கர் ஆய்சி நியமனத்திற்காக மத்திய அரசிடம் அனுமதி கேட்ட போது தான் டாடா குழுமத்திற்கு அதிர்ச்சி அளிக்கும் செய்தி காத்திருந்தது.
NSE சித்ரா சென்னை வீட்டை ஆனந்த் மனைவி-க்கு விற்பனை.. 10 வருட தொடர்பு.. உண்மை வெளியானது..!

யார் இந்த இல்கர் ஆய்சி
ஏப்ரல் 2015 இல் துருக்கி ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் சேர்மன் ஆக நியமிக்கப்பட்ட அய்சி, 2022 ஜனவரி இறுதியில் பதவியை ராஜினாமா செய்தார். அய்சி 1994 இல் தற்போது துருக்கி நாட்டின் அதிபரான ரெசெப் தயிப் எர்டோகனின் ஆலோசகராக இருந்தது குறிப்பிடத்தக்கது. இல்கர் அய்சி 2018ல் திருமணம் செய்து கொண்ட போது ரெசெப் தயிப் எர்டோகன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

துருக்கி - பாகிஸ்தான் நட்புறவு
துருக்கி மற்றும் பாகிஸ்தான் நட்புறவில் இருக்கும் வேளையில், துருக்கி நாட்டின் அதிபரான ராசெப் தயிப் எர்டோகன்-க்கு இல்கர் ஆய்சி மிகவும் நெருக்கமானவராகவும், பல்வேறு காலக்கட்டத்தில் ராசெப் தயிப் எர்டோகன்-ன் நிர்வாகத்தின் கீழ் இல்கர் ஆய்சி பணியாற்றி இருப்பதாலும், எர்டோகன் சமீபத்தில் ஐநா சபையில் பேசிய போது காஷ்மீர் பிரச்சனை குறித்தும் பேசினார்.

மத்திய அரசு
இந்த நிலையில் மத்திய அரசு ஏர் இந்தியா சிஇஓ-வாக இல்கர் ஆய்சி-ஐ உடனடியாக நியமனம் செய்வதில் தயக்கம் காட்டியது மட்டும் அல்லாமல், இல்கர் ஆய்சி-யின் பின்புலத்தை ஆய்வு செய்ய உள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது.

கௌரவமான முடிவாக இருக்காது
டாடா குழுமம், மத்திய அரசின் முடிவுக்காகக் காத்திருந்த நிலையில் இலக்ர் அய்சி இன்று முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 'இத்தகைய நிலையில் ஏர் இந்தியா சிஇஓ பதவியை ஏற்றுக் கொள்வது சாத்தியமானதும் இல்லை, கௌரவமான முடிவாகவும் இருக்காது என்ற முடிவுக்கு நான் வந்துள்ளேன்'. எனத் தெரிவித்துள்ளார்.

வண்ணம்
மேலும் டாடா குரூப் ஏர் இந்தியாவின் சிஇஓ-வாக என்னை நியமனம் செய்த நாளில் இருந்து இந்திய மீடியா செய்திகளைத் தொடர்ந்து கவனித்து வருகிறேன். என் மீதும், என்னுடைய நியமனத்தின் மீது பூசப்படும் வண்ணம் அறிவேன். கனத்த இதயத்துடன் டாடா குழுமத்தின் சிஇஓ ஆஃபரை மறுக்க முடிவு எடுத்துள்ளேன் எனத் தெரிவித்துள்ளார் இல்கர் ஆய்சி.

மோடி அரசு
"தேசிய பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு" ஏர் இந்தியாவின் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநராக அய்சியை நியமிக்க அரசு அனுமதி வழங்கக் கூடாது என்று ஆர்எஸ்எஸ்-இணைந்த சுதேசி ஜாக்ரன் மஞ்ச் அமைப்பு சில நாட்களுக்கு முன்பு கூறியது குறிப்பிடத்தக்கது. இதற்கு ஏற்றார் போல் மோடி அரசு அனுமதி வழங்குவதில் தாமதமானது.