இந்த வாரம் கவனிக்க வேண்டிய முக்கிய காரணிகள்.. பார்த்து வச்சுக்கோங்க.. மிஸ் பண்ணிடாதீங்க..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்திய பங்கு சந்தைகள் தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில், மூன்றாவது வாரத்தில் சந்தை எப்படி இருக்கும்.

நடப்பு வாரத்தில் கவனிக்க வேண்டிய முக்கிய காரணிகள் என்னென்ன? வாருங்கள் பார்க்கலாம்.

முதலாவதாக நாம் கவனிக்க வேண்டிய விஷயம் சீனா இந்திய எல்லை பிரச்சனை தான்.

இந்திய சீனா எல்லை பதற்றம்
 

இந்திய சீனா எல்லை பதற்றம்

சீனா இந்தியா இடையே பல கட்ட பேச்சு வார்த்தைகள் நடந்து வந்தாலும், சீனா எல்லை பகுதிகளில் தொடந்து தனது படைகளை குவித்து வருகிறது. இதே இந்தியாவும் பதிலுக்கு படைகளை குவித்து வருகின்றது. எப்போது என்ன நடக்குமோ என்ற பதற்றமான நிலையே நிலவி வருகின்றது. அதோடு இந்தியாவில் நாள்தோறும் கிட்டதட்ட 1 லட்சத்திற்கும் அருகில் கொரோனா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

தடுப்பூசி எதிர்பார்ப்பு

தடுப்பூசி எதிர்பார்ப்பு

இதனால் இந்த கொரோனா வைரஸினை விரட்ட தடுப்பூசிகள் எதுவும் வராதா என்றும், பரவலாக எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது. ஏனெனில் சீர்குலைந்து வரும் பொருளாதாரத்தினை மேம்படுத்த வேண்டுமெனில், பழைய படி தொழில் சாலைகள் செயல்பட வேண்டும், உற்பத்தியினை அதிகரிக்க வேண்டும். இவையெல்லாம் நடக்க வேண்டுமெனில் பழைய படி மக்கள் இயங்க வேண்டும்.

இதற்கு கொரோனா வைரஸினை விரட்டியடிக்க வேண்டும். அப்படி விரட்டினால் மட்டுமே பொருளாதார நடவடிக்கைகள் அதிகரிக்க தொடங்கும். இதனால் பங்கு சந்தைகளும் ஏற்றம் காணத் தொடங்கும். ஆக இது எப்போது வரும் என எதிர்பார்ப்பு எல்லாத் தரப்பிலும் பலமாக இருந்து வருகின்றது.

பொது பங்கு வெளியீடு

பொது பங்கு வெளியீடு

இந்திய சந்தையினை பொறுத்த வரையில் வரும் வாரத்தில் சில நிறுவனங்கள், பொது பங்கு வெளியீட்டினை செய்ய உள்ளன. குறிப்பாக கேம்ஸ் நிறுவனம், அதாவது கம்ப்யூட்டர் ஏஜ் மேனேஜ்மென்ட் சர்வீசஸ் நிறுவனம், இதனையடுத்து Chemcon Speciality Chemicals நிறுவனம் செப்டம்பர் 21 அன்று பங்கு வெளியிட உள்ளன. இதே ஏஞ்சல் புரோக்கிங் நிறுவனம் செப்டம்பர் 22 அன்று பங்கு வெளியிட உள்ளது. இதே ரூட் மொபைல் நிறுவனம் திங்கட்கிழமையன்று பங்கு சந்தையில் பட்டியலிடப்பட உள்ளது. இதுவும் கவனிக்க வேண்டிய விஷயங்களில் ஒன்றாக உள்ளது.

 ரூபாயின் மதிப்பு
 

ரூபாயின் மதிப்பு

இதே அமெரிக்காவின் ஃபெடரல் வங்கியின் வட்டி நடவடிக்கையினால், ரூபாயின் மதிப்பு சற்று ஏற்ற இறக்கத்துடன் காணலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் பொருளாதாரத்தினை மீட்கும் பொருட்டு, அமெரிக்காவின் ஃபெடரல் வங்கி நீண்ட காலத்திற்கு வட்டி விகிதத்தினை அப்படியே தொடரும் என்றும் தெரிவித்துள்ளது. இதனால் டாலரின் மதிப்பானது அழுத்தத்தில் உள்ளது.

எஃப்ஐஐ முதலீடு

எஃப்ஐஐ முதலீடு

செப்டம்பர் மாதத்தில் தற்போது வரை அன்னிய நிறுவனங்களின் முதலீடு ஈக்விட்டி சந்தைகளில் 1,766 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது இனி வரும் மாதங்களிலும் தொடரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதே கடன் சந்தை வரத்துடன் சேர்த்து மொத்தம் 6259 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

ஆர்பிஐயின் தரவு

ஆர்பிஐயின் தரவு

ஆர்பிஐயின் அறிக்கையின் படி, செப்டம்பர் 11வுடன் முடிவடையும் கடன் வளர்ச்சியினை ஆர்பஐ இந்த வாரத்தில் வெளியிடும். அதோடு அதே நாளி அன்னிய செலவாணி பற்றிய இருப்பு வரவையும் வர்த்தகர்கள் கண்கானிப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இந்த தரவுகளினால் ரூபாயின் மதிப்பில் மாற்றம் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

எஃப் & ஓ எக்ஸ்பெய்ரி

எஃப் & ஓ எக்ஸ்பெய்ரி

அதே போல வியாழக்கிழமையன்று இந்திய சந்தைகளில் எஃப் & ஓ எக்ஸ்பெய்ரி ஆக இருப்பதால், சந்தையில் அதிக ஏற்ற இறக்கம் காணப்படலாம். ஏனெனில் முதலீட்டாளர்கள் தங்கள் கையில் இருக்கும் ஆர்டர்களை விற்கலாம். அல்லது அடுத்த கான்ட்ராக்டில் ரோல் ஓவர் செய்யலாம். இதனால் சந்தையில் அதிக ஏற்ற இறக்கம் நிச்சயம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இதுவும் சந்தையின் போக்கினை நிர்ணயிக்கலாம்.

டெக்னிக்கல் அவுட்லுக்:

டெக்னிக்கல் அவுட்லுக்:

கடந்த வாரத்தில் பார்மா மற்றும் ஐடி துறையானது மிக வலுவாக செயல்பட்டன. இதே பேங்க் நிஃப்டி 2% வீழ்ச்சியில் தான் முடிவடைந்தது. இந்த நிலையில் நிஃப்டியின் அடுத்த முக்கிய சப்போர்ட் லெவல்& ரெசிஸ்டன்ஸ் லெவல்கள் 11,200 மற்றும் 11,630 என்றும் நிபுணர்கள் கணித்துள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Important things to watch this week

LAC issue, F&O expiry, IPO, dollar & rupee value among some other key factors likely to move market this week.
Story first published: Sunday, September 20, 2020, 16:53 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X