பட்ஜெட் அறிவிப்பால் விலை உயர வாய்ப்பில்லை.. 'குடி'மக்கள் ஹேப்பி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் வெளிநாட்டில் இருக்குமதி செய்யப்படும் மதுபானம் முக்கியக் கவனத்தை ஈர்த்துள்ளது.

 

ஆம் மத்திய நிதியமைச்சர் தாக்கல் செய்துள்ள பட்ஜெட் அறிக்கையில் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மதுபானம் மீதான சுங்க வரி 150 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. இதனால் மதுபானத்தின் விலை பெரிய அளவில் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அடுத்த சில நிமிடத்தில் அறிவிக்கப்பட்ட அக்ரி இன்பரா செஸ் அதாவது விவசாய உள்கட்டமைப்பை மேம்படுத்தப் புதிதாக உருவாக்கப்பட்ட கூட்டு வரியே வெளிநாட்டு மதுபானத்தின் மீது 100 சதவீதம் விதிக்கப்பட்டது.

சுங்க வரியில் குறைக்கப்பட்ட வரி விதிப்பு அக்ரி இன்பரா செஸ் மூலம் விதிக்கப்பட்டு உள்ளதால் வெளிநாட்டு மதுபானத்தின் விலையில் மாற்றும் இருக்காது எனத் தெரிகிறது.

அக்ரி இன்பரா செஸ்

அக்ரி இன்பரா செஸ்

மத்திய அரசு தற்போது அறிவிக்கப்பட்டு உள்ள அக்ரி இன்பரா செஸ் ஸ்காட்ச், விஸ்கி, ரம் மற்றும் வோட்கா ஆகியவற்றின் மீது மட்டுமே விதிக்கப்பட உள்ளது. மேலும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பீர் மீது இந்த வரி விதிக்கப்படவில்லை, இதனால் வெளிநாட்டு பீர் மீது இருக்கும் 110 சதவீத வரி தொடரும்.

சுங்க வரி விதிப்பு மறுசீரமைப்பு

சுங்க வரி விதிப்பு மறுசீரமைப்பு

பட்ஜெட் தாக்கலின் போது மத்திய நிதியமைச்சகம் நடைமுறையில் இருக்கும் 400க்கும் மேற்பட்ட சுங்க வரியை மறு ஆய்வு செய்யத் திட்டமிட்டு உள்ளதாக அறிவித்துள்ள நிலையில் 2021 அக்டோபர் மாதத்திற்குள் சுங்க வரி விதிப்பில் சில மாற்றங்கள் கண்டிப்பாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.

வெளிநாட்டு மதுபான வர்த்தகம்
 

வெளிநாட்டு மதுபான வர்த்தகம்

இந்திய மதுபானம் மற்றும் பீர் விற்பனையில் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மதுபானம் மற்றும் பீர்-ன் வர்த்தகம் வெறும் 1 - 2 சதவீதம் மட்டுமே உள்ளது என International Wine and Spirits அமைப்பின் ஆய்வு தகவல் கூறுகிறது.

இந்தச் சிறிய பிரிவு வர்த்தகத்தைக் கட்டுப்படுத்த மத்திய அரசு அதிகளவிலான வரியை விதித்து வருகிறது.

மதுபான விற்பனை சாதனை

மதுபான விற்பனை சாதனை

கொரோனா காலத்தில் இந்தியாவில் பல மாநிலங்களில் உள்நாட்டு மதுபானம் மற்றும் பீர் வகைகள் மீது கொரோனா செஸ் வரியை விதித்தது. இந்நிலையில் பட்ஜெட் அறிவிப்பில் புதிதாக அக்ரி இன்பரா செஸ் வரி விதிக்கப்பட்டு உள்ளது. மதுபானம் மீது எவ்வளவு வரி விதித்தாலும், விலை அதிகரித்தாலும் ஒவ்வொரு பண்டிகை காலத்தின் போதும் மதுபான விற்பனை சாதனை படைத்துக்கொண்டு தான் வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Imported alcohol price may not change after Budget 2021 100percent agricultural infrastructure cess

Imported alcohol price may not change after Budget 2021 100percent agricultural infrastructure cess
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X