கொரோனா நேரத்தில் உயிர்காக்கும் மருந்து மீது ஜிஎஸ்டி கொடூரமானது: பிரியங்கா காந்தி விளாசல்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய மக்கள் கொரோனாவை எதிர்த்துப் போராடுவதைக் காட்டிலும் வரி மற்றும் விலை வாசியுடன் போராடுவது கடுமையாக உள்ளது.

 

கடந்த சில மாதங்களாகப் பெட்ரோல், டீசல், சமையல் எண்ணெய், எரிவாயு, உணவுப் பொருட்கள், காய்கறிகளின் விலையில் அதிகளவிலான ஏற்ற இறக்கங்களை எதிர்கொண்டு வருகிறது. இதனால் சாமானிய மக்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில் கொரோனா தொற்று எதிர்க்கப் பயன்படும் மருந்து, மருத்துவப் பொருட்களின் மீதான ஜிஎஸ்டி வரி மிகவும் அதிகமாக இருப்பதாக மத்திய அரசை உடனடியாக இதைக் குறைக்க வலியுறுத்தியுள்ளார் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா.

 பிரியங்கா காந்தி வத்ரா டிவீட்

பிரியங்கா காந்தி வத்ரா டிவீட்

இந்தக் கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மிகவும் அத்தியாவசியமான ஆக்சிஜன், வென்டிலேட்டர், வேக்சின் மற்றும் மருந்து பொருட்கள் மீது ஜிஎஸ்டி வரி விதிப்பது கொடூரமான மற்றும் உணர்வற்ற செயல் எனக் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா தனது டிவிட்டரில் தெரிவித்தார்.

 ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில்

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில்

இன்று நடக்கும் ஜிஎஸ்டி கூட்டத்தில் மத்திய அரசு கொரோனா-வை எதிர்த்துப் போராட உதவும் அனைத்து மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களின் மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும் எனவும் தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார் பிரியங்கா காந்தி வத்ரா. இதுமட்டும் அல்லாமல் தற்போது எந்தெந்த பொருட்களுக்கு எவ்வளவு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது என்பதையும் தெரிவித்துள்ளார்.

 கொரோனா தொற்றுக்கு முன்
 

கொரோனா தொற்றுக்கு முன்

சானிடிசர் - 18 சதவீத ஜிஎஸ்டி வரி

ஹேண்ட் வாஷ், சோப் - 18 சதவீத ஜிஎஸ்டி வரி

சர்ஜிக்கல் ரப்பர் கிளவ்ஸ் - 12 சதவீத ஜிஎஸ்டி வரி

கிருமிநாசினி - 18 சதவீத ஜிஎஸ்டி வரி

தெர்மோமீட்டர் - 18 சதவீத ஜிஎஸ்டி வரி

இது அனைத்தும் கொரோனா தொற்று வருவதற்கு முன்பு மக்கள் தங்களைக் காத்துக்கொள்ளத் தற்போது அதிகளவில் பயன்படுத்தக்கூடியது.

 கொரோனா தொற்றுக்குப் பின்

கொரோனா தொற்றுக்குப் பின்

கொரோனா தொற்று வந்த பின்பு உயர் காக்கும் மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் மீதான ஜிஎஸ்டி வரி

வென்டிலேட்டர் மற்றும் செயற்கை சுவாச கருவி - 12 சதவீத ஜிஎஸ்டி வரி

ஆக்சிஜன் கான்சென்டிரேட்டர்ஸ் தனிநபர் பயன்பாட்டுக்காக இறக்குமதி செய்யப்பட்டது - 12 சதவீத ஜிஎஸ்டி வரி (ஜூன் 30 வரை 28 சதவீதத்தில் இருந்து குறைக்கப்பட்டது)

சிலிண்டரில் பயன்படுத்தும் ஆக்சிஜன் - 12 சதவீத ஜிஎஸ்டி வரி

ரெமிடிசிவர் மற்றும் இதர கொரோனா மருந்துகள் - 12 சதவீத ஜிஎஸ்டி வரி

டெஸ்டிங் கிட் - 12 சதவீத ஜிஎஸ்டி வரி

பிபிஈ கிட்ஸ் >Rs 1000`2 - 12 சதவீத ஜிஎஸ்டி வரி

கட்டன் அல்லாத பேஸ் மாஸ்க் - 12 சதவீத ஜிஎஸ்டி வரி

வேக்சின் - 5 சதவீத ஜிஎஸ்டி வரி

பிபிஈ கிட்ஸ் >Rs 1000`3 - 5 சதவீத ஜிஎஸ்டி வரி

கட்டன் பேஸ் மாஸ்க் - 5 சதவீத ஜிஎஸ்டி வரி

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Imposing GST on essential medical products in pandemic is cruel, insensitive: Priyanka Gandhi Vadra

Imposing GST on essential medical products like oxygen, ventilators, vaccine, medicines during a pandemic is cruel and insensitive: Priyanka Gandhi
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X