கொரோனா தொற்றில் இருந்து உலக நாடுகள் மீண்டு வரும் வேளையில் நிறுவனங்கள் தங்களது வர்த்தகத்தைச் சரிவில் இருந்து மீட்டுக் கொண்டு வருவதற்கும், தற்போது இருக்கும் வர்த்தகத்தைத் தொடர்ந்து வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்லவும் ஊழியர்களை அதிகளவில் நம்பியிருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
அமெரிக்கா மட்டும் அல்லாமல் உலகமும் முழுவதும் வர்த்தகப் போட்டி அதிகமாக இருக்கும் காரணத்தால் வர்த்தகத்தைத் தொடர்ந்து தக்க வைத்துக்கொள்வது பெரும் போட்டியாக உள்ளது. இந்த நிலையில் ஊழியர்களைத் தக்க வைத்துக்கொள்ளவும், ஊக்குவிக்கவும் முக்கியமான முடிவை அமெரிக்க நிறுவனங்கள் எடுத்துள்ளது.
2 டிஜிட்டல் கரன்சியை உருவாக்கும் ஆர்பிஐ.. எதற்காகத் தெரியுமா..?

அமெரிக்க நிறுவனங்கள்
அமெரிக்க நிறுவனங்கள் கடந்த 10 ஆண்டில் இல்லாத அளவிற்கு அதிகப்படியான சம்பள உயர்வைத் தனது ஊழியர்களுக்கு அளிக்கத் தயாராகி வருகிறது. இதன் மூலம் ஊழியர்களை நிறுவனத்தில் தக்க வைத்துக்கொள்வது மட்டும் அல்லாமல் வர்த்தகத்தைத் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் வைத்திருக்க முடியும்.

3.9% சம்பள உயர்வை
2008க்குப் பின் அமெரிக்க நிறுவனங்கள் 2022ல் தனது ஊழியர்களுக்கு 3.9 சதவீதம் வரையிலான சம்பள உயர்வை அளிக்க நிறுவனங்கள் தயாராகி வருகிறது. இதேவேளையில் இந்த ஆண்டுப் புதிய வேலைவாய்ப்புக்கு மாறியவர்களுக்கு அதிகப்படியான சம்பளம் கொடுக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்திய ஐடி துறை
குறிப்பாக இந்தியாவில் ஐடி துறையில் திறன் வாய்ந்த டெக் ஊழியர்களுக்கு அதிகப்படியான வர்த்தக வாய்ப்புகள் இருக்கும் காரணத்தால் நிறுவனங்கள் கிட்டதட்ட 100 சதவீதம் வரையிலான சம்பள உயர்வைக் கொடுத்து ஊழியர்களைப் பணியில் அமர்த்தி வருகின்றனர்.

சம்பள உயர்வு
இதேபோல் ஏற்கனவே நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு அதிகப்படியான சம்பள உயர்வும், பதவி உயர்வு, போனஸ் எனப் பல சலுகைகளை அளிப்பதாக இந்திய ஐடி நிறுவனங்கள் அறிவித்துள்ளது. இது ஐடி துறைக்கு மட்டும் அல்லாமல் பிற துறையில் இருக்கும் நிறுவனங்களுக்கும் கிட்டதட்ட அதே அளவிலா முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. இதன் எதிரொலி தற்போது அமெரிக்காவிலும் எதிரொலித்துள்ளது.

தி கான்பிரென்ஸ் போர்டு
அமெரிக்காவில் முன்னணி திங்க் டேங்க அமைப்பான தி கான்பிரென்ஸ் போர்டு என்ற அமைப்பு செய்த ஆய்வில் 49 சதவீத நிறுவனங்கள் அதிகப்படியான சம்பளத்தை அளிக்கத் தயாராகியுள்ளது, 39 சதவீத நிறுவனங்கள் அதிகரித்து வரும் பணவீக்கத்தைக் காரணம் காட்டி கூடுதலான சம்பள உயர்வை அளிக்கும் திட்டத்தில் இருப்பதாக அறிவித்துள்ளது.

கொரோனா-வுக்குப் பின்
கொரோனா-வுக்குப் பின்பு ஆரம்பக்கட்ட ஊழியர்கள் வேறு வேலைவாய்ப்புக்கும், அதிகச் சம்பளம் கிடைக்கும் வேலைக்கும் செல்ல அதிகப்படியான வாய்ப்புகள் இருக்கும் காரணத்தால் உலகம் முழுவதும் நிறுவனங்களின் ஊழியர்கள் வெளியேறும் விகிதம் அதிகமாகவே உள்ளது.