சிக்கன் விற்பனை 50% சரிவு.. வாட்ஸ்அப் வதந்தியால் பாதிப்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்று ஸ்மார்ட்போன் பயன்பாடு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ள அதே வேளையில் தேவையில்லாத செய்திகளும், பொய்யான தகவல்களும் அதிகளவில் பரவி வருகிறது. இதனால் சின்ன சின்ன விஷயங்கள் கூடப் பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது.

 

இதேபோன்று தான் கொரோனா வைரஸ் கறி கோழிகள் மூலம் பரவுகிறது என்ற பொய்யான வதந்தியால் இந்தியாவில் சிக்கன் விற்பனை 50 சதவீதம் வரையில் சரிந்து உள்ளதாகக் காட்ரிஜ் ஆக்ரோவெட் தெரிவித்துள்ளது.

சிக்கன் விற்பனை 50% சரிவு.. வாட்ஸ்அப் வதந்தியால் பாதிப்பு..!

வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற சமுக வலைத்தளத்தில் பொய்யான தகவல்களும், செய்திகள் பரவியதன் விளைவாக மக்கள் மத்தியில் கொரோன குறித்த பயம் அதிகமாகி சிக்கன் வாங்குவதை மக்கள் அதிகளவில் குறைத்துள்ளனர். இதனால் இந்தியாவில் மிகப்பெரிய சிக்கன் விநியோகம் செய்யும் காட்ரிஜ் ஆக்ரோவெட் நிறுவனத்தின் விற்பனை 50 சதவீதம் வரையில் சரிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார் இந்நிறுவன தலைவர் பி.எஸ்.யாதவ்.

உலகப் பணக்காரர்களைப் பதம் பார்த்த கொரோனா வைரஸ்.. 444 பில்லியன் டாலர் மாயம்..!

4 வாரத்திற்கு முன் 7.5 கோடி கோழிகள் விற்பனை செய்த நிலையில் கடந்த வாரம் காட்ரிஜ் ஆக்ரோவெட் நிறுவனத்தின் விற்பனை 4 கோடி கோழிகளாகக் குறைந்துள்ளது. இதேபோன்ற தாக்கத்தைத் தான் சந்தையின் முன்னணி சிக்கன் விற்பனை நிறுவனங்களும் சரிந்துள்ளது.

இதன் எதிரொலியாக விவசாயிகளிடம் இருந்து வாங்கும் கோழிகளின் விலை 80-85 ரூபாயில் இருந்து 30-35 ரூபாயாகக் குறைந்துள்ளது. இது கோழி வளர்க்கும் விவசாயிகளை அதிகளவில் பாதித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India chicken sales slashed almost 50% by false virus rumour

A false rumour that the coronavirus can be spread by chickens has slashed Indian poultry sales by almost 50%, top supplier Godrej Agrovet Ltd said on Thursday.
Story first published: Saturday, February 29, 2020, 18:37 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X