சீனாவை விட இந்தியா மோசமாக பாதிக்கும்.. சொல்வது யார் தெரியுமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இந்திய பொருளாதாரம் என்ன ஆகுமோ என்ற கருத்தும் நிலவி வருகிறது. அதிலும் வரலாறு காணாத அளவு பொருளாதார வீழ்ச்சியானது பூஜ்ஜியமாக இருக்கும் என்றும் நிபுணர்கள் கணித்துள்ளனர்.

 

இதற்கிடையில் சீனா இந்தியா இடையே நிலவி வரும் பதற்ற நிலை காரணமாக, சீனா பொருட்கள் வேண்டாம். சீனா வேண்டாம் என பரப்புரைகள் அதிகரித்து வருகின்றது. இதற்கிடையில் மத்திய அரசும் இந்தியாவின் பாதுகாப்பு இறையாண்மை கருதி 59 சீனா செயலிகளை சில தினங்களூக்கு முன்பு இந்தியாவில் தடை செய்தது.

இதே இன்னும் சில வர்த்தக அமைப்புகள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களை தடைசெய்யப்போவதாக அறிவித்து இருந்தது. இப்படி ஒவ்வொரு துறையிலும் சீனாவின் பொருட்களுக்கே, அல்லது முடிந்த மட்டில் சீனாவினை தவிர்க்கவோ முயன்று வருகின்றன.

பட்டையை கிளப்பிய டிசிஎஸ்.. சத்தம் காட்டாமல் ஏற்றம் கண்ட ரிலையன்ஸ்..!

இந்தியாவுக்கு தான் பிரச்சனை

இந்தியாவுக்கு தான் பிரச்சனை

இவ்வாறு இந்தியா சீனா வேண்டாம் என்று தவிர்த்தால் அது இந்திய பொருளாதாரத்திற்கே கேடு விளைவிக்கும் என்கிறது ஒரு அறிக்கை. இது குறித்து தி வயருக்கு அளித்த பேட்டியில் இந்தியா சீனாவினை தவிர்க்கும் பட்சத்தில் அதன் விளைவு இந்தியாவிற்கே என்று கூறியுள்ளார். இது கல்வான் பள்ளத்தாக்கில் சீன வீரர்கள் மற்றும் இந்திய வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் பலியான நிலையில் இப்படி ஒரு அறிக்கை வந்துள்ளது.

இந்தியாவுக்கு தான் பிரச்சனை

இந்தியாவுக்கு தான் பிரச்சனை

அதிலும் சீனாவின் இறக்குமதிகளை தடை செய்ய வேண்டும், சீனா பொருட்கள் வேண்டாம் என்ற நிலைக்கு மத்தியில், சீனா பொருளாதாரம் எந்த அளவுக்கு வீழ்ச்சி காணுமோ என்ற கருத்துகள் நிலவி வருகிறது. இந்த நிலையில் தற்போது நிதி ஆயோக்கின் முன்னாள் துணைத் தலைவர் அர்விந்த் பனகாரியா, தி வயருக்கு அளித்த ஒரு பேட்டியில், இந்தியா சீனாவினை வேண்டாம் என தவிர்த்தால், அது இந்தியாவுக்கு தான் பிரச்சனையாக அமையும் என்று தெரிவித்துளார்.

இந்தியாவுக்கு இறக்குமதி ஏற்றுமதி
 

இந்தியாவுக்கு இறக்குமதி ஏற்றுமதி

ஏனெனில் சீனா அதன் மொத்த ஏற்றுமதியில் இந்தியாவுக்கு 3% தான் ஏற்றுமதி செய்கிறது. இதே இந்தியாவின் மொத்த இறக்குமதியில் 15% சீனாவுடையது தான். இது குறித்து கொலம்பியா பல்கலைக் கழகத்தின் பொருளாதார நிபுணர், சர்வதேச பொருளாதாரத்தின் வர்த்தக பாலிசி பற்றி யோசிக்க வேண்டும். அதில் கவனம் செலுத்த வேண்டும். தற்போதைய நிலையில் இது மிக அவசியமானது என்றும் கூறியுள்ளார்.

சீனாவின் பங்கு

சீனாவின் பங்கு

மேலும் தற்போது இந்தியாவில் இருந்து சீனாவுக்கு 6 சதவீதம் ஏற்றுமதி ஆகிறது. ஆனால் சீனாவில் இருந்து 3 சதவீதம் மட்டுமே இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுகிறது. ஆக ஒட்டுமொத்த அளவில் பார்க்கும் போது அது இந்திய பொருளாதாரத்திற்கே பிரச்சனையாக அமையும் என்றும் கூறப்படுகிறது.

இந்திய பொருளாதார வளர்ச்சி

இந்திய பொருளாதார வளர்ச்சி

அதோடு இந்தியாவில் பொருளாதாரம் முந்தைய ஆண்டில் 7 சதவீதமாக வளர்ச்சி கண்டு இருந்த நிலையில், கடந்த நிதியாண்டில் சுமார் 4.2 சதவீதமாக வீழ்ச்சி கண்டுள்ளது.

இந்த நிலையில் தற்போதைக்கு பழைய நிலைக்கு பொருளாதாரம் திரும்பவும் வாய்ப்பில்லை என்றும் கூறியுள்ளனர்.

இந்தியாவுக்கு தான் பிரச்சனை

இந்தியாவுக்கு தான் பிரச்சனை

ஆக சீனா இந்தியாவின் இந்த பிரச்சனையானது, இந்தியாவுக்கே பிரச்சனையாக அமையும் என்றும் கூறப்படுகிறது. ஆக நாம் சீனாவுடன் தொடர்பில் உள்ளதே நமக்கு நல்ல சாதகமான விஷயமாக இருக்கும். நாம் இதே பிரச்சனையுடன் தான் இருந்தாக வேண்டும். இது தான் நமது பொருளாதாரத்திற்கு ஏற்றதொரு விஷயமாகும்.

சீனா எப்போது அமைதியாகும்

சீனா எப்போது அமைதியாகும்

நாம் நமது பொருளாதாரத்திற்கு 10 டிரில்லியன் டாலராக அமையும். இதே சீனா 14 டிரில்லியன் டாலராக அமையும். நமது பொருளாதாரம் வலுவாக மாறினால் தான், சீனா அமைதியாகும் என்றும் நிபுணர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India china issue could be effect on Indian economy

Trade deal... niti aayog chairman said india china trade issue affect an Indian economy.
Story first published: Sunday, July 5, 2020, 22:53 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X