இந்தியாவில் கிரிப்டோகரன்சி வர்த்தகம் குறித்து மத்திய அரசு புதிய வர்த்தக மசோதா-வை உருவாக்கி வருகிறது. இதற்கிடையில் ரிசர்வ் வங்கி, செபி இணைந்து பல கிரிப்டோ வர்த்தகத்திற்காக புதிய கட்டமைப்பை உருவாக்கி வருகிறது. இதற்கான இறுதி ஒப்புதலை பிரதமரிடம் பெற்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
இந்நிலையில் உலக நாடுகளில் கிரிப்டோகரன்சி வர்த்தகம் மற்றும் அதன் நிலவரம் என்ன என்பதை இப்போது பார்ப்போம்.
இதுதான் இந்தியாவின் டாப் 10.. பர்கண்டி பிரைவேட் ஹுருன் இந்தியா 500 லிஸ்ட்..!

அமெரிக்கா - குழப்பம்
உலகிலேயே தற்போது அதிக கிரிப்டோ முதலீட்டாளர்கள், வர்த்தகர்கள், வர்த்தகத் தளங்கள், கிரிப்டோ உற்பத்தி நிறுவனங்கள், கிரிப்டோ முதலீட்டு அமைப்புகள் அமெரிக்காவில் தான் உள்ளது. ஆயினும் அமெரிக்க அரசு கிரிப்டோ வர்த்தகம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை இதுவரை வெளியிட முடியாமல் குழப்பத்தில் மூழ்கியுள்ளது.
சமீபத்தில் கூட 6 முன்னணி கிரிப்டோகரன்சியின் உறுப்பினர்கள் அமெரிக்க அரசு அதிகாரிகளைச் சந்தித்து முதல் முறையாக வர்த்தக முறை குறித்து முழுமையாக ஆலோசனை செய்யப்பட்டது. இதேவேளையில் புதிய விதிமுறைகள், கட்டுப்பாடுகளை விதிக்க அமெரிக்க அரசும் தயாராக இல்லை. இதேவேளையில் SEC அமைப்பு கிரிப்டோகரன்சியை முக்கிய முதலீடாகப் பார்க்கத் துவங்கியுள்ளது

சீனா - கடையை மூடியது
உலகிலேயே மிகப்பெரிய கிரிப்டோ வர்த்தகம் மற்றும் உற்பத்தி சந்தையாக இருந்த சீனா தற்போது மொத்தமாகத் தடை செய்து முதலீட்டாளர்களையும், வர்த்தகர்களையும் மூலையில் உட்கார வைத்துள்ளது. சீனாவின் இந்தக் கடுமையாகத் தடை உத்தரவால் பல கோடி முதலீட்டாளர்கள் கையில் இருக்கும் கிரிப்டோகரன்சியை எப்படிப் பணமாக்குவது எனத் தெரியாமல் உள்ளனர்.
சீனா 2013ல் இருந்து கிரிப்டோகரன்சி மீதான எதிர்ப்பை காட்டி வருகிறது, குறிப்பாகச் சீனா மத்திய வங்கி தொடர்ந்து விதித்து வந்த கட்டுப்பாடுகள் 2021 உச்சக்கட்டத்தை அடைந்தது மொத்த கிரிப்டோகரன்சியும் முடங்கியது.

ஜப்பான் - வா தோழா
ஜப்பான் அரசு புதுமையைத் தொடர்ந்து ஆதரிக்கும் வழக்கத்தைக் கொண்டு உள்ள காரணத்தால் கிரிப்டோவுக்கு உலகிலேயே மிகவும் சாதகமான நாடாக உயர்ந்துள்ளது. ஆனால் அனைத்து கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்ச்-ம் பதிவு செய்யப்பட்டுப் பணச் சலவை மற்றும் நிதியில் தீவிரவாத ஒழிப்பு விதிமுறைகளை முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும்.
தற்போது ஜப்பான் நாட்டில் பிட்காயின் மற்றும் எதிரியம்-ஐ பேமெண்ட் சர்வீசஸ் சட்டத்தின் கீழ் சேர்த்துள்ளது ஜப்பான். இது மட்டும் அல்லாமல் பங்குகள், பத்திரங்கள் எனப் பல நிதியியல் முதலீட்டு திட்டத்தையும் ஜப்பான் வழங்கி வருகிறது.
இதுவரை கிரிப்டோவுக்கு எதிராக ஜப்பான் நாட்டில் ஒரு சட்டம் கூட இல்லை.

பங்களாதேஷ்
கிட்டதட்ட இந்தியா-வை போலத் தான் பங்களாதேஷ்-ம் 2017ல் பல்வேறு காரணங்களைக் கூறி கிரிப்டோகரன்சியை மொத்தமாகத் தடை செய்ய உத்தரவிட்டது. ஆனால் 2020 பிளாக்செயின் டெக்னாலஜி மூலம் கிடைக்கும் நன்மைகள் குறித்து எதிர்காலத்தில் இது முக்கியத்துவம் பெறும் எனப் பங்களாதேஷ் ஒரு முக்கியமான அறிக்கையை வெளியிட்டது.
ஆனால் இன்னமும் கிரிப்போடகரன்சியை முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

போர்ச்சுகல்
ஐரோப்பாவிலேயே கிரிப்டோகரன்சியை அதிகளவில் ஆதரிக்கும் ஒரு நாடு என்றால் அது கட்டாயம் போர்ச்சுகல் தான். மேலும் இந்நாட்டில் இருக்கும் குறைவான வரிக் கட்டமைப்பு பெரிய அளவிலான வர்த்தக வாய்ப்பை உருவாக்கியுள்ளது. ஏப்ரல் 21, 2020ல் போர்ச்சுகல் டிஜிட்டல் டிரான்ஸ்சிஷனல் ஆக்ஷன் பிளான் அறிமுகம் செய்தது, இத்திட்டம் மூலம் கிரிப்டோ டெக்னாலஜியை பரிசோதனை செய்ய ப்ரீ சோன் உருவாக்கப்பட்டு உள்ளது.