ஹார்லி டேவிட்சன் பைக் மீதான 50% வரி தளர்வு.. டிரம்பை குஷிப்படுத்தும் இந்தியா..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமெரிக்க அரசு சில மாதங்களுக்கு முன் தனது வர்த்தகச் சந்தை மற்றும் முதலீட்டுச் சந்தையை வலிமையாக்கும் விதத்தில் பல நாடுகளுக்கு வர்த்தக நெருக்கடியை உருவாக்கியது. இதில் முக்கியமாகச் சீனாவை முக்கிய இலக்காகக் கொண்டு அமெரிக்கா செயல்பட்டது. சீனாவை அடுத்து அதிக ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யும் நாடுகளைப் பட்டியலில் இந்தியா இருந்த நிலையில் இந்திய வர்த்தகச் சந்தைக்கும் பல வர்த்தகக் கட்டுப்பாடுகளை விதித்தது டொனால்டு டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு.

இதில் முக்கியமான ஒன்றாக அமெரிக்காவுடனான வர்த்தகச் செய்யும் நாடுகள் மத்தியில் சில நாடுகளுக்கு மட்டும் முன்னுரிமை அளிக்கும். இதை அமெரிக்கா Generalized System of Preferences திட்டம் என அழைக்கும். இத்திட்டத்தில் இருக்கும் நாடுகளுக்கு அமெரிக்கா வர்த்தகம் செய்யச் சில குறிப்பிடச் சலுகையை வழங்கி வந்தது.

 

இளைய தலைமுறையினர் கடன் வாங்குவது எதற்காகத் தெரியுமா..?

வரி விதிப்பு போட்டி

வரி விதிப்பு போட்டி

இந்த முக்கியமான திட்டத்தில் இருந்து கடந்த ஆண்டு அமெaரிக்கா இந்தியாவை நீக்கியது. இதனால் சுமார் 5.6 பில்லியன் டாலர் அளவிலான வர்த்தகப் பொருட்கள் மீதான வரி உயர்ந்தது. இதற்கு எதிராக இந்தியாவும் தனது பங்கிற்குச் சுமார் 12க்கும் அதிகமான அமெரிக்கப் பொருட்கள் வரியை விதித்தது.

இந்திய பயணம்

இந்திய பயணம்

இந்நிலையில் அடுத்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நிலையில், வர்த்தகப் பிரச்சனைகளைச் சரி செய்யும் நோக்கில் அமெரிக்கா மற்றும் இந்தியாவும் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

முக்கியமான தகவல்
 

முக்கியமான தகவல்

தற்போது நடந்து வரும் பேச்சுவார்த்தையில் சில முக்கியமான செய்திகள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்திற்குக் கிடைத்துள்ளது. இரு நாடுகளுக்கு மத்தியில் இருக்கும் வர்த்தகப் பிரச்சனையைச் சரி செய்ய வேண்டும் என முடிவு செய்துள்ள நிலையில் அமெரிக்கா, இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பாதாம், வால்நட் மற்றும் ஆப்பிள் மீது விதித்துள்ள விரியை நீக்க உறுதி அளித்துள்ளது,

இதேபோல் இந்தியா, அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் மருத்து உபகரணங்கள் மீது விதிக்கப்பட்ட அதீத வரியைக் கணிசமாகக் குறைக்க ஒப்புதல் அளித்துள்ளது.

6 பில்லியன் டாலர் வர்த்தகம்

6 பில்லியன் டாலர் வர்த்தகம்

அதுமட்டும் அல்லாமல் இந்தியா மீண்டும் அமெரிக்காவின் Generalized System of Preferences திட்டத்திற்கு வர வேண்டுமெனில் தற்போது செய்யப்படும் வர்த்தக அளவை விடவும் கூடுதலாக 5 முதல் 6 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டும் என நிபந்தனையும் வித்துள்ளதாகத் தெரிகிறது.

ஹார்லி டேவிட்சன்

ஹார்லி டேவிட்சன்

இதைச் சாத்தியப்படுத்தும் நோக்கில் அமெரிக்கத் தயாரிப்பான ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிள் மீது அமெரிக்காவிற்குப் பதிலடி கொடுக்கும் விதிமாக இந்திய அரசு விதித்த வரியில் 50 சதவீதத்தைக் குறைக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

பதப்படுத்தப்பட்ட இறைச்சியை

பதப்படுத்தப்பட்ட இறைச்சியை

இதுமட்டும் அல்லாமல் அமெரிக்கா, இந்தியாவை அதிகளவில் பதப்படுத்தப்பட்ட இறைச்சியை (frozen poultry products) இறக்குமதி செய்ய வலியுறுத்தியுள்ளது. இப்படிப் பல பொருட்களை இந்தியாவை அமெரிக்காவில் இருந்து வாங்க வற்புறுத்தி வருகிறது டிரம்ப் அரசு, இல்லையெனில் Generalized System of Preferences திட்டத்தில் சேர முடியாது எனவும் பயமுறுத்துகிறது.

சீனாவை மிரட்டும் அமெரிக்கா

சீனாவை மிரட்டும் அமெரிக்கா

சில நாட்களுக்கு முன் சீனாவையும் அமெரிக்கா இப்படித் தான் மிரட்டியது. இதைப்பற்றி முழுமையாகப் படிக்க இதைக் கிளிக் செய்யவும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India may scrap 50 import tax on harley davidson bikes

U.S. President Donald Trump cited trade barriers last year when removing India from its Generalized System of Preferences (GSP) programme that allowed zero tariffs on $5.6 billion of exports to the United States. In retaliation, India slapped higher tariffs on more than two dozens U.S. products.
Story first published: Monday, January 27, 2020, 7:28 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more