2 வருடத்தில் 2 கோடி வாடிக்கையாளர்கள்.. பட்டையைக் கிளப்பும் இந்தியா போஸ்ட் வங்கி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய தபால் துறை நாடு முழுவதும் சேவை அளித்து வரும் நிலையில், இதைச் சரியான முறையில் பயன்படுத்திச் சின்னச் சின்னக் கிராமங்களும் வங்கி சேவைகளைக் கொண்டு போய்ச் சேர்க்கும் விதமாக இந்திய போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி உருவாக்கப்பட்டது. இவ்வங்கி துவங்கப்பட்ட நாள் முதல் இந்திய கிராம மக்களுக்குப் பெரிய அளவில் உதவியதாகக் கூறப்படுகிறது.

 

இந்நிலையில் இந்திய போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி துவங்கி 2 மாத காலத்தில் 2 கோடி வாடிக்கையாளர்களைச் சேர்த்துள்ளது.

2 வருடத்தில் 2 கோடி வாடிக்கையாளர்கள்.. பட்டையைக் கிளப்பும் இந்தியா போஸ்ட் வங்கி..!

இந்திய போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி

போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி வெளியிட்ட அறிக்கையின் படி கடந்த வருடம் ஆகஸ்ட் மாத காலத்தில் முதல் 1 கோடி வாடிக்கையாளர்களைப் பெற்ற நிலையில், அடுத்த 1 கோடி வாடிக்கையாளர்களை வெறும் 5 மாத காலத்தில் பெற்றுள்ளது. தற்போது 33 லட்ச கணக்குகளை ஒவ்வொரு காலாண்டுக்கும் உருவாக்கி நிர்வாகம் செய்து வருகிறது.a

1.36 வங்கி கிளைகள்

இந்திய போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி தற்போது இந்தியா முழுவதும் 1.36 லட்சம் வங்கி கிளைகளைக் கொண்டு மிகப்பெரிய அளவில் வர்த்தகம் செய்து வருகிறது. இதுமட்டும் அல்லாமல் சுமார் 1.9 லட்சம் தபால்காரர்கள் வங்கி சேவைகளை வீட்டு வாசலுக்குக் கொண்டு சேர்க்கும் வகையில் இவ்வங்கி தனது வர்த்தகத் தளத்தை உருவாக்கியுள்ளது. ஆதார் இணைக்கப்பட்ட வங்கி கணக்கை காட்டினால் போதும் அனைத்து விதமான வங்கி சேவைகளை வீட்டிற்கே கொண்டு வந்து சேர்க்க முடியும்.

மாற்றம்

இந்தியா முழுவதும் இந்திய போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி தனது சேவையைப் பிற தபால் நிலையங்களுக்கும் விரிவாக்கம் செய்து வரும் நிலையில், இது இந்திய வங்கி மற்றும் வங்கியியல் சேவை துறையில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வர உள்ளதாகத் தெரிகிறது.

மின்னணு பரிமாற்ற முறை

இதுமட்டும் அல்லாமல் சந்தையில் இருக்கும் முன்னணி தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளைப் போல இந்திய போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியும் பல்வேறு டிஜிட்டல் பணப் பரிமாற்ற சேவைகளை வழங்கி வருகிறது. அதிலும் குறிப்பாகத் தற்போது பேடிஎம், அமேசான் பே, கூகிள் போன்ற நிறுவனங்கள் கொடுப்பது போல் QR Code-ஐ ஸ்கேன் செய்து பேமெண்ட் செய்யும் வசதியை கொடுத்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India Post Payments Bank crosses 2 cr customer mark

India Post Payments Bank (IPPB) has garnered over two crore customers in less than two years of being operational. According to a statement, IPPB had reached the landmark of one crore customers in August last year - its first year of operations. The next 1 crore customers have been acquired and on-boarded in just five months.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X