விஸ்வரூபம் எடுக்கும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய கிராமங்கள் மற்றும் சிறு நகரங்களில் அதிகளவிலான வாடிக்கையாளர்களையும், வர்த்தகத்தையும் வைத்துள்ள இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி தொடர்ந்து தனது சேவைகளை விரிவாக்கம் செய்து வருகிறது.

 

மத்திய அரசின் பல முதலீட்டுச் சேவைகளை மிகப்பெரிய அளவில் மக்களுக்கு அளித்து வரும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி தற்போது வீட்டுக் கடன் சேவையில் பெரிய அளவிலான வர்த்தகத்தைப் பெற வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது.

மத்திய அரசு

மத்திய அரசு

இந்தியாவில்அனைத்துத் தரப்பு மக்களுக்கும் வங்கி சேவைகள் கிடைக்க வேண்டும் என்பதை மத்திய அரசு முக்கிய இலக்காகக் கொண்டு உள்ள நிலையில் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி இலக்கை அடையப் பெரிய அளவில் உதவி செய்கிறது.

இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி

இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி

இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி தற்போது வங்கி சேவைகள் அளிக்க முடியாத இடங்களுக்குச் சேவை அளிக்க முடிவு செய்துள்ளது. இதற்காக இந்தியா முழுவதும் 650 வங்கி கிளைகளும், 1.36 லட்சம் வங்கி சேவை மையங்கள் மூலம் முதலீட்டு மற்றும் கடன் சேவைகளை அளித்து வருகிறது.

ஹெச்டிஎப்சி கூட்டணி
 

ஹெச்டிஎப்சி கூட்டணி

இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி தனது வீட்டுக் கடன் சேவையை மேம்படுத்த ஹெச்டிஎப்சி உடன் கூட்டணி சேர்ந்து நாடு முழுவதும் 4.7 கோடி வாடிக்கையாளர்களுக்கு ஹோம் லோன் சேவைகளை அளிக்க உள்ளது.

1.9 லட்சம் ஊழியர்கள்

1.9 லட்சம் ஊழியர்கள்

இக்கூட்டணி மூலம் ஹெச்டிஎப்சி-யின் வீட்டுக் கடன் சேவைகளை இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியின் 1.9 லட்சம் போஸ்ட்மேன் மற்றும் கிராமின் தக் சேவைக்ஸ் மூலம் வங்கி சேவை பெற முடியாத மக்களுக்கு வங்கி சேவை இல்லாத இடத்திற்கு வீட்டுக் கடன் சேவை அளிக்கப்பட உள்ளது.

ஹெச்டிஎப்சி

ஹெச்டிஎப்சி

இக்கூட்டணியில் விண்ணப்பதாரரின் அனைத்து தகுதி, ஆவணச் சரிபார்ப்பு, கடன் கொடுத்தல், கடன் வசூலித்தல் ஆகிய அனைத்தையும் ஹெச்டிஎப்சி தான் செய்யும் ஆனால் வர்த்தகத்தை உருவாக்குவதிலும், வங்கி சேவை கிடைக்காத மக்களுக்குக் கடன் பெற்று தரும் முக்கியமான பணியை இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியும் அதன் அதகாரிகளும் செய்ய உள்ளனர்.

எல்ஐசி

எல்ஐசி

இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி இதேபோன்று சில மாதங்களுக்கு முன்பு எல்ஐசி உடனான கூட்டணியில் வீட்டுக் கடன் சேவையை அளித்து. இந்தக் கூட்டணி மூலம் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கிக்கு வீட்டுக் கடன் நிர்வாகம் செய்யும் அனுபவம் கிடைக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India Post Payments Bank's new Home Loan offers with HDFC

India Post Payments Bank's new Home Loan offer with HDFC
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X