சக்தி வாய்ந்த ஆசிய நாடுகளில் இந்தியா 4வது இடம்.. நேபாளம், இலங்கை முன்னிலை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சமீபத்தில் உலகிலேயே மிகப்பெரிய வல்லரசு நாடுகள் பட்டியலில் நீண்ட காலமாக முதல் இடத்தில் இருந்த அமெரிக்காவை பின்னுக்குத்தள்ளி சீனா முதல் இடத்திற்கு முன்னேறியது.

 

கொரோனா தொற்றுக் காலத்தில் அனைத்து நாடுகளின் வர்த்தகமும் பாதிக்கப்பட்ட நிலையில் சீனா கொரோனா தொற்றுப் பாதிப்பில் இருந்து வேகமாக மீண்டு வந்த நிலையில் உற்பத்தியை அதிகரித்துப் பெரிய அளவிலான வர்த்தகம் மற்றும் ஏற்றுமதியைப் பதிவு செய்து சீனா மிகப்பெரிய உச்சத்தை அடைந்துள்ளது.

இந்நிலையில் இன்று லோவி இன்ஸ்டிடியூட், ஆசியா பவர் இன்டெக்ஸ் வெளியிட்டு இந்தியாவுக்கும், இந்தியர்களுக்கும் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

 லோவி இன்ஸ்டிடியூட்

லோவி இன்ஸ்டிடியூட்

லோவி இன்ஸ்டிடியூட் வெளியிட்டுள்ள ஆசியா பவர் இன்டெக்ஸ் பட்டியலில் வழக்கம்போல் சீனா முதல் இடத்தில் இருக்கும் நிலையில், சீனாவுடன் போட்டிப்போடும் இந்தியா 4வது இடத்திற்குத் தள்ளப்பட்டு நேபாளம், இலங்கை முன்னேறியுள்ளது. 2021ல் இந்தியாவில் மதிப்பீடு பெரிய அளவில் சரிந்துள்ளது.

 ஆசியா பவர் இன்டெக்ஸ்

ஆசியா பவர் இன்டெக்ஸ்

லோவி இன்ஸ்டிடியூட் வெளியிட்டுள்ள ஆசியா பவர் இன்டெக்ஸ் பட்டியலில் இந்தியாவின் மதிப்பீட்டு 2020ஐ ஒப்பிடுகையில் 2 புள்ளிகள் சரிந்து 2021ல் 4வது இடத்திற்குத் தள்ளப்பட்டு உள்ளது. ஆசியாவில் இந்தியாவுடன் சேர்ந்து சுமார் 18 நாடுகளின் மதிப்பீட்டு 2021ஆம் ஆண்டு லோவி இன்ஸ்டிடியூட்-ன் ஆசியா பவர் இன்டெக்ஸ் பட்டியலில் குறைந்துள்ளது.

இந்தியா
 

இந்தியா

ஆனால் எதிர்கால வளர்ச்சி அளவீடுகளை பொருத்த வரையில் அமெரிக்கா, சீனா-விற்கு அடுத்தபடியாக இந்தியா தான் உலகளவில் உள்ளது. லோவி இன்ஸ்டிடியூட் 2030ஆம் ஆண்டுப் பொருளாதார வளர்ச்சி அளவீடுகள் கணிப்பில் இது வெளியாகியுள்ளது.

 பாதுகாப்பு - பொருளாதார வளர்ச்சி

பாதுகாப்பு - பொருளாதார வளர்ச்சி

இந்தியா பாதுகாப்புக் கூட்டணியில் 7வது இடத்தில் இருந்தாலும், பொருளாதார வளர்ச்சி கூட்டணியில் 8வது இடத்தில் உள்ளது. இவ்விரண்டு காரணியிலும் இந்தியா இரு திசைகளில் பயணிக்கத் துவங்கியுள்ளது என லோவி இன்ஸ்டிடியூட் தெரிவித்துள்ளது.

 கொரோனா தொற்று

கொரோனா தொற்று

2020 முதல் 2021 வரையில் இந்தியாவில் கொரோனா தொற்றுக் காரணமாக அடுத்தடுத்து லாக்டவுன், வர்த்தகப் பாதிப்பு, உற்பத்தி பாதிப்பு எனப் பல பிரச்சனைகள் இருக்கும் வேளையில், சீனா உடனான எல்லை பிரச்சனை அதன் மூலம் ஏற்பட்ட பதற்றம் ஆகியவை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனாலேயே இந்தியா 4வது இடத்திற்குத் தள்ளப்பட்டு உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India ranked 4th lower than Nepal and Sri Lanka in Lowy Institute Asia Power Index

India ranked 4th lower than Nepal and Sri Lanka in Lowy Institute Asia Power Index சக்தி வாய்ந்த ஆசிய நாடுகளில் இந்தியா 4வது இடம்.. நேபாளம், இலங்கை முன்னிலை..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X