2.7 டிரில்லியன் டாலர் மதிப்பிலான இந்திய பங்குச்சந்தை புதன்கிழமை காலை வர்த்தகம் துவங்கும் போதே லாபகரமாக துவங்கிய நிலையில் முதலீட்டாளர்கள் சாதகமான அமைந்தது. இந்நிலையில் யாரும் எதிர்பார்காத வகையில் சரியாக 10.15 மணி அளவில் நிப்டி குறியீடு 14,820 புள்ளிகளில் அப்படியே நின்றுபோனது.
நிப்டி, பேங்க் நிப்டி உட்பட அனைத்து நிஃப்டி குறியீடுகளும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடங்கிய நிலையில் தேசிய பங்குச்சந்தை வர்த்தக பரிமாற்றங்களை கணக்கிட முடியாமல் தடைபெற்றது. இதேவேளையில் மும்பை பங்குச்சந்தை எவ்விதமான தடையும் இல்லாமல் இயங்கியது குறிப்பிடத்தக்கது.
இதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.
தேசிய பங்குச்சந்தை பல டெலிகாம் இணைப்புகளுடன் இயங்கி வருகிறது, இந்நிலையில் என்எஸ்ஈ-க்கு டெலிகாம் சேவை அளிக்கும் இரு நிறுனங்களின் இணைப்புகளும் ஓரே நேரத்தில் முடங்கியது தான் புதன்கிழமை வர்த்தக பாதிப்பிற்கு முக்கிய காரணமாக உள்ளது.
இந்நிலையில் புதன்கிழமை தேசிய பங்குச்சந்தை இன்ஜினியர்கள் லீஸ் லைனில் தரவுகள் பரிமாற்றம் செய்யப்படாமல் இருப்பதை கண்டுப்பிடித்த நிலையில் இதற்கு காரணம் டெலிகாம் இணைப்பில் ஏற்பட்ட தடை தான் என உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் வர்த்தகம் தடைபெற்ற 1 மணிநேரத்தில் வர்த்தகம் முழுமையாக முடக்கப்பட்டு 3.45 மணிக்கு மீண்டும் வர்த்தகம் துவங்கப்படும். தேசிய பங்குச்சந்தைக்கு டெலிகாம் இணைப்பை அளிக்கும் பார்தி ஏர்டெல், டாடா கம்யூனிகேஷன்ஸ் இணைப்புகள் ஓரே நேரத்தில் முடங்கிய காரணத்தால் தான் வர்த்தகம் முடங்கியுள்ளது.
இந்நிலையில் பங்குச்சந்தை வர்த்தக கட்டுப்பாட்டு ஆணையமான செபி, வர்த்தக முடக்கம் குறித்து விரிவாக ஆய்வறிக்கையை தேசிய பங்குச்சந்தையிடம் கோரியுள்ள நிலையில், வெள்ளிக்கிழமைக்குள் இந்த அறிக்கையை சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.