பண்டிகை கால விற்பனை அத்தனை சிறப்பாக இல்லையே..! பேங்க் ஆஃப் அமெரிக்கா கருத்து..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவைப் பொருத்தவரை தீபாவளி பண்டிகை காலங்களில் வழக்கமாகவே அதிகம் வியாபாரம் நடக்கும். சொல்லப் போனால் இந்தியாவில் மிகப் பெரிய பண்டிகை கால வியாபாரம் என்றால் அது தீபாவளி தான்.

 

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை காலங்களில், வழக்கமாக நடக்க வேண்டிய வியாபாரம் அல்லது எதிர்பார்த்த அளவுக்கு கூட வியாபாரம் நடக்க வில்லை என்கிறது பேங்க் ஆஃப் அமெரிக்கா மேரில் லின்ச் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை.

பண்டிகை கால விற்பனை அத்தனை சிறப்பாக இல்லையே..! பேங்க் ஆஃப் அமெரிக்கா கருத்து..!

பேங்க் ஆப் அமெரிக்கா மெரில் லின்ச் நிறுவனத்தின் சார்பாக மும்பையில் சுமார் 120 கடைகளில் தீபாவளி வியாபாரம் குறித்து சர்வே எடுத்து இருக்கிறார்கள். கடைக்கு வருபவர்களின் எண்ணிக்கை சுமாராக 90 சதவிகிதம் குறைந்து விட்டதாக கடைக்காரர்கள் சர்வேயில் கூறி எல்லோருக்கும் அதிர்ச்சி கொடுத்து இருக்கிறார்கள்.

20,000 ஐடி ஊழியர்கள் வேலைக்கு ஆப்பு! வீட்டுக்கு அனுப்ப தயாராகும் ஐடி கம்பெனிகள்!

அதாவது கடந்த ஆண்டு தீபாவளி காலத்தில் கடைகளுக்கு 100 பேர் வந்திருக்கிறார்கள் என்றால் இந்த ஆண்டு அதே தீபாவளி பண்டிகை காலத்தில், கடைகளுக்கு வெறும் பத்துப் பேர் தான் வந்திருக்கிறார்கள் என வருத்தப்பட்டு இருக்கிறார்கள் மும்பை வியாபாரிகள்.

அவ்வளவு ஏன் தீபாவளி போன்ற மிகப்பெரிய பண்டிகை காலங்களில் கூட, வியாபாரம் இல்லாமல் வழக்கமான நேரங்களில் கடையை அடைத்து விட்டு சென்றவர்களும் இருக்கிறார்களாம்.

மும்பை மட்டுமே இந்தியா அல்ல, அதே நேரத்தில் 120 கடைகள் என்பது மிகப் பெரிய சர்வே சாம்பில் எண்ணிக்கையும் இல்லை. ஆனால் நாங்கள் எடுத்திருக்கும் இந்த சர்வே இந்தியாவின் மிகப்பெரிய பண்டிகையான தீபாவளி காலத்தில், என்ன வியாபாரம் ஆகி இருக்கிறது என்பதை பதிவு செய்வதாகவே இருக்கிறது.

இந்திய பொருளாதாரம் ஒரு பெரிய மந்த நிலையை எதிர் கொண்டு இருந்தது. அப்போது தீபாவளி பண்டிகை கால விற்பனை, இந்த மந்த நிலையை சரி செய்து விடும் என வியாபாரிகள் நம்பிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அது நடக்கவில்லை என்பதை பர்ச்சேஸ் மேனேஜர் சர்வே தெளிவாக காட்டுகிறது.

 

கடந்த அக்டோபர் 2019க்கு வெளியான பர்ச்சேஸ் மேனேஜர் சர்வே இந்தியாவில் இன்னும் போதுமான டிமாண்ட் வரவில்லை என்பதை தெளிவாக காட்டுகிறது. ஆக பொருளாதாரத்தில் தேவை அதிகரிக்காமல் நுகர்வு எப்படி அதிகரிக்கும் என்கிற கேள்வி தானாகவே நமக்குள் எழுந்து விடுகிறது.

பேங்க் ஆஃப் அமெரிக்கா மேரில் லின்ச் அறிக்கையில், தீபாவளி பண்டிகை காலத்தில், 70 சதவிகித வியாபாரிகள் கடந்த ஆண்டை விட குறைவான வருவாயையோ அல்லது எதிர்பார்த்ததை விட குறைவான வருவாயையே ஈட்டி இருக்கிறார்களாம். 35 சதவிகித வியாபாரிகள் இந்த ஆண்டு தீபாவளி வியாபாரம் பரவாயில்லை எனச் சொல்லி இருக்கிறார்கள்.

குறிப்பாக ஆன்லைன் வியாபாரத்தால் தங்கள் வியாபாரம் அடி வாங்கிக் கொண்டிருப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள். வியாபாரிகள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India’s biggest shopping season Diwali sales were not that good

Bank of america Merrill lynch said that the India’s biggest shopping season Diwali sales were not that good.
Story first published: Wednesday, November 6, 2019, 17:52 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X