இந்தியாவில் கச்சா எண்ணெய் உற்பத்தி 5% வீழ்ச்சி.. இயற்கை எரிவாயு உற்பத்தியும் வீழ்ச்சி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : பொதுவாக கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவுக்கு நாம் அண்டை நாடுகளை சார்ந்தே இருக்கிறோம். சொல்லப் போனால் அங்கிருந்து இறக்குமதி குறைந்தால், இங்கு விலையேற்றம் இருக்கும்.

 

அதிலும் எண்ணெய் உற்பத்தி நாடுகளில் ஏதேனும் பிரச்சனை என்றால் இந்தியாவில் விலை தீயாய் பற்றிக் கொண்டு எரியும். ஏனெனில் இந்தியாவில் கால் சதவிகிதம் உற்பத்தி கூட சரிவர இல்லாத நிலையில், நாம் அண்டை நாடுகளையே கையேந்தி நிறுகும் சூழ்நிலை நிலவி வருகிறது.

இந்தியாவில் கச்சா எண்ணெய் உற்பத்தி 5% வீழ்ச்சி.. இயற்கை எரிவாயு உற்பத்தியும் வீழ்ச்சி..!

படிப்பது 7ம் வகுப்பு.. வேலை செய்வது ஐடி நிறுவனத்தில்.. அதுவும் டேட்டா சயிண்டிஸ்டாக.. !

இப்படியொரு சூழ்நிலையிலும் கூட ஏதோ, சுமார் கால் பங்கு உற்பத்தி செய்யும் எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் கூட, கடந்த அக்டோபரில் உற்பத்தி குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளன. குறிப்பாக கச்சா எண்ணெய் உற்பத்தி 5.09 சதவிகிதம் குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளன,. இதே இயற்கை எரிவாயு உற்பத்தியும் மிக குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இது முந்தைய ஆண்டு இதே கால பகுதியுடன் ஒப்பிடும்போது ஓஎன்ஜிசி மற்றும் இந்தியன் ஆயில் நிறுவனங்கள் தங்களது இலக்கை தவற விட்டதாக, கடந்த செவ்வாய்கிழமையன்று வெளியான அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, கடந்த அக்டோபர் 2019ல் கச்சா எண்ணெய் உற்பத்தியானது 2,738.44 ஆயிரம் மெட்ரிக் டன் என தெரிவித்துள்ளது. இது மாத இலக்கை விட 7.21 சதவிகிதம் குறைவு என்றும் தெரிவித்துள்ளது. இதே கடந்த ஆண்டு இதே அக்டோபருடன் ஒப்பிடும்போது 5.09 சதவிகிதம் குறைவாகவும் இருந்தது.

கடந்த ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலத்தில், ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் உற்பத்தி 19,110.46 TMT ஆக இருந்தது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் முறையே 4.91 சதவிகிதமாகவும், இதே நிர்ணயிக்கப்பட்ட இலக்கினை விட 5.3 சதவிகிதம் குறைவாகவும் இருந்தது.

 

இதே யூனிட் வாரியாக ஆயில் அன்ட் நேச்சுரல் கேஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் 2.97 சதவிகிதம் கச்சா எண்ணெய் உற்பத்தி குறைந்து 1712.93TMT ஆக இருந்ததாக கூறியுள்ளது. இதுவே ஆயில் இந்தியா லிமிடெட் ஆயில் உற்பத்தி 3.66% குறைந்து 272.57 TMT ஆக உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதே இயற்கை எரிவாயு உற்பத்தியில் ஓ.என்.ஜி.சி 7.39 சதவிகிதம் குறைந்து 1954.35 MMSCM ஆக குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India’s crude oil production down 5% in last October, and Ng production declines 5.6%

India’s crude oil production down 5% in last October, and Ng production declines 5.6%. ONGC reported oil production down 2.97%, and oil india said 3.66% down in oil production to 272.57TMT.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X