இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்கள் மீதான மக்களின் மோகம் மிகப்பெரிய அளவில் அதிகரித்து வரும் நிலையில் ஏப்ரல் மாதம் முதல் எலக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் செப்டம்பர் மாதம் உச்சத்தை அடைந்துள்ளது.
ஆனால் ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்டு உள்ள சிப் தட்டுப்பாடு இந்தியாவில் மெல்ல மெல்ல அதிகரித்து வரும் எலக்ட்ரிக் வாகன விற்பனை அதிகளவில் பாதித்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் மத்திய அரசும் எலக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாட்டுக்குப் பெரிய அளவிலான ஊக்குவிப்பு இன்னும் வெளிப்படையாக அளிக்காத நிலையில் இத்துறையின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது.
எலக்ட்ரிக் கார் வாங்குவோருக்கு ஜாக்பாட்.. நித்தி அயோக் & உலக வங்கியின் புதிய திட்டம்..!

1.66 சதவீதம் மட்டுமே
நடப்பு நிதியாண்டில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு உள்ளது 2 கோடி வாகனங்களில் 1,21,900 மட்டுமே எலக்ட்ரிக் வாகனங்கள். மொத்த விற்பனையில் இது வெறும் 1.66 சதவீதம் மட்டுமே என டெல்லியை சேர்ந்த திங்க் டேங்க் அமைப்பான CEEW தெரிவித்துள்ளது.

எலக்ட்ரிக் இரு சக்கர வாகனங்கள்
இந்தியாவில் தற்போது எலக்ட்ரிக் இரு சக்கர வாகனங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் பெரிய அளவில் விரிவாக்கம் அடைந்து வர்த்தகத்தைப் பெற்றுள்ள நிலையில், கார் மற்றும் கனரக எலக்ட்ரிக் வாகனங்கள் தயாரிப்பு அதிகரிக்கப்பட்டாலும் சந்தையில் விற்பனை எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.

மோடி அரசு
இந்த நிலையை மாற்ற மோடி தலைமையிலான மத்திய அரசு இந்தியாவில் எலக்ட்ரிக் கார் தயாரிப்பை அதிகரிக்க 3.5 பில்லியன் டாலர் மதிப்பிலான உற்பத்தி ஊக்குவிப்புத் திட்டத்தை வெளியிடத் திட்டமிட்டு வருகிறது. ஆனால் இதுகுறித்து முக்கியமான அறிவிப்பை இன்னும் வெளியிடவில்லை.

எலக்ட்ரிக் மற்றும் ஹைட்ரஜன் கார்
இந்தியாவில் எலக்ட்ரிக் மற்றும் ஹைட்ரஜன் வாயு மூலம் இயக்கும் கார் உற்பத்தியை ஊக்குவிக்க மிக முக்கியக் காரணம் கச்சா எண்ணெய் விலை. இந்தியா சுமார் 24.2 பில்லியன் டாலர் மதிப்பிற்குக் கச்சா எண்ணெய்-ஐ இறக்குமதி செய்து வருகிறது. இதைக் குறைக்கவே எலக்ட்ரிக் மற்றும் ஹைர்டரஜன் கார் உற்பத்தியை அதிகரிக்கத் திட்டமிட்டு வருகிறது.

COP26 மாநாடு
மேலும் உலகிலேயே 3வது பெரிய கார்பன் வெளியேற்று நாடாக இந்தியா இருக்கும் நிலையில் தற்போது நடக்கும் COP26 மாநாட்டில் இந்தியா முக்கிய பங்குவகிக்கிறது. இதேவேளையில் இந்தியாவில் 2030க்குள் அதிகப்படியான எலக்ட்ரிக் வாகனங்களைப் பயன்படுத்த இலக்கு நிர்ணயம் செய்துள்ளார்.

எலக்ட்ரிக் வாகனங்களின் விலை
இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்கள் தயாரிப்பை அதிகரிக்க அனைத்து நிறுவனங்களும் தயாராக உள்ள நிலையில் மத்திய அரசின் நிலையான திட்டத்திற்காகக் காத்திருக்கின்றனர். இதேபோல் இந்தியச் சந்தைக்கு எலக்ட்ரிக் வாகனங்களின் விலை சற்று அதிகமாக இருக்கும் காரணத்தாலும் அதன் விற்பனை மந்தமாக உள்ளது.