அதிகரிக்கும் நடப்பு கணக்கு பற்றாக்குறை.. வருவாயை பெருக்க என்ன வழி.. திணறும் மத்திய அரசு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: நாட்டில் பொருளாதாரம் மந்தம் தலைவிரித்தாடி வரும் நிலையில், ஒரு புறம் நடப்பு கணக்கு பற்றாக்குறையும் அதிகரித்து வருவது கவலையளிக்கும் விதமாகவே உள்ளது. இந்த நிலையில் நாட்டின் நிதிப்பற்றாக்குறையானது 2019 - 20 பட்ஜெட் மதிப்பீட்டில் மதிப்பிட்ட 114.8 சதவிகிதத்தை தொட்டுள்ளது.

 

இது நவம்பருடன் முடிவடைந்த காலத்தில் 8.07 லட்சம் கோடி ரூபாயாகவும் அதிகரித்துள்ளதாகவும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாட்டின் வரவுக்கும் செலவுக்கும் இடையே இருக்கும் இடைப்பட்ட விகிதத்தினை தான் நடப்பு கணக்கு பற்றாக்குறை என்று கூறுகிறோம். இந்த பற்றாக்குறையானது அதிகரித்து வரும் நிலையில், அரசு புதிய திட்டங்களையும் அறிவித்து வருகின்றது.

நடப்பு கணக்கு பற்றாக்குறை

நடப்பு கணக்கு பற்றாக்குறை

இந்த நவம்பர் மாத இறுதி நிலவரப்படி, நடப்பு கணக்கு பற்றாக்குறையானது 8,07,834 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக கன்ட்ரோலர் ஜெனரல் ஆப் அக்கவுன்ட்ஸ் CGA தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நடப்பு கணக்கு பற்றாக்குறை விகிதமானது கடந்த 2018 - 19 பட்ஜெட் மதிப்பீட்டின் படி 114.8 சதவிகிதமாக இருந்தது. ஆக அரசின் இந்த இலக்கினை வெற்றிகராக தொட்டுள்ளது இந்த பற்றாக்குறை.

மத்திய அரசு இலக்கு

மத்திய அரசு இலக்கு

நடப்பு மாதத்தில் அதிகரித்திருந்தாலும், அடுத்து வரும் மாதங்களில் இது சரி செய்யப்படலாம் என்றும் நம்பப்படுகிறது. இந்த நிலையில் நடப்பு நிதியாண்டிற்கான நடப்பு கணக்கு நிதிப் பற்றாக்குறையை 7.03 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என அரசு மதிப்பிட்டுள்ளது. மேலும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.3 சதவிகிதமாக குறைக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது. அரசின் இந்த கனவு பலிக்குமா? நோக்கம் நிறைவேறுமா என்றும் பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.

வரி குறைப்பு தாக்கத்தை ஏற்படுத்தும்
 

வரி குறைப்பு தாக்கத்தை ஏற்படுத்தும்

கடந்த செப்டம்பரில் நிலவி வரும் மந்த நிலையை போக்கும் வகையில், மத்திய அரசு கார்ப்பரேட் வரி விகிதத்தினை குறைத்தது. இதன் விளைவாக அரசின் வருவாயில் 1.45 லட்சம் கோடி ரூபாய் அடி வாங்கும் எனவும், இதனால் நடப்பு கணக்கு பற்றாக்குறை இன்னும் அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டது. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியைக் அதிகரிக்கும் நோக்கில் மத்திய அரசானது, முதலீட்டையும் ஊக்குவிக்கும் வகையில் மேற்கூறியது போல் பல வரி சலுகைகளை செய்தது.

வளர்ச்சி படுவீழ்ச்சி

வளர்ச்சி படுவீழ்ச்சி

அரசு வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வந்த போதிலும், கடந்த ஜூன் காலாண்டில் ஜிடிபி 5 சதவிகிதமாகவும், இதுவே செப்டம்பர் காலாண்டில் 4.5 சதவிகிதமாகவும் வீழ்ச்சி கண்டுள்ளது. இது ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவு படு வீழ்ச்சியாகும். நிலவி வரும் மந்த நிலையை போக்க அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத்த போதிலும், இந்த நடவடிக்கைகளால் ஜிஎஸ்டி வசூலும் சரி, கார்ப்பரேட் வரி வசூலும் குறைந்துள்ளது. மேலும் வரும் காலங்களிலும் இது குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

செலவு வரம்பில் திருத்தம்

செலவு வரம்பில் திருத்தம்

இத்தகைய நடவடிக்கைகளினால் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ள அரசாங்கம், நடப்பு ஜனவரி - மார்ச் காலாண்டில் செலவு வரம்புகளை திருத்த நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. மேலும் அரசு ஜனவரி - மார்ச் காலாண்டில் செலவுகளை கட்டுப்படுத்துமாறும், அதிலும் பட்ஜெட் மதிப்பீட்டில் உள்ளதை விட 25 சதவிகிதம் குறைக்குமாறும் அனைத்து துறைகளையும் கேட்டுள்ளது.

அரசுக்கு வருவாய்

அரசுக்கு வருவாய்

அரசு வெளியிட்ட உத்தியோகபூர்வ அறிக்கையின் படி, நவம்பர் 2019 வரையிலான காலத்தில் 10,12,223 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதில் 7,50,614 கோடி ரூபாய் வரி வருவாயும், 2,32,600 கோடி ரூபாய் வரி அல்லாத வருவாயும், 29,009 கோடி ரூபாய் கடன் அல்லாத மூலதனம் என்றும் கூறப்படுகிறது.

மற்ற வருவாய்

மற்ற வருவாய்

இந்த கடன் அல்லாத மூலதனம் என்று கூறப்படும் 29,009 கோடி ரூபாய் கடன்கள் மீட்கப்பட்டது மற்றும் அரசு நிறுவனங்களின் பங்குகளை விற்றதன் மூலம் கிடைத்த முதலீட்டு வருமானம் கூறப்படுகிறது. இந்த நிலையில் 2019 - 2020 ஆண்டிற்கான வருவாய் இலக்கும் 19.62 லட்சம் கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மாநில அரசுக்கு வருவாய்

மாநில அரசுக்கு வருவாய்

இந்த வரி வருவாயில் மத்திய அரசு 4,21,850 கோடி ரூபாய் வரி வருவாயை மாநில அரசுகளுடன் பகிர்ந்து கொண்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. இது முந்தைய ஆண்டை விட 10,113 கோடி ரூபாய் குறைவும் என்றும் கூறப்படுகிறது. தொடர்ந்து மா நில அரசுகள் தங்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய நிலுவையை கொடுக்க வேண்டி கூறி வரும் நிலையில், இனி இதெல்லாம் எப்படி கொடுக்க முடியும். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் என்ன செய்ய போகிறார் என்று பொறுத்திருந்து பார்ப்பதை தவிர வேறு வழியில்லை.

செலவு இலக்கு நிர்ணயம்

செலவு இலக்கு நிர்ணயம்

இந்த நிலையில் அரசு 2019 - 2020ம் ஆண்டிற்கான மொத்த செலவினங்களை 7.86 லட்சம் கோடி ரூபாயாக நிர்ணயித்துள்ளது. எப்படி எனினும் நடப்பு நிதியாண்டின் இறுதியில் கணிசமான அளவு ஈடு செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. ஒரு புறம் பற்றாக்குறை அதிகரித்து வரும் இந்த நிலையில், மறுபுறம் அரசு தொடர்பு புதிய திட்டங்களையும் அறிவித்து வருகிறது.

நிதி எப்படி கிடைக்கும்?

நிதி எப்படி கிடைக்கும்?

வரவு செலவு கணக்கில் பற்றாக்குறை நிலவி வரும் வகையில், அரசு தொடர்ந்து பல புதிய திட்டங்களை அறிவித்து வருகிறது. அதிலும் குறிப்பாக செவ்வாய்கிழமையன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த நிர்மலா சீதாராமன், அடுத்த ஐந்து ஆண்டுகளில் உள்கட்டமைப்பு துறையில் 102 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என்றும் கூறியுள்ளார். வருவாய் வருவதற்கான இடமே தெரியாத போதிலும், அரசு இத்தகையதொரு திட்டத்தினை தீட்டியிருப்பது, மத்திய அரசின் நம்பிக்கையை இது வெளி காட்டுகிறது.

வருவாயை பெருக்க என்ன செய்ய போகிறது அரசு?

வருவாயை பெருக்க என்ன செய்ய போகிறது அரசு?

எனினும் மத்திய அரசு கூறுவது போல் இந்த திட்டங்கள் நிறைவடையும் போது இந்தியா உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகளை கொண்டிருக்கும். இதனால் முதலீடுகள் அதிகரிக்கும். ஆனால் இதெல்லாம் நீண்ட கால நோக்கில் சாத்தியமான விஷயமாக இருந்தாலும் கூட, குறுகிய காலத்தில் அரசு வருவாயை அதிகரிக்க என்ன செய்ய போகிறது. வழக்கம் போல வரியை உயர்த்துமா? அல்லது செலவினை குறைக்குமா? என்ன செய்யப் போகிறது மத்திய அரசு. இதெற்கெல்லாம் வரவிருக்கும் பட்ஜெட் தான் பதில் கூற முடியும் என்றாலும்., அரசு விரைந்து இன்னும் பல ஊக்குவிப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே இங்கு அனைவரின் வேண்டுகோள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India’s fiscal deficit hits 115% of November end in 2019 – 2020

India’s fiscal deficit hits 115% of November end in 2019 – 2020, the fiscal deficit was at Rs.8,07,834 crore as on November 30,2019, according to data released by CGA.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X