இந்தியாவின் மொத்த ஜிடிபி விகிதம் நடப்பு நிதியாண்டில் 9.5% வளர்ச்சி காணலாம் என எஸ்பிஐ ஆய்வு மதிப்பிட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் 8.4% ஆக வளர்ச்சி கண்டுள்ள நிலையில், எஸ்பிஐயின் இந்த கணிப்பு வந்துள்ளது. இதே ஜூன் காலாண்டில் 20.1% ஆக வளர்ச்சி கண்டிருந்தது.
கடந்த அக்டோபர் மாதத்தில் நடந்த ஆர்பிஐ மானிட்டரி கூட்டத்தில், நடப்பு நிதியாண்டின் ரியல் ஜிடிபி விகிதத்தினை 9.5% ஆக முன்னர் கணித்திருந்தை அப்படியே வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் எந்த மாற்றமும் செயப்படவில்லை.

ஜிடிபி எதிர்பார்ப்பு
இதே இரண்டாவது காலாண்டில் 7.9% ஆகவும், மூன்றாவது காலாண்டில் 6.8% ஆகவும், நான்காவது காலாண்டில் 6.1% ஆகவும் கணித்திருந்தது.
மூன்றாவது மற்றும் நான்காவது காலாண்டில் வளர்ச்சி விகிதம் சாதகமாக இருக்கும் பட்சத்தில், ரிசர்வ் வங்கியின் கணிப்பினை விட ரியல் ஜிடிபி விகிதமானது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கபடுவதாக எஸ்பிஐ சுட்டிக் காட்டியுள்ளது.

ரியல் GVA
ரியல் ஜிடிபி விகிதமானது 10% அருகில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சுரங்கம் மற்றும் குவாரி, பொது நிர்வாகம், மற்ற சேவைகளில் வளர்ச்சி விகிதமானது இரட்டை இலக்கில் உள்ள நிலையில், இரண்டாவது காலாண்டில் வளர்ச்சி விகிதம் 8.4% எட்டியுள்ளது. ரியல் GVA விகிதமும் 8.5% ஆக வளர்ச்சி கண்டுள்ளது. இது ஜிடிபியினை விட அதிகமாகும்.

வளர்ச்சி பாதையில் இந்தியா
2021ம் நிதியாண்டில் முதல் பாதியில் ஏப்ரல் - மே மாதங்களில் பல பகுதிகளில் முழு லாக்டவுன் போடப்பட்டிருந்தது. இதே ஜூன் - செப்டம்பர் மாதங்களில் பகுதியளவு லாக்டவுன் காரணமாக ரியல் ஜிடிபியில் 11.4 லட்சம் கோடி ரூபாய் இழப்பினை கண்டது குறிப்பிடத்தக்கது.
எனினும் நடப்பு நிதியாண்டில் நிலைமை மாறுபட்டுள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் ரியல் ஜிடிபி-ல் 8.2 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்துள்ளது.

சரிவில் உள்ள துறைகள்
எப்படியிருப்பினும் கொரோனாவுக்கு முந்தைய நிலையுடன் ஒப்பிடும்போது 3.2 லட்சம் கோடி நஷ்டத்தில் தான் உள்ளது.
குறிப்பாக ஹோட்டல்ஸ், டிரான்ஸ்போர்ட், கம்யூனிகேஷன் மற்றும் சேவைத் துறையில் வளர்ச்சி இன்று வரையில் பின் தங்கியுள்ளது. இந்த துறைகளில் மட்டும் 2.6 லட்சம் கோடி இழப்பு ஏற்படுள்ளது.

கொரோனாவுக்கு முந்தைய நிலை
ஒட்டுமொத்த பொருளாதாரமும் தற்போது வரையில் 95.6% மட்டுமே வளர்ச்சி கண்டுள்ளது. இது கொரோனாவுக்கு முந்தைய நிலையை அடைய, இன்னும் வளர்ச்சி காண வேண்டியுள்ளது. எனினும் இன்னும் ஒரு காலாண்டு உள்ள நிலையில் அந்த இழப்புகளை ஈடுகட்டலாம்.

முதலீடு வளர்ச்சி
இரண்டாவது காலாண்டில் எஃப்,எம்.சி.ஜி துறையானது 11% வளர்ச்சியினை பதிவு செய்துள்ளது. தொற்று நோய் காலத்தில் வளர்ச்சியடைந்த கிராமப்புற சந்தைகள், சில முக்கிய தொழிற்துறைகள் தற்போது மந்தமாகியுள்ளன. எப்படியிருப்பினும் நடப்பு நிதியாண்டில் புதிய முதலீடுகள் ஊக்கமளிப்பதாக ஆய்வறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.
நடப்பு நிதியாண்டில் மொத்தம் 8.6 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டு அறிவிப்புகள் செய்யப்பட்டுள்ளதாகவும், மொத்த முதலீட்டில் தனியார் துறையில் 67% அதாவது 5.80 லட்சம் கோடி ரூபாயாக உள்ளதாகவும் சுட்டிக் காட்டியுள்ளது.