தங்கத்தை வாங்கி குவித்த 'இந்திய' மக்கள்.. தங்கம் விலை சரிவுக்கு கோடான கோடி நன்றி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

செப்டம்பர் மாதத்தில் இந்தியாவில் தங்கம் இறக்குமதி அளவு யாரும் எதிர்பார்க்காத வகையில் 658 சதவீதம் அதிகரித்து அதிர்ச்சி கொடுத்துள்ளது. சர்வதேச முதலீட்டு சந்தையில் ஏற்பட்டு உள்ள காரணத்தால் தங்கம் விலை செப்டம்பர் மாதத்தில் தங்கம் விலை 6 மாத சரிவை எட்டியது.

 

இதனால் தங்கம் வாங்குவோர் எண்ணிக்கை எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்தது. இதுமட்டும் அல்லாமல் பண்டிகை காலம் நெருங்கியுள்ள காரணத்தாலும் இந்தியாவில் தங்கம் விலை அதிகளவிலான டிமாண்ட் உருவாகியுள்ளது.

இதன் எதிரொலியாக இந்தியாவில் தங்கம் இறக்குமதி மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது.

ஏர் இந்தியா-வை டாடா கைப்பற்றிய செய்தி தவறானது..?! DIPAM அமைப்பு, AIR டிவீட்..!

இந்தியாவின் தங்க இறக்குமதி

இந்தியாவின் தங்க இறக்குமதி

உலகிலேயே அதிக தங்கம் வாங்கும் மக்கள் தொகை கொண்டு இருக்கும் இந்தியாவில் விலை சரிவு காரணமாகவும், பண்டிகை காலத்தின் எதிரொலியாகவும் தங்கம் இறக்குமதி அளவு 91 டன்னாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் வெறும் 12 டன்னாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

 தங்கம் விலை

தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலை பல காரணிகளை கொண்டு மதிப்பிடப்படும், செப்டம்பர் மாதத்தில் விலை பெரிய அளவில் குறைந்த காரணத்தால் தங்கம் இறக்குமதி அதிகரித்துள்ளது. ஆகஸ்ட் 2020 ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 2,072 டாலராக இருந்த நிலையில் செப்டம்பர் மாதம் இதன் விலை 15 சதவீதம் குறைந்து காணப்பட்டது.

இந்திய மக்கள்
 

இந்திய மக்கள்

இந்த விலை சரிவை வாய்ப்பாக எடுத்துக்கொண்ட இந்திய மக்கள் அதிகளவிலான தங்கத்தை வாங்கிய காரணத்தால் தங்கம் இறக்குமதி அளவு அதிகரித்துள்ளது. தங்கம் இறக்குமதி அதிகரித்துள்ள காரணத்தால் இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறை அதிகரிப்பது மட்டும் அல்லாமல் ரூபாய் மதிப்பும் சரியும் நிலை உருவாகியுள்ளது.

288 டன் தங்கம் இறக்குமதி

288 டன் தங்கம் இறக்குமதி

மேலும் காலாண்டு அடிப்படையில் பார்க்கும் போது செப்டம்பர் காலாண்டில் 288 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டு உள்ளது. இது கடந்த வருடத்தை விடவும் 170 சதவீதம் அதிகம். மேலும் செப்டம்பர் மாதம் மட்டும் இந்தியாவில் 5.1 பில்லியன் டாலர் மதிப்பிலான தங்கத்தை இறக்குமதி செய்யப்பட்டு உள்ளது.

 ரீடைல் டிமாண்ட்

ரீடைல் டிமாண்ட்

இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தாலும், குறைந்தாலும் தேவையின் அளவு தொடர்ந்து உயர்ந்துக்கொண்டு தான் வருகிறது. இந்தியாவில் தங்கத்தை வெறும் நகையாக மட்டும் பார்க்காமல் ஒரு சேமிப்பாகவும், முதலீடாகவும் சாமானிய மக்கள் முதல் பெரும் பணக்காரர்கள் வரையில் பார்க்கப்படுவதால் தங்கம் வாங்குவோர் (சேமிப்போர்) எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கொரோனா காலம்

கொரோனா காலம்

இந்த கொரோனா காலக்கட்டத்தில் வேலைவாய்ப்புகளை இழந்த, வருமானத்தை இழந்த பல கோடி நடுத்தர குடும்பங்களை காப்பாற்றியது தங்கம் என்றால் மிகையில்லை. இதேபோல் இந்த கொரோனா காலத்தில் தங்க விற்பனை சந்தைக்கு பழைய தங்கத்தின் வருகை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது.

சாமானிய மக்கள்

சாமானிய மக்கள்

ஆதாவது தங்கத்தை அடமானம் வைத்த மக்கள் திரும்பி வாங்க முடியாமலும், வருமான இல்லாமல் தவிக்கும் பல பழைய தங்க நகையை விற்பனை செய்தது மூலம் பழைய தங்க நகை அதிகளவில் வந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India's Gold Import increased to 628 percent amid price fall and Festive season

India's Gold Import increased to 628 percent amid price fall and Festive season
Story first published: Tuesday, October 5, 2021, 21:15 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X