வரலாற்று உச்சத்தில் பணியமர்த்தல்.. ஏராளமான ஆஃபர்கள்.. ஐடி துறையில் வேற லெவல்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் பணியமர்த்தல் என்பது ஜூலை மாதத்தில் வரலாற்று உச்சத்தினை தொட்டுள்ளது.

 

கொரோனாவின் மத்தியில் கடந்த சில மாதங்களாக வரலாற்று உச்சத்தினை தொட்டு வந்த வேலையின்மை விகிதம், தற்போது மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்பிக் கொண்டுள்ளது.

துபாய்: இனி சுற்றுலா நகரமல்ல, ஹெல்த்கேர் - பார்மா ஹாப்.. புதிய திட்டம்..!

நாக்குரி அறிக்கையின் படி, கடந்த ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில், பணியமர்த்தல் என்பது ஜூலை மாதத்தில் 11% அதிகரித்துள்ளது.

ஐடி துறையில் தேவை அதிகரிப்பு

ஐடி துறையில் தேவை அதிகரிப்பு

இந்தியாவில் உள்ள பல துறைகளிலும் வேலை வாய்ப்பானது மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. குறிப்பாக டிஜிட்டல் தேவையானது அதிகரித்து வரும் நிலையில், ஐடி துறையில் வேலை வாய்ப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. கடந்த ஜூன் மாதத்துடன் ஒப்பிடும் வகையில், ஜூலை மாதத்தில் வேலை வாய்ப்பானது 18% அதிகரித்துள்ளது. தொடர்ச்சியான இரண்டாவது மாதமாக ஐடி துறையில் வளர்ச்சி பாதைக்கு திரும்பியுள்ளது.

மற்ற துறைகளில் என்ன நிலவரம்

மற்ற துறைகளில் என்ன நிலவரம்

இதே ஹோட்டல்ஸ், உணவகங்கள் மற்றும் டிராவல் துறையில் 36%மும், சில்லறை துரையில் 17%மும் ஏற்றத்தில் உள்ளது. இதே கணக்கியல் வரித் துறையில் 27%மும், எஃப்.எம்.சி.ஜி துறையில் 17%மும், வங்கி மற்றும் நிதித்துறையில் 13%ம் பணியமர்த்தல் விகிதமானது வளர்ச்சி கண்டுள்ளது.

இந்த துறைகளில் சரிவு
 

இந்த துறைகளில் சரிவு

இதே கல்வி மற்றும் பயிற்சி துறையில் 8% வளர்ச்சியும் கண்டுள்ளது. இதே பார்மா/ பயோடெக்/கிளினிக்கல் துறையில் 5% சரிந்தும், மீடியா/டாட்காம்/பொழுதுபோக்கு துறையில் பணியமர்த்தல் என்பது 15% சரிவும் கண்டுள்ளன.

நகர வாரியாக வளர்ச்சி

நகர வாரியாக வளர்ச்சி

இதே ஐடி நகரங்களில் பெங்களூரில் 17%மும், ஹைத்ராபாத்தில் 16%மும், புனேவில் 13%மும், டெல்லியில் 13%மும், மும்பையில் 10%மும், கடந்த ஜூன் மாதத்துடன் ஒப்பிடும்போது ஜூலை மாதத்தில் பணியமர்த்தலை அதிகரித்துள்ளன. மேற்கண்ட எல்லா நகரங்களிலும் இந்த பணியமர்த்தலானது இரட்டை இலக்கில் வளர்ச்சி கண்டுள்ளது.

கோயமுத்தூர் நிலவரம் என்ன

கோயமுத்தூர் நிலவரம் என்ன

இதே மற்ற சிறு நகரங்களான கோயமுத்தூரில் 24%மும், இதே ஜெய்ப்பூரில் 11%மும் பணியமர்த்தலானது அதிகரித்துள்ளது. இதே அகமதாபாத்தில் முந்தைய மாதத்துடன் ஒப்பிடுகையில் ஜூலையில் 3% பணியமர்த்தல் குறைந்துள்ளது. இந்த நகரத்தில் மட்டும் வளர்ச்சி சரிவினைக் கண்டுள்ளது.

பிரெஷ்ஷர்களுக்கும் வாய்ப்பு

பிரெஷ்ஷர்களுக்கும் வாய்ப்பு

ஜூலை மாதத்தில் அனைத்து துறைகளிலும் வேலைக்கான தேவை அதிகரித்த நிலையில், பிரெஷ்ஷர்களுக்கும் வாய்ப்புகள் என்பதும் மிக அதிகமாகவே இருந்தது. இது கடந்த ஏப்ரல் மற்றும் மே 21ல் ஏற்பட்ட மோசமான சரிவுக்கு பிறகு, தற்போது நாட்டில் வளர்ச்சி விகிதமானது புத்துயிர் பெற்றுள்ளது. பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்பிக் கொண்டுள்ளதற்கு இதுவே சிறந்த ஆதாரம் எனலாம்.

 இது கொரோனாவுக்கு முந்தைய நிலை

இது கொரோனாவுக்கு முந்தைய நிலை

இந்த பணியமர்த்தல் விகிதமானது வரலாற்று உச்சத்தினை தொட்டுள்ளது என்பதோடு, கொரோனாவுக்கு முந்தைய நிலையையும் தாண்டி விட்டதாக நாக்குரியின் தலைமை வணிக அதிகாரி பவன் கோயல் கூறியுள்ளார்.

கடந்த சில மாதங்களாகவே ஐடி மற்றும் ஐடி சார்ந்த துறைகளில் பணியமர்த்தல் என்பது கணிசமான அளவு உயர்ந்துள்ளது. இது முந்தைய சராசரியை விட, கொரோனா காலத்தில் உச்சம் தொட்டுள்ளது.

விரைவில் மீட்சி

விரைவில் மீட்சி

முதல் கட்ட கொரோனா பரவலை காட்டிலும், இரண்டாம் அலையின் தாக்கம் என்பது மோசமான இருந்தது. எனினும் இரண்டாம் அலையின் தாக்கத்தில் இருந்து வேகமாக மீண்டு வந்து கொண்டுள்ளது. பொருளாதாரமும் விரைவில் மீண்டு வந்து கொண்டுள்ளது. இதனால் பணியமர்த்தலும் அதிகரித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: job வேலை
English summary

India’s hiring activity touched at all time high crossing in July month; IT sector was top in India

India’s hiring activities touched in all time high in last July month, its indicating a strong revival of economic growth rate.
Story first published: Saturday, August 7, 2021, 14:03 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X