வளர்ச்சி பாதைக்கு திரும்பும் இந்தியா.. ஜூன் மாதத்தில் 15% பணியமர்த்தல் அதிகரிப்பு.. மாஸ் தான்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இரண்டாம் கொரோனா அலைக்கு மத்தியில் லட்சக்கணக்கானோர் வேலையிழந்த நிலையில், தற்போது தான் பல துறைகளும் கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து மீண்டு வரத் தொடங்கியுள்ளன. இதனால் பணியமர்த்தலும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

 

இதற்கிடையில் மே மாதத்தினை காட்டிலும் ஜூன் மாதத்தில் பணியமர்த்தலானது 15% அதிகரித்துள்ளதாக தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன.

மனம் மயக்கும் புவிசார் குறியீடுள்ள மதுரை மல்லி உள்பட பல மலர்கள் ஏற்றுமதி.. தமிழகத்திற்கே பெருமை!

இப்படி பணியமர்த்தும் துறைகளில் ஐடி மற்றும் ஐடி சார்ந்த துறைகள் முன்னணியில் உள்ளன.

பணியமர்த்தல் அதிகரிப்பு

பணியமர்த்தல் அதிகரிப்பு

இது குறித்த நாக்குரி.காம் அறிக்கையில், ஜூன் மாதத்தில் பணியமர்த்தல் என்பது 15% அதிகரித்துள்ளது. இது ஜூன் மாதத்தில் 2,359 வேலை வாய்ப்புகளாக அதிகரித்துள்ளது. இது கடந்த மே மாதத்தில் 2,047 வாய்ப்புகளாக இருந்தது. அதிகரித்து வரும் ஐடி துறையினரின் தேவைக்கு மத்தியில் ஐடி மற்றும் ஐடி துறை சார்ந்த நிறுவனங்களில் பணியமர்த்தல் 5% அதிகரித்துள்ளது.

ஐடி துறையில் வளர்ச்சி

ஐடி துறையில் வளர்ச்சி

இதே கொரோனாவுக்கு முன்பு ஒப்பிடும்போது (ஜூன் 2019) ஐடி துறையானது 52% வளர்ச்சி கண்டுள்ளது. இது கொரோவினால் நிறுவனங்கள் தங்களின் வணிகங்களை டிஜிட்டல் மயமாக்கி வருகின்றனர். இதற்கு பத்தியில் இத்துறையில் தேவை என்பது உயர்ந்துள்ளது. இதனால் பணியமர்த்தலும் அதிகரித்துள்ளது.

தளர்வுகளினால் வளர்ச்சி
 

தளர்வுகளினால் வளர்ச்சி

அடுத்ததாக சில்லறை, ஹாஸ்பிட்டாலிட்டி மற்றும் பயணத் துறையும் வளர்ச்சி கண்டுள்ளது. தற்போது முந்தைய மாதங்களுடன் ஒப்பிடும்போது, ஜூன் மாதத்தில் நாட்டில் பல தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில், ஹீட்டல் விமான நிறுவனங்கள், உணவகங்கள் மற்றும் பயண நிறுவனங்கள் என பலவும் வளர்ச்சி கண்டுள்ளன. மேற்கண்ட இந்த துறைகள் 87% வளர்ச்சி கண்டுள்ளன. இதே சில்லறை வணிகம் 57% அதிகரித்துள்ளது.

இந்த துறைகளிலும் செம வளர்ச்சி

இந்த துறைகளிலும் செம வளர்ச்சி

இதே இன்சூரன்ஸ் துறை 38% வளர்ச்சியிலும், வங்கி மற்றும் நிதித்துறையானது 29% வளர்ச்சியிலும், பார்மா துறை மற்றும் பயோடெக் துறையானது 22% வளர்ச்சியும் கண்டுள்ளன. இதே FMCG துறையானது 22% வளர்ச்சியுடனும், கல்வி மற்றும் கற்பித்தல் துறைகள் 15% வளர்ச்சியுடனும், பிபிஓ மற்றும் ஐடி துறையானது 14% வளர்ச்சியும் கண்டுள்ளன.

வேற லெவல் வளர்ச்சி

வேற லெவல் வளர்ச்சி

குறிப்பாக புனேவில் 10% பணியமர்த்தலும், ஹைத்ராபாத்தில் 10% பணிமர்த்தலும், பெங்களூரில் 4% பணியமர்த்தலும் அதிகரித்துள்ளன. இதே மே மாதத்தில் எதிர்மறையான வளர்ச்சியினை கண்டிருந்த டெல்லி என்.சி.ஆர் மற்றும் கொல்கத்தாவில் முறையே 26% மற்றும் 24% வளர்ச்சி கண்டுள்ளன.

தொழில்நுட்ப வல்லுனர்களுக்கான தேவை

தொழில்நுட்ப வல்லுனர்களுக்கான தேவை

இதே இரண்டாம் அடுக்கு நகரங்களாக ஜெய்ப்பூரில் 50%மும், இதே வதோதாராவில் 29% பணியமர்த்தலும் கடந்த மாதத்தினை காட்டிலும் அதிகரித்துள்ளன. குறிப்பாக தொழில்நுட்ப வல்லுனர்களுக்கான தேவை 4% அதிகரித்துள்ளதாகவும் Naukri JobSpeak index தெரிவித்துள்ளது. இதே கற்பித்தல் துறையில் பணியமர்த்தல் என்பது மே மாதத்தினை காட்டிலும் 9% அதிகரித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India’s hiring activity up 15% in last june

According to the Naukri report, hiring activity in india has bounce back with 15% in june
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X