லிஸ்டில் RIL, அதானி போர்ட்ஸ் உண்டு.. FPI முதலீட்டாளர் செய்த காரியம்.. குழப்பத்தில் முதலீட்டாளர்கள்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாட்டின் முன்னணி நிறுவனங்களான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், அதானி போர்ட்ஸ் உள்ளிட்ட சில நிறுவனங்களில் அந்நிய போர்ட்போலியோ முதலீட்டாளர்கள் தங்களது பங்குகளை குறைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

 

இது குறித்து வெளியான இடி செய்தியில், இந்தியாவின் மிகப்பெரிய அந்நிய போர்ட்போலியோ முதலீட்டாளாரான EuroPacific Growth Fund நிறுவனம், செப்டம்பர் காலாண்டில் சுமார் 90,000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை குறைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
'
குறிப்பாக இந்த பங்கு விற்பனையில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், கெளதம் அதானியின் அதானி போர்ட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களும் உள்ளன.

RIL பங்கு விற்பனை

RIL பங்கு விற்பனை

இது குறித்தான பங்கு சந்தை தரவில் சர்வதேச முதலீட்டாளர்கள் 12.53 லட்சம் பங்குகளை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் விற்பனை செய்துள்ளதாக தெரிகிறது. இது கடந்த ஜூன் காலாண்டில் 3.12% ஆக இருந்த நிலையில், செப்டம்பரில் 3.10 ஆக சரிந்துள்ளது. இந்த பங்கின் விலையானது இந்த நிதியாணடின் தொடக்கத்தில் இருந்து 90% ஏற்றம் கண்டுள்ள நிலையில், இந்த பங்கு விற்பனை வந்துள்ளதாக கூறப்படுகிறது. இன்று இந்த பங்கின் விலையானது தற்போது 2025 ரூபாயாக காணப்படுகிறது.

அதானி போர்ட்ஸ் பங்கும் விற்பனை

அதானி போர்ட்ஸ் பங்கும் விற்பனை

அதானி போர்ட்ஸ் நிறுவனத்தின் பங்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஜூன் காலாண்டில் 1.77% ஆக இருந்த நிலையில், செப்டம்பர் காலாண்டில் 1.42% ஆக பங்கு குறைக்கப்பட்டுள்ளது. அதானி போர்ட்ஸின் பங்கு விலைகள் இதுவரை 48 சதவீதம் அதிகரித்துள்ளது. இதே இந்த காலகட்டத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகியவை 40 சதவீதத்திற்கு மேல் அதிகரித்துள்ளது.

ரிலையன்ஸ் இலக்கு
 

ரிலையன்ஸ் இலக்கு

உள்நாட்டு தரகு நிறுவனங்கள், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் அதானி போர்ட்ஸ் நிறுவனங்களின் பங்கு விலைகள் 20 சதவீதம் வரை அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கின்றது. குறிப்பாக ஏஞ்சல் புரோக்கிங் நிறுவனம் 2,453 ரூபாயாக இலக்கை நிர்ணயித்துள்ளது. அதே நேரம் ஜேஎம் பைனான்ஷியல் நிறுவனத்தின் பங்கு விலையானது 2,313 - 2,358 ரூபாயாக இருக்கலாம் என்றும் கணித்துள்ளது.

அதானி போர்ட்ஸ் பங்கு எதிர்பார்ப்பு

அதானி போர்ட்ஸ் பங்கு எதிர்பார்ப்பு

அதானி போர்ட்ஸ் நிறுவனத்தின் இலக்கு விலையை ஆக்ஸிஸ் வங்கி 400 ரூபாய் என்றும் மதிப்பிட்டுள்ளது. EuroPacific Growth fund நிறுவனம், ஆக்ஸிஸ் வங்கியில் பங்குகளை 2.90 சதவீதத்தில் இருந்து, 1.90 சதவீதமாக குறைத்துள்ளது. இதே ஐசிஐசிஐ வங்கியில் 2.10 சதவீதத்தில் இருந்து, 1.41 சதவீதமாக பங்குகளை குறைந்துள்ளது. இந்த இரு வங்கிகளின் பங்கு விலையானது 30 சதவீதத்திற்கும் மேலாக ஏற்றம் கண்டுள்ளது.

முதலீடு அதிகரிப்பு

முதலீடு அதிகரிப்பு

இதே தனியார் துறையில் முன்னணி வங்கியான ஹெச்டிஎஃப்சி வங்கியில் முதலீடுகளை அதிகரித்துள்ளனர். குறிப்பாக 45 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து 3.82 சதவீதமாக அதிகரித்துள்ளனர். இதே ஹெச்டிஎஃப்சி லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 39 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து 3.05 சதவீதம் அதிகரித்துள்ளதாக தரவுகள் மூலம் தெரிகிறது.

ஹெச்டிஎஃப்சி வங்கி டார்கெட்

ஹெச்டிஎஃப்சி வங்கி டார்கெட்

மோதிலால் ஆஸ்வால் நிறுவனம், ஹெச்டிஎஃப்சி வங்கியின் டார்கெட்டினை 1,400 ரூபாயாக இலக்கு வைத்துள்ளது. அதோடு 2020 - 2023ம் நிதியாண்டுகளில் இதன் வளர்ச்சி 19 சதவீதம் அதிகரிக்கலாம் என்றும் கணித்துள்ளது. இதே நாட்டின் முன்னனி கார் தயாரிப்பாளரான மாருதி சுசூகியில் FPIக்கள் 30.75 லட்சம் பங்குகளை அல்லது 1.02% பங்குகளை செப்டம்பர் காலாண்டில் வைத்துள்ளனர். இதற்கு முந்தைய இரண்டு காலாண்டுகளில் இந்த நிறுவனத்தில் FPI பங்குகள் அதிகம் இல்லை என்பது கவனிக்கதக்கது.

இந்த பங்குகள் எல்லாம் ஏற்றம்

இந்த பங்குகள் எல்லாம் ஏற்றம்

கோடக் மகேந்திரா மற்றும் ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தில், இந்த நிதி நிறுவனம் பங்குகளை மாற்றாமல் வைத்துள்ளது. ஹெச்டிஎஃப்சி லைஃப், கோடக் மகேந்திரா வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி மற்றும் யுபிஎல் ஆகியவற்றின் பங்குகள் நடப்பு நிதியாண்டின் தொடக்கத்தில் இருந்து 20 - 50 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.

ஆட்டோமொபைல் துறை ஏற்றம்

ஆட்டோமொபைல் துறை ஏற்றம்

ஆட்டோமொபைல் துறைகள் நன்கு ஏற்றம் காணலாம். இது மாத அடிப்படையில் விற்பனை அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் வரவிருக்கும் விழாக்கால பருவத்தில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களது விற்பனை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கின்றன. இதனால் அதன் பங்குகள் ஏற்றம் காணலாம் என்றும் ஈக்விட்டி ரிசர்ச் நிறுவனத்தின் தலைவர் பராஸ் போத்ரா தெரிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India’s largest FPI cut stake in RIL, Adani ports

India’s largest Foreign Investor cut stake in Reliance industries, adani ports and some other stocks, also it’s kept holdings unchanged in kotak Mahindra and upl
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X