'இந்த' கிரிப்டோகரன்சி முதலீட்டு திட்டங்களுக்கு சிவப்பு கொடி.. விரைவில் தடை அறிவிக்கலாம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் கிரிப்டோ முதலீடு மிகப்பெரிய அளவில் பிரபலமாகியுள்ளது, பெரு நகரங்களில் மட்டும் அல்லாமல் சிறு நகரங்களிலும் அதிகப்படியானோர் இதில் முதலீடு செய்து வருகின்றனர்.

 

இந்தக் கிரிப்டோகரன்சியை வாங்குவதற்காக மக்களிடம் பணம் திரட்டும் நோக்கில் தனிநபர் மற்றும் கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் அமைப்புகள் சிட் பண்ட், MLM மற்றும் எஸ்பிஐ முறையில் பல திட்டத்தை அரசு ஒப்புதல் இல்லாமல் செயல்படுத்தி வருகிறது.

கிரிப்டோ மசோதா முதல் தகவல் பாதுகாப்பு மசோதா வரை.. குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று துவக்கம்..!

 சிட் பண்ட், MLM மற்றும் எஸ்பிஐ

சிட் பண்ட், MLM மற்றும் எஸ்பிஐ

இந்நிலையில் கிராமம் மற்றும் சிறு டவுன் பகுதிகளில் இருக்கும் மக்களின் முதலீட்டையும் பணத்தையும் காப்பாற்றும் நோக்கில் புதிய கட்டமைப்பை உருவாக்கி அதன் மூலம் சிட் பண்ட், MLM மற்றும் எஸ்ஐபி வகையிலான முதலீட்டுத் திட்டத்தை மொத்தமாகத் தடை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

 சிறு கிராமங்கள்

சிறு கிராமங்கள்

கிரிப்டோ சந்தையில் முதலீடு செய்வதற்காகச் சிறு கிராமங்களில் மக்களிடம் எப்படியெல்லாம் சிட் பண்ட், MLM மற்றும் எஸ்ஐபி திட்டங்கள் மூலம் பணம் வசூல் செய்யப்படுகிறது என்பது குறித்து இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமப்பான செபி ஆகியவை நாடாளுமன்ற குழுவிடம் விளக்கம் அளித்தும் அதனைத் தடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளது.

 கிரிப்டோகரன்சி பேமெண்ட்
 

கிரிப்டோகரன்சி பேமெண்ட்

மேலும் இந்திய ரிசர்வ் வங்கி இந்தியாவில் சிலர் ஏற்றுமதி சேவைகளுக்குக் கிரிப்டோகரன்சிகளைக் குறிப்பாகப் பிட்காயினைப் பேமெண்டாகப் பெற்றுக்கொண்டு சேவை அளிக்கப்படுகிறது என்றும் விளக்கம் அளித்துள்ளது. அமெரிக்கா போல இந்தியாவில் பேமெண்ட் துறையில் கிரிப்டோகரன்சி பயன்பாடு அதிகரிக்கும் முன்னர் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் திட்டமிட்டு உள்ளது.

 பெரும் தொகை திரட்டல்

பெரும் தொகை திரட்டல்

இதோடு சில தனிநபர்கள் கிரிப்டோகரன்சியில் அதிகப்படியான லாபம் கிடைக்கும் என நம்பிக்கை வார்த்தைகளைக் கூறி சிறு நகரம் மற்றும் கிராமங்களில் இருந்து மக்களிடம் பெரும் தொகையைப் பணமாகப் பெற்று வருவதாகவும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இது கிட்டதட்ட சிட்பண்ட் முறையில் தான் இயங்குகிறது, எவ்விதமான ஒழுங்குமுறை, கட்டுப்பாடும் இல்லாமல் இத்தகைய பணிகள் செய்யப்படுகிறது.

 உத்தரப் பிரதேசம் மற்றும் பீகார்

உத்தரப் பிரதேசம் மற்றும் பீகார்

சிட் பண்ட் திட்டத்தைப் போலப் பணத்தை வசூல் செய்து கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்யும் திட்டங்கள் பல உத்தரப் பிரதேசம் மற்றும் பீகார் போன்ற மாநிலத்தில் பிற மாநிலங்களைக் காட்டிலும் அதிகளவில் உள்ளது. இதை உடனடியாக நிறுத்த வேண்டும் எனச் செபி மற்றும் ஆர்பிஐ நாடாளுமன்ற குழுவில் தெரிவித்துள்ளது.

 1.5 கோடி முதலீட்டாளர்கள்

1.5 கோடி முதலீட்டாளர்கள்

சிட் பண்ட் திட்டம் அல்லாமல் MLM போலவும் பல முதலீட்டுத் திட்டங்கள் தற்போது சந்தையில் உலா வருகிறது. இதுவரை இந்தியாவில் சுமார் 1.5 கோடி ரீடைல் முதலீட்டாளர்கள் கிரிப்டோ சந்தையில் முதலீடு செய்துள்ளனர். இந்தியாவில் பல மோசடி திட்டங்கள் இருப்பதாகவும் CREBACO என்னும் கிரிப்டோகரன்சி ஆராய்ச்சி அமைப்பின் நிறுவனர் சித்தார்தா சோகானி தெரிவித்துள்ளார்.

 தடை விதிக்கப்படலாம்

தடை விதிக்கப்படலாம்

மேலும் கிரிப்டோகரன்சி முதலீட்டு திட்டத்திற்காக மத்திய அரசு உருவாக்கி வரும் புதிய கிரிப்டோகரன்சி மசோதாவில் சிட் பண்ட், MLM மற்றும் எஸ்ஐபி போன்ற முதலீட்டுத் திட்டத்திற்குத் தடை விதிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன்

நவம்பர் 30ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இந்தியாவில் கிரிப்டோகரன்சியை ஒழுங்கு முறைப்படுத்த புதிய மசோதா-வை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளோம். ஏற்கனவே உருவாக்கப்பட்ட மசோதாவில் மாறுபட்ட கோணத்தில் மறு ஆய்வு செய்ய வேண்டிய நிலை இருக்கும் காரணத்தால் தற்போது புதிய மசோதா-வை உருவாக்க முடிவு செய்துள்ளோம் எனத் தெரிவித்தார்.

கிரிப்டோகரன்சி

கிரிப்டோகரன்சி

கிரிப்டோகரன்சியின் ஆபத்துகளையும், அது தவறான கைகளுக்குச் செல்வது குறித்துக் கண்காணிப்புச் செய்து வருகிறோம். இதேபோல்

கிரிப்டோகரன்சியை ஒழுங்கு முறைப்படுத்துவதில் பெரிய அளவில் ஆலோசனை செய்ய வேண்டிய கட்டாயம் உருவாக்கியுள்ளதால், புதிய மசோதா வரும் வரையில் காத்திருக்க வேண்டும் எனவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ராஜியசாப கூட்டத்தில் விளக்கம் கொடுத்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India's new cryptocurrency Bill may red-flag chit fund, MLM, SIP business models for crypto investment

India's new cryptocurrency Bill may red-flag chit fund, MLM business models for crypto investment 'இந்த'க் கிரிப்டோகரன்சி முதலீட்டுத் திட்டங்களுக்குச் சிவப்பு கொடி.. விரைவில் தடை அறிவிக்கலாம்..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X