15 வருட மோசமான நிலையில் சேமிப்பு அளவு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் மோசமான பொருளாதாரச் சூழ்நிலையில் சேமிப்புக்கான வட்டி விகிதம் சுமார் 15 வருட சரிவைச் சந்தித்து மக்களுக்கு மாபெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் சமானிய மக்களின் சேமிப்பின் அளவும் அதிகளவில் குறைந்துள்ளது என ஆய்வுகள் கூறுகிறது.

 

இதன் மூலம் நாட்டின் மேக்ரோ பொருளாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருப்பது மட்டும் அல்லாமல் நாட்டு மக்களின் முதலீட்டு அளவு பெரிய அளவில் குறைந்து, மக்கள் அதிகமாகக் கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

60 சதவீத சேமிப்பு

60 சதவீத சேமிப்பு

இந்தியாவின் சாமானிய குடும்பங்கள் பொதுவாகச் சுமார் 60 சதவீதம் வருமானத்தைச் சேமிப்பு செய்யும் பழக்கம் கொண்டவர்கள். இந்த அளவு தற்போது பெரிய அளவில் குறைந்துள்ளது எனச் சந்தை ஆய்வறிக்கை கூறுகிறது.

ஆனாலும் பிரேசில் போன்ற வளரும் நாடுகளைக் காட்டிலும் இந்தியாவையும், இந்திய சந்தையும் விருப்பான சந்தையாக இன்றும் உள்ளது என்பது தான் விநோதம்.

HSBC

HSBC

இந்திய பொருளாதாரம் நிலையான வளர்ச்சியில் இருக்க வேண்டும் என்றால் அனைத்துத் தரப்பு மக்கள் மத்தியிலும் முதலீட்டு அளவு அதிகரிக்க வேண்டும். அதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்த வேண்டும் என HSBC இந்திய கிளையின் தலைமை பொருளாதார வல்லுனர் பிரன்ஜூல் பன்டாதிரி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் சேமிப்பு அளவு குறையும் போது அரசு வெளிநாட்டில் இருந்து நிதி திரட்ட வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்படும்.

சேமிப்பு அளவு
 

சேமிப்பு அளவு

இந்தியாவின் ஜிடிபி-யில் மொத்த சேமிப்பின் அளவு 2012ஆம் ஆண்டில் 34.6 சதவீதமாக இருந்த நிலையில் 2019ஆம் ஆண்டு இதன் அளவு 30.1 சதவீதமாகக் குறைந்துள்ளது. 2007-08ஆம் ஆண்டு இதன் அளவு 36 சதவீதமாக இருந்தது என மத்திய புள்ளியியல் அமைப்பு தெரிவித்துள்ளது.

இதேபோல் ஜிடிபி கணக்கின் படி இந்திய குடும்பங்களின் சேமிப்பு அளவு 2012இல் 23 சதவீதமாக இருந்த நிலையில் 2019இல் 18 சதவீதமாகக் குறைந்துள்ளது என அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளது.

வெளிநாட்டுக் கடன்

வெளிநாட்டுக் கடன்

இந்தியாவில் சேமிப்பு அளவுகள் குறையும் பட்சத்தில் இந்திய நிறுவனங்கள் இந்திய வங்கியின் கடன் வாங்க முடியாமல் வெளிநாட்டு வங்கி மற்றும் முதலீட்டாளர்களிடம் இருந்து கடன் வாங்கி வருகிறது. இதன் உலகளாவிய சந்தையில் இந்தியாவை மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்படும் எனத் தெரிகிறது.

மொத்த கடன்

மொத்த கடன்

இந்நிலையில் ரிசர்வ் வங்கி வெயிட்டுள்ள அறிக்கையின் படி இந்தியாவின் மொத்த கடன் 2015ஆம் ஆண்டில் 475 பில்லியனாக இருந்த நிலையில் தற்போது 543 பில்லியனாக உயர்ந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India’s savings rate plunges to 15 year low

India’s slowing economy took a toll on much-needed savings too, with the savings rate touching a 15-year low, and household savings also falling. This has weakened India’s macro-economic position which is already hobbled by low investment and rising external borrowing to fund capital needs.
Story first published: Thursday, February 20, 2020, 18:57 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X