ஐடி துறையில் கொட்டி கிடக்கும் வாய்ப்புகள்.. 2030ல் சுமார் 5 லட்சம் பேருக்கு ஜாக்பாட் தான்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகமே கொரோனா காலக்கட்டத்தில் தத்தளித்து வந்த நிலையில், ஒரு துறையில் மட்டும் வழக்கத்திற்கு மாறான வளர்ச்சி இருந்தது எனில் அது ஐடி துறை தான்.

 

குறிப்பாக வழக்கத்திற்கு மாறான வளர்ச்சி, வருவாய், லாபம், புதிய ஆர்டர்கள் என ஐடி துறைக்கு, அடுத்தடுத்து வெற்றி படிக்கட்டுகளாய் அமைந்தன.

டாப் 8 நகரங்களில் 76% சரிவு.. வீடு விற்பனையில் படு வீழ்ச்சி.. சென்னையில் ரொம்ப மோசம்..!

இது ஒரு புறம் எனில் புதிய ஆர்டர்களுக்கும் மத்தியில் பல லட்சம் பேருக்கு புதிய வாய்ப்புகள் கிடைத்தன. இதற்கிடையில் இன்னும் சில ஆண்டுகளுக்கு இந்த நிலை தொடரலாம் என்றெல்லாம் கணிக்கப்பட்டது.

தேவை அதிகரிக்கலாம்

தேவை அதிகரிக்கலாம்

இன்னும் சில நிபுணர்கள் இனி ஐடி துறையினரின் தேவை அதிகரிக்கும். ஏனெனில் கொரோனா நெருக்கடியான காலக்கட்டத்திலேயே டிஜிட்டல் தேவையின் அவசியத்தினை நாம் புரிந்து கொண்டுள்ளோம். ஆக இனி வரும் காலங்களில் நிறுவனங்கள், தங்களது சேவைகளை டிஜிட்டல் மயமாக்கலாம். பலரும் ஏற்கனவே தங்களது பணிகளை டிஜிட்டல் வழியாக தங்களது பயணங்களை தொடங்கிவிட்டனர்.

5 லட்சம் பேருக்கு புதிய வேலை வாய்ப்பு

5 லட்சம் பேருக்கு புதிய வேலை வாய்ப்பு

இதனால் இனி வரும் காலத்தில் புது புது டெக்னாலஜிக்கள், கிளவுட் கம்ப்யூட்டிங், சைபர் கிரைம் என சில துறைகள் வேகமாக வளர்ச்சி காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் சமீபத்திய ஆய்வில் 2030ம் ஆண்டில் ஐடி சேவைத் துறையில் உள்ள SaaS துறையானது, 1 டிரில்லியன் டாலர் மதிப்புடைய துறையாக மாறும். 2030க்குள் 5 லட்சம் பேருக்கு புதிய வாய்ப்புகள் உருவாக்கப்படலாம் என்று அறிவித்துள்ளது.

பல மடங்கு வளர்ச்சி காணும்
 

பல மடங்கு வளர்ச்சி காணும்

பல மில்லியன் டாலர்கள் மதிப்புடைய ஸ்டார்டப்களும், 10 யூனிகார்ன்களும் இத்துறையில் உள்ளன. இவை ஆண்டுக்கு 3 பில்லியன் டாலர் வருவாயினை ஈட்டுகின்றன. இதற்கிடையில் தொழில்துறை அமைப்பான நாஸ்காம், இன்னும் 10 ஆண்டுகளில் இந்த யூனிகார்ன்களின் எண்ணிக்கையானது 10 மடங்கு அதிகரிக்கும். இது 1 டிரில்லியன் டாலர்களை எட்டும் என மதிப்பிட்டுள்ளது.

கொட்டிக் கிடக்கும் வாய்ப்புகள்

கொட்டிக் கிடக்கும் வாய்ப்புகள்

பல சவால்களுக்கும் மத்தியிலும், சர்வதேச அளவில் இந்தியாவுக்கு பல அற்புதமான வாய்ப்புகள் உள்ளன. கடந்த ஆண்டு உலகளாவிய ஐடி நிறுவனங்கள் மற்றும் தகவல் தொடர்பு நிறுவனங்களின் 3 டிரில்லியன் டாலர் செலவினங்களில், 600 பில்லியன் டாலர் என்பது SaaS (software as a service) உடையது என தரவுகள் மூலம் அறிய முடிகின்றது. இந்த தொழிலானது வருடத்திற்கு 8% என்ற அளவு வளர்ந்து வருவதாகவும் சுட்டிக் காட்டியுள்ளது. இதற்கிடையில் தான் 5 லட்சம் பேருக்கு வாய்ப்புகள் உருவாக்கப்படலாம் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India’s this IT sector will require five lakh professionals by 2030; check details

India’s SaaS industry could reach $1 trillion in value and create 5 lakh new jobs by 2030.
Story first published: Thursday, July 8, 2021, 18:27 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X