8 பிரைவேட் ஜெட்.. திடீரென இந்தியாவை விட்டு லண்டனுக்கு பறந்த இந்திய பணக்காரர்கள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருவது மட்டும் அல்லாமல் மத்திய மாநில அரசால் அதைக் கட்டுப்படுத்த முடியாமல் தினமும் பல உயிர்களை இழந்து வரும் மோசமான நிலையில் சிக்கியுள்ளோம்.

 

இந்தச் சூழ்நிலையில் இந்தியாவில் இருந்து வரும் விமானங்கள் தரையிறங்கப் பல நாடுகள் தடை விதித்துள்ளது. குறிப்பாகப் பிரிட்டன் விமானப் போக்குவரத்தில் இந்தியாவை ரெட் லிஸ்ட்-ல் பதிவு செய்துள்ளது.

ஆனால் பிரிட்டன் உத்தரவு வருவதற்கு முன்பாக அவசர அவசரமாக 8 பிரைவேட் ஜெட் விமானத்தில் இந்திய பணக்காரர்கள் பறந்துள்ளனர்.

 இந்தியா விட்டு லண்டனுக்குப் பயணம்

இந்தியா விட்டு லண்டனுக்குப் பயணம்

இந்தியாவின் கொரோனா பிடியில் இருந்து தப்பிக்க வேண்டும் என்பதற்காகவும், வர்த்தகம் மற்றும் தனிப்பட்ட காரணத்திற்காக லண்டனுக்குக் கட்டாயம் செல்ல வேண்டும் என்பதற்காகவும் இந்தியப் பணக்காரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள், பிரிட்டன் அரசு இந்தியா உட்பட 39 நாடுகளின் விமானங்களுக்கான தடை அறிவிப்பு வருவதை என்பதை முன்கூட்டியே தெரிந்துகொண்டு, தடை அறிவிப்பு வருவதற்குச் சில நிமிடங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் அவசர அவசரமாக லண்டனை அடைந்துள்ளனர்.

பிரைவேட் ஜெட் வாடகை 72 லட்சம் ரூபாய்

பிரைவேட் ஜெட் வாடகை 72 லட்சம் ரூபாய்

பிரிட்டனில் இந்திய விமானங்களுக்கு அனுமதி இல்லை என்பதால் பிரைவேட் ஜெட் விமானத்தை வாடகைக்கு எடுத்து, தடை அறிவிப்புக்கு முன்பாக லண்டனை அடைந்துள்ளனர். அதுவும் இந்தப் பிரைவேட் ஜெட்-ல் ஒரு பயணத்திற்குச் சுமார் 70,000 பவுண்ட் அதாவது இந்திய ரூபாயில் 72 லட்சம் ரூபாய்.

 8 பிரைவேட் ஜெட்
 

8 பிரைவேட் ஜெட்

பிளைட்அவேர் தளத்தின் தகவல்கள் படி மும்பையில் இருந்து 4 பிரைவேட் ஜெட்கள், டெல்லியில் இருந்து 3, அகமதாபாத்தில் இருந்து 1 என 8 ஜெட் விமானங்கள் மூலம் இந்தியாவில் இருந்து லண்டன் லூடன் விமான நிலையத்திற்கு இந்தியப் பணக்காரர்கள் சென்றுள்ளனர்.

 திடீர் பிரைவேட் ஜெட் பயணம்

திடீர் பிரைவேட் ஜெட் பயணம்

அடுத்த ஒன்றரை மணிநேரத்தில் பிரிட்டன் அரசு அதாவது 8.30 மணிக்கு இந்தியாவை ரெட் லிஸ்டில் சேர்த்து இந்திய விமானங்கள் தரையிறங்கத் தடை விதித்துள்ளது. இந்த விமானம் சனிக்கிழமை இந்தியாவிற்குத் திரும்பியுள்ளது.

 தடை அறிவிப்புக்கு 40 நிமிடம் முன்

தடை அறிவிப்புக்கு 40 நிமிடம் முன்

இதேபோல் VistaJet என்னும் நிறுவனத்திற்குச் சொந்தமான ஒரு பிரைவேட் ஜெட் வெள்ளிக்கிழமை தடை உத்தரவு வருவதற்கு 40 நிமிடம் முன்பு தரையிறங்கியுள்ளது. மேலும் வியாழக்கிழமை இந்தியாவில் இருந்து கிளம்பிய 8 பிரைவேட் ஜெட்களும் ஆடம்பரமான விமானங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 லண்டன் விமானநிலையம்

லண்டன் விமானநிலையம்

மேலும் கத்தார் எக்ஸ்கியூடிவ் விமானங்கள் வியாழக்கிழமை மும்பை, அகமதாபாத் தலா ஓன்றும், டெல்லியில் இருந்து 3 விமானங்கள் கிளம்பி தடை உத்தரவு வருவதற்குச் சில மணிநேரத்திற்கு முன்பு லண்டன் விமான நிலையங்களை அடைந்துள்ளது.

 சாமானிய மக்களின் நிலை

சாமானிய மக்களின் நிலை

கடந்த ஒரு வாரமாகச் சாமானிய மக்கள் பிரிட்டன் நாட்டுக்கு செல்ல முடியாத அளவிற்கு டிக்கெட் டிமாண்ட் இருந்தது. பல அமைப்புகள் விமான நிறுவனங்களைப் பிரிட்டனுக்குக் கூடுதல் விமானத்தை இயக்க கோரிக்கை வைத்த நிலையில் பிரிட்டன் அரசு இந்திய விமானங்களுக்குத் தடை உத்தரவை விதித்துள்ளது.

 பயணங்கள் ரத்து

பயணங்கள் ரத்து

இந்தத் தடை உத்தரவால் டிக்கெட் கிடைத்து முன்பதிவு செய்தவர்கள் செல்ல முடியாமல் பயணங்கள் ரத்து செய்யப்பட்டு, புக் செய்யப்பட்ட தொகையைத் திருப்பி அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால் இங்குத் தடை உத்தரவை முன்கூட்டியே தெரிந்துகொண்டு பிரிட்டனுக்குச் சில இந்திய பணக்கார குடும்பங்கள் பறந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India super rich land in UK in private jets, Nearly hour Before UK flight curbs deadline

India super rich land in UK in private jets, Nearly hour Before UK flight curbs deadline
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X