டெல்லி: 2025ம் ஆண்டில் உலகளவில் இந்தியா ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக உருவெடுக்கும். இதே 2030ம் ஆண்டில் மூன்றாவது இடத்தை பிடிக்கும் என்றும் கணிப்புகள் வெளியாகியுள்ளது.
.
பிரிட்டனைச் சேர்ந்த, பொருளாதாரம் மற்றும் வணிக ஆராய்ச்சி மையமான, சிஇபிஆர் (CBER) அதன் ஆண்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இதில் கடந்த 2019ம் ஆண்டில் இந்தியா பிரிட்டனை பின்னுக்குத் தள்ளி, உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக முன்னேறியது. எனினும் 2020ல் மீண்டும் ஆறாவது இடத்துக்கு வந்துவிட்டது.
டாப் 3 பொருளாதார நாடுகளுக்குள் 'இந்தியா' வரும்: முகேஷ் அம்பானி

முக்கிய காரணம்
இந்தியாவின் இந்த பின்னடைவுக்கு ஒரு முக்கிய காரணம் கொரோனா பாதிப்பும் ஒன்றாகும். மேலும் இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதும் இதற்கு ஒரு காரணமாக அமைந்தது. எனினும் அடுத்த ஆண்டில் இந்தியா, 9 சதவீதம் அளவுக்கு வளர்ச்சி காணும். இதே 2022ம் ஆண்டில் 7 சதவீதம் அளவுக்கும் வளர்ச்சி பெறும்.

மூன்றாவது பெரிய பொருளாதாரம்
இதே 2030ம் ஆண்டில் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும். 2025ல் இங்கிலாந்தையும், 2027ல் ஜெர்மனியையும், 2030ல் ஜப்பானையும் விஞ்சும். பொதுவாக ஒரு நாடு பொருளாதாரத்தில் அதிகம் முன்னேறிய நிலையில், அதன் வளர்ச்சி விகிதம் குறைவது இயற்கையானது தான்.

ஜெர்மனி & ஜப்பான்
அதன்படி, 2035ம் ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 5.8 சதவீதமாக இருக்கும். டாலர் அடிப்படையில் 2030ம் ஆண்டின் முற்பகுதி வரை,
இந்தியாவை முந்தி, உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக ஜப்பான் திகழும். அதோடு ஜெர்மனியை நான்காம் இடத்திலிருந்து ஐந்தாவது இடத்திற்கும் தள்ளும்.

முதல் காலாண்டில் வீழ்ச்சி
கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக இந்தியாவின் பொருளாதாரம் அதன் வளர்ச்சி வேகத்தை தற்போது இழந்துள்ளது. இதற்கிடையில் கடந்த ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான இரண்டாவது காலாண்டில், இந்தியாவின் ஜிடிபி விகிதம் -23.9 சதவீதமாக சரிந்தது. ஆக கொரோனா கிட்டதட்ட இந்தியாவின் கால் பங்கு வளர்ச்சியினை வாரிச் சுருட்டிக் கொண்டு சென்று விட்டது.

கொரோனாவால் பாதிப்பு
உலகளவில் கொரோனா காரணமாக தேவைகள் சரிந்தது, நாடு தழுவிய முழு லாக்டவுன் காரணமாக, உள்நாட்டு தேவைகளும் பாதித்தது, ஆக இதுவும் இந்த சரிவுக்கு முக்கிய காரணமாக அமைந்தது. எனினும் தற்போது கட்டுப்பாடுகள் படிப்படியாக நீக்கப்பட்டதால், பொருளாதாரத்தின் பல பகுதிகள் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. சில துறைகள் மீண்டுள்ளன. இருப்பினும், நிலைமை இன்னும் தொற்று நோய் பாதிப்புக்கு முந்தைய நிலைகளுக்கு பின்னால் தான் உள்ளது.