உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா 2050க்குள் மாறும்.. lancet ஆய்வு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியா அடுத்த 2050 வாக்கில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமான மாறும் என்று ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

 

அதோடு 2030க்குள் உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக மாறும் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.

இது குறித்து வெளியான ஆய்வறிக்கையில், சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு அடுத்த படியாக இந்தியா இருக்கும் என லான்சென்ட் மெடிக்கல் ஜர்னலின் (Lancent Medical Journal) ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

தங்கம் கொடுக்க போகும் ஜாக்பாட்.. இதோ இரண்டாவது அலர்ட்.. கோர்வஸ் கோல்டு சொன்ன செம நியூஸ்..!

நிதி ஆயோக் தலைவர் என்ன சொன்னார்?

நிதி ஆயோக் தலைவர் என்ன சொன்னார்?

மத்திய அரசின் மதிப்பீடும் இதே தகவலை அளிக்கிறது நிதி ஆயோக் தலைவர் ராஜீவ் குமார், இந்த ஆண்டு மே மாதம் வெளியிட்ட அறிக்கையில், 2047ம் ஆண்டில் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும் என்று கூறினார்.

மூன்றாவது இடத்திற்கு இந்தியா முன்னேறும்

மூன்றாவது இடத்திற்கு இந்தியா முன்னேறும்

கடந்த ஆண்டு டிசம்பரில், ஜப்பானின் பொருளாதார ஆராய்ச்சி மையம் (Center for Economic Research, Japan) தனது ஒரு ஆராய்ச்சியில் 2029ம் ஆண்டில் இந்தியா ஜப்பானை முந்திக்கொண்டு உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும் என்று கூறியது. ஜப்பானின் இந்த மதிப்பீடு கொரோனா வைரஸ் பரவலுக்கு முந்தைய மதிப்பீடு ஆகும்.

2025ல் 5 டிரில்லியன் டாலர் கஷ்டம்
 

2025ல் 5 டிரில்லியன் டாலர் கஷ்டம்

ஆனால் கொரோனா பெருந்தொற்றுநோய் காரணமாக, 2025 வாக்கில், இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறுவதற்கு சிறிது தாமதமாகலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதோடு சீனாவிலும் இந்தியாவிலும் உழைக்கும் மக்கள்தொகையில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது என்றும் லான்செட் பத்திரிகை எச்சரித்தது. அதே நேரம் நைஜீரியாவில் உழைக்கும் மக்கள் தொகை அதிகரிக்கும் என்றும் ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.

இந்தியா முதலிடம்

இந்தியா முதலிடம்

எனினும் உழைக்கும் மக்கள் தொகை அடிப்படையில் இந்தியா முதலிடத்திலேயே இருக்கும். 2100 வரை இந்தியா உலகளவில் மிகப்பெரிய உழைக்கும் மக்கள் தொகை கொண்ட நாடாக இருக்கும் என்று அந்த ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. இந்தியாவை அடுத்து நைஜீரியா, சீனா மற்றும் அமெரிக்கா இருக்கும் என ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India will be third largest economy by 2050

According to the medical journal Lancet found paper said, Indian economy is set to become the third largest in the world behind China and the US by 2050 and retain the same position in 2100
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X