இனி இஎம்ஐயில் தங்கம் வாங்கலாம்.. இந்தியாகோல்டின் சூப்பர் திட்டம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் முன்னணி ஃபின்டெக் நிறுவனமான இந்தியாகோல்டு (Indiagold) நிறுவனம் டிஜிட்டல் தங்க சேவையை தொடங்கியுள்ளது.

 

இது EasyGold என்ற சேவை மூலமாக ஆரம்பித்துள்ளது. இந்த சேவை மூலமாக வாடிக்கையாளர்கள் இனி இஎம்ஐ மூலமாக கூட தங்கம் வாங்கிக் கொள்ளலாம்.

இது குறித்து வெளியான செய்தியொன்றில், கடந்த 3 - 4 மாதங்களாக இந்த தயாரிப்பை வழங்கி வரும் இந்தியாகோல்டு, இதற்காக உலோக நிறுவனமான ஆக்மொன்ட்கோல்டு நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த கூட்டணி ஏற்கனவே இந்த திட்டத்தின் மூலம் 1500 ஆர்டர்களை பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

20% மட்டும் செலுத்தி தங்கம் வாங்கலாம்

20% மட்டும் செலுத்தி தங்கம் வாங்கலாம்

மேலும் இந்த ஸ்டார்டப் நிறுவனம், பயனர்கள் வாங்க விரும்பும் தங்கத்தின் மதிப்பில் 20% முன்பணமாக செலுத்துவதன் மூலம், மொத்த தங்கத்தின் விலையையும் லாக் செய்ய அனுமதிக்கிறது. இந்த திட்டமானது வாடிக்கையாளர்களுக்கு தேய்மானம், மதிப்பு கூடுதல் அல்லது குறைதல் என்ற பிரச்சனையில் இருந்து பாதுகாக்கிறது. ஆக உங்களின் முதலீட்டின் மதிப்பு அப்படியே இருக்கும்.

மீத தொகையை இஎம்ஐ ஆக செலுத்தலாம்

மீத தொகையை இஎம்ஐ ஆக செலுத்தலாம்

ஒரு வேளை தங்கத்தின் மதிப்பு குறைந்தாலும், நீங்கள் வாங்கி வைத்திருக்கும் மதிப்பு குறையாது. பயனர்கள் 20% தொகையை செலுத்தி தங்கமாக வாங்கும்போது, மீதமுள்ள தொகையை மூன்று, ஆறு அல்லது ஒன்பது மாதங்களில் செலுத்தலாம். அதோடு ஈஸிகோல்டு பயனர்களை 5000 ரூபாய்க்கும் குறைவான தங்கத்தினையும் வாங்க அனுமதிக்கிறது. ஆக மொத்தில் நீங்கள் இறுதி தொகையை செலுத்தும்போது, பயனர்களின் வீடுகளூக்கே தங்கமானது அனுப்பப்படுகிறது.

தங்கத்தினை எப்படியெல்லாம் வாங்கிக் கொள்ளலாம்?
 

தங்கத்தினை எப்படியெல்லாம் வாங்கிக் கொள்ளலாம்?

தற்போது பயனர்கள் தங்களது தங்கத்தினை ஈஸிகோல்டு மூலம், காயின்களாகவும், வளையல்களாகவும், காதில் அணியும் காதனிகளாகவும், செயிங்களாகவும், இந்தியாகோல்டின் இணையம் அல்லது ஆண்டிராய்ட் மூலமாகவும் வாங்கிக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. இதன் மூலம் பயனர்கள் தங்களது சம்பளத்திற்கு ஏற்ப முதலீடு செய்து கொள்ள முடியும்.

ரத்தும் செய்து கொள்ளலாம்

ரத்தும் செய்து கொள்ளலாம்

தற்போது ஈஸிகோல்ட் வாடிக்கையாளர்களில் பெரும்பாலோர் அடுக்கு 2 மற்றும் அடுக்கு 3 சேர்ந்தவர்கள். தென்னிந்தியாவில் இருந்து 60% மக்கள் விஜயவாடா மற்றும் வாரங்கள் உள்ளிட்ட நகரங்களில் வசிக்கின்றனர். மேலும் இந்த திட்டத்தில் வாடிக்கையாளார்கள் எப்போது வேண்டுமானாலும் தங்கம் வாங்குவதை ரத்து செய்யலாம். இதற்காக 2% கமிஷன் செலுத்த வேண்டியிருக்கும்.

டெலிவரி எப்படி?

டெலிவரி எப்படி?

இந்தியாகோல்டு நிறுவனம் டெலிவரி தேவைக்காக இந்தியா போஸ்ட் மற்றும் ப்ளூடார்ட் கொரியருடன் ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இது இலவசமாக ஷிப்பிங் செய்யப்படுவதோடு, இன்சூரன்ஸிம் உண்டு என இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாகோல்டின் இந்த திட்டம் வாடிக்கையாளர்களை அவர்களின் பட்ஜெட்டிற்குள் தங்கம் வாங்க வழிவகுக்கிறது.

நகைக்கடனும் உண்டு

நகைக்கடனும் உண்டு

இதன் மூலம் தங்கம் விலை அதிகரிக்கின்றது என்ற கவலை தேவையில்லை. அதே போல தங்கத்தின் தூய்மை பற்றியும் கவலைபடத் தேவையில்லை. ஹால்மார்க் நகைகளையும் பெற்றுக் கொள்ளலாம். மேலும் உங்களது தங்கத்திற்கு ஈடாக கடனையும் பெற்றுக் கொள்ள முடியும். ஆக வாடிக்கையாளர்களுக்கு தேவையான அனைத்து சேவைகளையும் இந்த ஸ்டார்டப் நிறுவனம் வழங்குவதாக தெரிவித்துள்ளது.

நிறுவனம் பற்றி

நிறுவனம் பற்றி

இந்தியாகோல்டு நிறுவனம் 2020ம் ஆண்டில் நிறுவப்பட்டது. இது பேடிஎம்மின் முன்னாள் அதிகாரிகளாக மிஸ்ரா மற்றும் அப்போட் இருவருன் இணைந்து ஆரம்பித்தனர். இவர்கள் உடனடி தங்க கடனை வழங்கி வருகின்றனர். அதோடு மாத 99 ரூபாய் கமிஷனுக்கு தங்க லாக்கர் சேவையும் வழங்குகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Indiagold allows EMI based gold purchase product EasyGold

Indiagold updates.. Indiagold allows EMI based gold purchase product EasyGold
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X