வெறும் 1 டாலருக்கு UAE எக்ஸ்சேஞ்ச் நிறுவனம் விற்பனை.. பிஆர் ஷெட்டி-யின் வீழ்ச்சி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஐக்கிய அரபு எமிரேட்ஸ்-ஐ தலைமையிடமாகக் கொண்டு உலகில் 45 நாடுகளில் நேரடியாகவும், 170 நாடுகளில் கூட்டணி வாயிலாகவும் பணப் பரிமாற்றம் மற்றும் வெளிநாட்டு நாணய பரிமாற்ற சேவை அளிக்கும் UAE எக்ஸ்சேஞ்ச் நிறுவனம் மற்றும் அதன் தாய் நிறுவனமான Finablr நிறுவனத்தின் உலகளாவிய வர்த்தகத்தை வெறும் 1 டாலருக்கு இஸ்ரேல் நாட்டின் பிரிசம் குரூப்-ன் குளோபல் பின்டெக் இன்வெஸ்ட்மென்ட் ஹோல்டிங் (GFIH) நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

 

குளோபல் பின்டெக் இன்வெஸ்ட்மென்ட் ஹோல்டிங் (GFIH) நிறுவனம் மற்றும் அபுதாபி ராயல் மூலோபாயக் கூட்டணி (RSP) உடன் இணைந்து இந்த UAE எக்ஸ்சேஞ்ச் மற்றும் அதன் தாய் நிறுவனமான Finablr நிறுவனத்தின் வர்த்தகத்தை 1 டாலருக்கு கைப்பற்றியுள்ளது.

பிஎப் பேலென்ஸ் செக் செய்ய எளிதான 4 வழிகள்.. டிசம்பர்-க்குள் 8.5% வட்டி வருமானம் கிடைக்கும்..!

Finablr நிறுவனம்

Finablr நிறுவனம்

2019 நிலவரத்தின் படி சுமார் 2 பில்லியன் டாலர் மதிப்பிலான Finablr நிறுவனத்தை, இந்தியரான பிஆர் ஷெட்டி உருவாக்கினார். இந்த நிறுவனத்தின் மீது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மத்திய வங்கி அறிவித்த கட்டுப்பாடுகளின் வாயிலாகச் சுமார் 1 பில்லியன் டாலர் அளவிலான மோசடி வெளியானது.

இதைத் தொடர்ந்து இந்நிறுவனத்தின் வர்த்தகம் தற்போது 1 டாலருக்கு விற்பனை செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

பிஆர் ஷெட்டி

பிஆர் ஷெட்டி

பிஆர் ஷெட்டி தலைமையிலான UAE எக்ஸ்சேஞ்ச் மற்றும் அதன் தாய் நிறுவனமான Finablr லண்டன் பங்குச்சந்தையில் பட்டியலிட்டுள்ள நிறுவனங்கள் ஆகும். இந்த நிறுவனம் பெருமளவிலான வெளிநாட்டுப் பணப் பரிமாற்ற வர்த்தகத்தைக் கொண்டுள்ளது, குறிப்பாக வெளிநாட்டில் இருக்கும் இந்தியர்கள் இந்நிறுவனத்தின் பணப் பரிமாற்ற சேவைகளை அதிகளவில் பயன்படுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
 

ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

மார்ச் மாதம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்-ன் மத்திய வங்கி (CBUAE) UAE எக்ஸ்சேஞ்ச் நிறுவனத்தின் மீது கட்டுப்பாடுகளை விதித்தது. இதுமட்டும் அல்லாமல் UAE மத்திய வங்கி இந்நிறுவனத்தின் நிர்வாகம் மற்றும் கணக்குகளை நேரடியாக ஆய்வு செய்ய முடிவு செய்து அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டது. UAE மத்திய வங்கியின் கட்டுப்பாடுகளும், அறிவிப்பும் இந்நிறுவனத்தைப் பெரிய அளவில் பாதித்தது.

1 பில்லியன் டாலர்

1 பில்லியன் டாலர்

ஐக்கிய அரபு எமிரேட்ஸ்-ன் மத்திய வங்கி செய்த ஆய்வில் UAE எக்ஸ்சேஞ்ச் நிறுவனத்தின் தாய் நிறுவனமான Finablr சுமார் 1 பில்லியன் டாலர் மதிப்பிலான கடனை நிர்வாகக் குழுவிடம் இருந்து மறைத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

NMC ஹெல்த் நிறுவனம்

NMC ஹெல்த் நிறுவனம்

இதைத் தொடர்ந்து Finablr நிறுவனத்தின் துணை நிறுவனமான NMC ஹெல்த் நிறுவனம் பண இருப்பின் அளவை அதிகமாகவும், கடன் அளவை குறைவாகவும் காட்டுகிறது என அமெரிக்க முதலீட்டு நிறுவனம் குற்றம்சாட்டியது.

இந்த இரண்டும் பிஆர் ஷெட்டியின் வர்த்தகச் சாம்ராஜ்ஜியத்தை தலைகீழாகப் புரட்டிப்போட்டது.

ஹெல்த்கேர் நிறுவன

ஹெல்த்கேர் நிறுவன

Finablr நிறுவனத்தின் துணை நிறுவனமான NMC ஹெல்த் நிறுவனம் ஐக்கிய அரபு அமீரகத்தில் முன்னணி ஹெல்த்கேர் நிறுவனமாகும். இந்நிறுவனம் லண்டன் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு உள்ள நிலையில் NMC ஹெல்த் நிறுவனம் சுமார் 10 பில்லியன் டாலர் அளவிலான மதிப்பீட்டை பெற்று இருந்தது.

பிஆர் ஷெட்டி

பிஆர் ஷெட்டி

1975ல் இந்தியாவில் இருந்து அபுதாபிக்கு வந்த பிஆர் ஷெட்டி சுமார் 3.1 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் மிகப்பெரிய வர்த்தகச் சாம்ராஜ்ஜியத்தைக் கட்டமைத்த நிலையில், சில மோசடிகள் இவரது நிறுவனத்தை வீழ்ச்சி அடைய செய்துள்ளது.

1 டாலருக்கு கைப்பற்றியது

1 டாலருக்கு கைப்பற்றியது

தற்போது இஸ்ரேல் நாட்டின் GFIH மொத்த வர்த்தகத்தையும் 1 டாலருக்குக் கைப்பற்றியுள்ள நிலையில் வர்த்தகத்தைத் தொடர்ந்து நடத்த போதுமான நிதியுதவியை முதலீடாகச் செலுத்த உள்ளது. மேலும் GFIH நிறுவனத்தின் முதலீடு மூலம் பங்கு முதலீட்டாளர்கள், ஊழியர்கள், கடன் கொடுத்தவர்கள் என அனைத்து தரப்பினருக்கும் நம்பிக்கை அளிக்கும் என Finablr நிறுவனம் லண்டன் பங்குச்சந்தையில் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Indian billionaire BR Shetty's UAE Exchange sold for $1 to Israel Prism Group

Indian billionaire BR Shetty's UAE Exchange sold for $1 to Israel Prism Group
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X