24 மணிநேரத்தில் 4 மடங்கு உயர்வு.. இந்தியர்கள் வேற லெவல்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2020ல் பட்டையைக் கிளப்பி வந்த பிட்காயின், 2021ல் பல்வேறு காரணங்களுக்காக அதிகளவிலான வர்த்தகப் பாதிப்புகளை எதிர்கொண்டு 40000 டாலரில் இருந்து 3000 டாலருக்குச் சரிந்தது.

 

ஆனால் பிப்ரவரி மாத துவக்கம் முதல் ஏறுமுகத்திலிருந்த பிட்காயின் மீது எலான் மஸ்க் தலைமை வகிக்கும் உலகின் மிகப்பெரிய எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா பிட்காயின் மீது சுமார் 1.5 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டைச் செய்துள்ளது.

இந்த அறிவிப்பு வெளியான அடுத்த 24 மணிநேரத்தில் இந்திய கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்ச் மற்றும் டிரேடிங் தளத்தில் முதலீட்டுக்கான கோரிக்கைக்கான எண்ணிக்கை 4 மடங்கு அதிகரித்துள்ளது. டெஸ்லா-வின் பிட்காயின் மீதான முதலீடு இந்திய முதலீட்டாளர்களுக்குப் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

WazirX தளம்

WazirX தளம்

பிட்காயின் மற்றும் கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்ச் தளமான WazirX தளத்தில் டெஸ்லா அறிவிப்பு வெளியான அடுத்த சில 24 மணிநேரத்தில் முதலீட்டாளர்கள் தங்களது வர்த்தகக் கணக்கில் டெப்பாசிட் செய்வதற்காக request அளவீடுகள் 300 சதவீதம் அதிகரித்தது என இத்தளத்தின் நிறுவனர் நிஷ்சால் ஷெட்டி தெரிவித்தார்.

காயின்ஸ்விச் கூபர்

காயின்ஸ்விச் கூபர்

இதேபோல் பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்டு இருக்கும் காயின்ஸ்விச் கூபர் தளத்தில் டெப்பாசிட் செய்வதற்கான கோரிக்கைகள் எண்ணிக்கை கிட்டத்தட்ட 200 சதவீதம் அதிகரித்துள்ளது என இந்நிறுவனத் தலைவர் சரன் நாயர் தெரிவித்துள்ளார்.

கிரிப்டோகரன்சி தளம்
 

கிரிப்டோகரன்சி தளம்

இத்தளங்களில் இருக்கும் கிரிப்டோகரன்சி முதலீட்டாளர்கள் திடீரென அதிக எண்ணிக்கை டெபாசிட் செய்யக் கோரிக்கைகள் வைக்கத் துவங்கியதால் பரிமாற்றங்கள் முழுமை அடைய காலத் தாமதம் ஆனது குறிப்பிடத்தக்கது. இந்தியச் சந்தையில் இருக்கும் கிரிப்டோகரன்சி வர்த்தகச் சந்தையில் அதிகளவிலான முதலீட்டாளர்கள் இல்லாத காரணத்தால் திடீரென முதலீட்டாளர்கள் வந்த காரணத்தால் இத்தளத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

மசோதா

மசோதா

இந்தியாவில் கிரிப்டோகரன்சி வர்த்தகம் மற்றும் அதன் வர்த்தகத்தை முறைப்படுத்த மத்திய அரசு புதிய மசோதா கொண்டுவரத் திட்டமிட்டு வருகிறது. இதேவேளையில் ரிசர்வ் வங்கி ரூபாய் மதிப்பில் புதிய கிரிப்டோகரன்சியை உருவாக்க ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Indian Bitcoin Trading Rallies 4 Times After Tesla investment

Indian Bitcoin Trading Rallies 4 Times After Tesla investment
Story first published: Wednesday, February 10, 2021, 18:09 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X