வரலாற்று உச்சத்தை தொட காத்திருக்கும் இந்திய பொருளாதாரம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய பொருளாதாரம் ஜூன் காலாண்டில் வரலாற்று உச்சத்தை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் இந்த வளர்ச்சி நாட்டின் பொருளாதார வளர்ச்சிப் பாதையைப் பிரதிபலிக்காது எனவும் சந்தை வல்லுனர்கள் கூறுகின்றனர்.

 

தங்கம் வாங்க இது தான் சரியான நேரம்.. சவரனுக்கு எவ்வளவு குறைஞ்சிருக்கு பாருங்க...!

இந்திய பொருளாதார வளர்ச்சி

இந்திய பொருளாதார வளர்ச்சி

ஏப்ரல் - ஜூன் காலாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 20 சதவீதம் வரையில் வளர்ச்சி அடையும் என ரெயூட்டர்ஸ் தளத்தில் 40 பொருளாதார வல்லுனர்கள் இணைந்து கணித்துள்ளனர். இதேபோல் எஸ்பிஐ வங்கியின் ECOWRAP அறிக்கையில் நாட்டின் பொருளாதாரம் இக்காலகட்டத்தில் 18.5 சதவீதம் வரையில் வளர்ச்சி அடையும் எனக் கணித்துள்ளது.

ரிசர்வ் வங்கி கணிப்பு

ரிசர்வ் வங்கி கணிப்பு

மேலும் ரிசர்வ் வங்கி ஜூன் காலாண்டின் பொருளாதார வளர்ச்சி அளவீட்டை 26.2 சதவீதத்தில் இருந்து 21.4 சதவீதமாகக் குறைத்துள்ளது. இதேபோல் இந்தியா ரேட்டிங்ஸ் & ரிசர்ச் ஜூன் காலாண்டில் நாட்டின் வளர்ச்சி 9.4 சதவீதமாக இருக்கும் எனக் கணித்துள்ளது.

பொருளாதாரம் வீழ்ச்சி
 

பொருளாதாரம் வீழ்ச்சி

கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி யாரும் எதிர்பார்க்காத வகையில் கொரோனா தொற்று மற்றும் நாடு முழுவதும் அறிவிக்கப்பட்ட லாக்டவுன் கட்டுப்பாடுகள் ஆகியவற்றின் மூலம் -24.4 சதவீதம் வரையில் சரிந்தது.

Low base Effect அடிப்படை

Low base Effect அடிப்படை

இதை ஒப்பிடுகையில் தற்போது நாட்டின் பொருளாதாரம் 20 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியைப் பதிவு செய்யும் எனக் கணிக்கப்படுகிறது. இது Low base Effect அடிப்படையிலான வளர்ச்சி தான் என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.

ஜிடிபி அளவு

ஜிடிபி அளவு

அரசின் அதிகாரப்பூர்வ தரவுகள் செவ்வாய்க்கிழமை மாலைக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வளர்ச்சி அளவீடுகளை வைத்து நாட்டின் வளர்ச்சி அளவீட்டை முழுமையாகக் கணிக்க முடியாது. இதேபோல் ஜிடிபி அளவில் இதை வெளியிட்டால் சரியானதாக இருக்கும்.

பங்குச்சந்தை வர்த்தகம்

பங்குச்சந்தை வர்த்தகம்

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அளவீடுகள் பங்குச்சந்தை வர்த்தகத்தில் சில அதிர்வுகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஜிடிபி தரவுகள் வெளிநாட்டு முதலீட்டாளர்களை பங்குச்சந்தையில் முதலீடு செய்ய ஈர்க்கும் முக்கியக் காரணியாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கியக் காரணிகள்

முக்கியக் காரணிகள்

இதேபோல் இந்தியாவில் ஜூன் காலாண்டில் RTO கலெக்ஷன், மின்சாரப் பயன்பாடு, போக்குவரத்து, ஜிஎஸ்டி வரி வசூல், பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாட்டு அளவு ஆகிய அனைத்து காரணிகளும் வளர்ச்சி அடைந்து, நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் முக்கியக் காரணியாக அமைந்துள்ளது.

இந்திய பொருளாதாரம் 20% வளர்ச்சி

இந்திய பொருளாதாரம் 20% வளர்ச்சி

மேலும் இந்திய பொருளாதாரம் ஜூன் காலாண்டில் 20 சதவீதம் வரையிலான வளர்ச்சியை அடைந்தால், இந்தியா வேகமாக வளர்ச்சி அடைந்து வருவதை உறுதி செய்வதாகப் பொருள், ஆனால் அரசு வெளியிடும் தரவுகளில் நாட்டின் பொருளாதாரத்தின் நிலை என்ன..?

மார்ச் காலாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி அளவீடு 1.6 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Indian Economy may post record GDP growth in April-June quarter

Indian Economy may post record GDP growth in April-June quarter
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X