பட்ஜெட் 2020: இந்தியாவின் முந்தைய தலையெழுத்து இது தான்.. இனியாவது மாறுமா..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாட்டின் பொருளாதாரம் படுவீழ்ச்சியில் இருக்கும் இந்த நிலையில், நாளை மத்திய அரசால் தாக்கல் செய்யப்படவிருக்கும் பட்ஜெட் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

 

இந்த நிலையில் இந்தியாவின் முந்தைய தலையெழுத்து, அதாவது இந்தியாவின் முந்தைய வளர்ச்சி, மற்றும் வரி வசூல், நுகர்வோர் குறியீடுகள் என பலவற்றை பற்றித் தான் இக்கட்டுரையில் பார்க்க போகிறோம்.

அதிலும் பெரும் ஏற்றத் தாழ்வுகளுக்கு மத்தியில் வாழும் நமக்கு, இந்த பட்ஜெட் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகவே கருதப்படுகிறது.

உச்சத்தில் உணவு பணவீக்கம்

உச்சத்தில் உணவு பணவீக்கம்

ஏனெனில் நடப்பு நிதியாண்டில் அந்தளவுக்கு பொருளாதாரம் ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி கண்டுள்ளது. அது எந்த அளவுக்கு எனில் கடந்த 2008லிருந்து மிக மோசமான வீழ்ச்சியைக் கண்டுள்ளது. குறிப்பாக சொல்லப்போனால் உயர்ந்த பணவீக்கம், அதிலும் ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உணவு பணவீக்கமானது உச்சத்தைக் கண்டுள்ளது.

வரி வருவாய் வீழ்ச்சி

வரி வருவாய் வீழ்ச்சி

அடுத்ததாக அரசுக்கு முக்கிய வருவாயாக கருதப்படும் வரி வருவாய் வீழ்ச்சி, 2019 - 20 ஆண்டிற்கான நிகர வரி வசூல் 25% உயர்வு இருக்கலாம் என அரசாங்கம் கணித்திருந்தது, ஆனால் கடந்த நவம்பர் வரையில் கூட வரி வருவாய் 2.6% மட்டுமே வளர்ச்சி கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிதியாண்டு முடிய இன்னும் சில மாதங்கள் இருந்தாலும் அரசின் இந்த பெரிய வரி இலக்கை அடைவது கஷ்டம் தான் என்றும் கூறப்படுகிறது. இது பற்றாக்குறையை சரி செய்ய போதாது என்றும் கூறப்படுகிறது.

வளர்ச்சி எதிர்பார்ப்பு
 

வளர்ச்சி எதிர்பார்ப்பு

அதிலும் நாட்டில் தற்போது நிலவி வரும் மோசமான பொருளாதார நிலையில், மத்திய அரசின் பொருளாதார இலக்கான 5 டிரில்லியன் டாலரை அடைய முடியுமா? ஏனெனில் தற்போது 2.7 டிரில்லியன் டாலர் வரை தான் உயர்ந்துள்ளது. ஆக அரசின் இலக்கினை அடைய வருடத்திற்கு 9 - 10% வளர்ச்சி இருந்தால் மட்டுமே இது சாத்தியமான விஷயம் என்றும் கருதப்படுகிறது.

வளர்ச்சி திருத்தம்

வளர்ச்சி திருத்தம்

சர்வதேச நாணய நிதியம் இந்தியாவின் வளர்ச்சியை 6.1% கணித்திருந்த நிலையில், அதை 4.8% திருத்தியுள்ளது. இது ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான வீழ்ச்சியாகும். இதே போல உலகப் பொருளாதார வளர்ச்சியையும் குறைத்து கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அரசை கேள்வி எழுப்பும் நிபுணர்கள்

அரசை கேள்வி எழுப்பும் நிபுணர்கள்

ஆக இது போன்ற பெரும் சவால்களை கருத்தில் கொண்டு பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு, ஊக்குவிக்கவும், நுகர்வோர் நம்பிக்கை மற்றும் வேலையின்மையை சரிசெய்யவும் பணமில்லா ஒரு அரசாங்கம் என்ன செய்ய முடியும் என்றும் நிபுணர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இந்த நிலையில் நாட்டின் நிதிபற்றாக்குறையும் விஸ்வரூபம் எடுத்து ஆடி வருகிறது. அதிலும் நுகர்வோர் விலைக் குறியீடானது கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. அதே போல ஜிடிபி விகிதமானது ஆண்டுக்கு ஆண்டு தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகிறது, கடந்த 2015ல் 8% ஆக இருந்த நிலையில், 2018ல் 6.8% ஆகவும், இதே 2019ல் 5%ஆகவும், இதே 2020ல் 5% ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

பட்ஜெட்டில் எதிர்பார்ப்பு

பட்ஜெட்டில் எதிர்பார்ப்பு

இதே நேரம் உற்பத்தி துறை, உள்கட்டமைப்பு, வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள், ஆட்டோமொபைல் துறை, முதலீடு என அனைத்திலும் படு வீழ்ச்சி கண்டுள்ளது. இந்த நிலையில் நாளை தாக்கல் செய்யப்படவிருக்கும் பட்ஜெட் 2020ல் ஊக்குவிப்பு நடவடிக்கைகள் நிச்சயம் இருக்கலாம் என்றும் அனைத்து தரப்பு மக்களும் எதிர்பார்க்கின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Indian economy numbers in past years

Indian economic indicators are still pointing in the wrong way. so Indian peoples are looking to nirmala sitharaman’s Budget 2020 to revive growth.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X