ஸ்விக்கி, சொமாட்டோ, ஃபுட் பாண்டா.. எல்லாருமே கொடூர நஷ்டத்தில்..! இனி கம்பெனி இருக்குமா..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களூரு, கர்நாடகா: இந்தியாவின் சிலிக்கான் வேலி என்று செல்லமாக அழைக்கப்பட்டாலும், கலிஃபோர்னியா போலவே குளு குளு என தட்ப வெப்பநிலை இருந்தாலும், பெங்களூர் என்கிற நகரம் வியாபார வெப்பம் கக்கும் தேசம் தான்.

 

சமீபத்தில், கேஃப் காபி டே உரிமையாளர் வி ஜி சித்தார்த்தா, கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டது ஒரு சிறந்த உதாரணம். பெங்களூரில் ஒரு வருடத்துக்கு எத்தனையோ பேர் புதிதாக வியாபாரம் தொடங்கி, அடுத்த ஐந்து - 10 வருடத்தில் அம்பானி, அதானி ஆகிவிட நினைக்கிறார்கள்.

ஆனால் எதார்த்தத்தில், ஐந்து வருடங்கள் தாண்டி, 100-ல் 10 கம்பெனிகள் வியாபாரத்தில் தாக்கு பிடித்தாலே பெரிய விஷயமாக இருக்கிறது. சரி உணவு டெலிவரி சிக்கலுக்கு வருவோம்.

ஃபுட் பாண்டா (Food Panda)

ஃபுட் பாண்டா (Food Panda)

பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் உணவு டெலிவரி நிறுவனங்களில் ஃபுட் பாண்டாவும் ஒன்று. அட நம்ம ஓலா இருக்குல்லங்க, அவங்களோட துணை நிறுவனம் தாங்க இந்த ஃபுட் பாண்டா. கடந்த டிசம்பர் 2017-ல் தான் ஒரு பெரிய தொகைக்கு, ஃபுட் பாண்டாவை வளைத்தது ஓலா.

ஸ்டார்ட் அப் நஷ்டம்

ஸ்டார்ட் அப் நஷ்டம்

பொதுவாக, ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனத்தைத் தொடங்கி, அதை ஒழுங்காக நடத்தி, பிரேக் ஈவன் செய்து, சரியாக போட்ட காசை எடுப்பதே பெரிய விஷயம். இந்த ஃபுட் பாண்டா என்கிற நிறுவனம் இந்த வேலையை இன்னும் செய்து முடிக்கவில்லை போல் இருக்கிறது. தொடர்ந்து நஷ்டம்.

எவ்வளவு நஷ்டம்
 

எவ்வளவு நஷ்டம்

இந்த 2018 - 19 நிதி ஆண்டில் மட்டும், ஓலாவின் துணை நிறுவனமாக இருக்கும், ஃபுட் பாண்டா சுமார் 756 கோடி ரூபாயை நஷ்டமாகக் கணக்கு காட்டி இருக்கிறார்களாம். இதற்கு முந்தைய 2017 - 18 நிதி ஆண்டில் காட்டிய நஷ்டத்தை விட 2018 - 19-ல் 230 % அதிக நஷ்டமாம்.

செலவுகள் அதிகம்

செலவுகள் அதிகம்

இப்படி கொடூரமாக நஷ்டம் அதிகரிக்கக் காரணம் டெலிவரி செலவுகள், தள்ளுபடி செலவுகள் மற்றும் உணவு ஆர்டர் செலவுகள் தானாம். முந்தைய ஆண்டை விட இந்த 2018 - 19 நிதி ஆண்டில் உணவு டெலிவரி செலவுகள் 8 மடங்கு அதிகரித்து 267 கோடியைத் தொட்டு இருக்கிறதாம்.

மற்ற செலவுகள் விவரம்

மற்ற செலவுகள் விவரம்

அதே போல, ஃபுட் பாண்டாவின் தள்ளுபடி செலவுகள் மட்டும் 9 மடங்கு அதிகரித்து 137 கோடி ரூபாயைத் தொட்டு இருக்கிறதாம். அதனைத் தொடர்ந்து உணவு ஆர்டர்கள் மூலம் வந்த நஷ்டம் மட்டும் 40 கோடி ரூபாயாம். இப்படி செலவுகள் 8 மடங்கு 9 மடங்கு எனக் கூடும் போது வருமானமும் கூட வேண்டுமே..?

சிக்கல்

சிக்கல்

அங்கு தான் சிக்கலே. இத்தனை கோடிக் கணக்கில் செலவு செய்தாலும், வருவாய் மட்டும் பெரிய அளவில் அதிகரிக்கவில்லை. கடந்த 2017 - 18 நிதி ஆண்டுடன், 2018 - 19 நிதி ஆண்டில் ஈட்டிய 82 கோடி ரூபாய் வருவாயை ஒப்பிட்டால் வெறும் 11 சதவிகிதம் தான் வருவாய் அதிகரித்து இருக்கிறதாம்.

மற்ற நிறுவனங்கள்

மற்ற நிறுவனங்கள்

உணவு டெலிவரியில் ஜாம்பவான்களாக இருக்கும் ஸ்விக்கி கடந்த நிதி ஆண்டை விட, 6 மடங்கு நஷ்டம் அதிகரித்து 2018 - 19 நிதி ஆண்டுக்கு 2,364 கோடி ரூபாயை நஷ்டமாகச் சொல்லி இருக்கிறது. அதே போல சொமாட்டோவின் நஷ்டம் கடந்த 2017 - 18 நிதி ஆண்டை விட, 24 மடங்கு நஷ்டம் அதிகரித்து 2018 - 19 நிதி ஆண்டில் 2,058 கோடி ரூபாய் நஷ்டம் அடைந்து இருக்கிறது.

பயமா இருக்கு

பயமா இருக்கு

இப்படி இந்தியாவின் உணவு டெலிவரி நிறுவனங்களின் நஷ்டம் மட்டும் சுமார் 1 பில்லியன் டாலரைத் தொடுமாம். இதே நிலை நீடித்தால், இந்தியாவில் இருக்கும் உணவு டெலிவரி நிறுவனங்கள், தங்கள் கடையை மூடிவிட்டு கிளம்பி விடுவார்களோ..? அல்லது நிறுவனத்தை வேறு யாரிடமாவது விற்றுவிடுவார்களோ..? என ஒரு வித அச்சம் தான் நம்மைப் பிடிக்கிறது. எல்லோரும் நன்றாக இருந்தால் சரி.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

indian food delivery companies loss is widening

Indian Food delivery companies like Swiggy, Zomato, Food panda are facing heavy loss and its widening year on year.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X