இந்தியாவில் பணவீக்கம் என்பது மிக மோசமான அளவில் உள்ள நிலையில், தொடர்ந்து 3 மாதங்களுக்கும் மேலாக அரசின் இலக்கினை தாண்டியுள்ளது. அரசின் விலைவாசியினை கட்டுப்படுத்த தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
ஆரம்பத்தில் கோதுமை ஏற்றுமதி தடை விதித்தது. அதன் பிறகு பெட்ரோல், டீசல் மீதான வரி விகிதத்தினை குறைப்பு என பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது.
தற்போது அந்த லிஸ்டில் ஸ்வீட்டான ஒரு அறிவிப்பினை கொடுத்துள்ளது எனலாம். அது சர்க்கரை ஏற்றுமதிக்கு தடைவிதித்துள்ளது தான்.
ஏறிய வேகத்தில் இறங்கிய சென்செக்ஸ்.. தொடரும் மந்தநிலை..!

சர்க்கரை ஏற்றுமதிக்கு தடை
சர்க்கரை ஏற்றுமதியினை தடை செய்வதன் மூலம், அதன் விலையினை குறைக்க முடியும் என்ற அரசு நம்புகிறது. ஜூன் 1ம் தேதி முதல் சர்க்கரை ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ள அரசு, அதனை அக்டோபர் 31 முதல் தடை விதித்துள்ளது. உள்நாட்டில் சர்க்கரை இருப்பினை அதிகரிக்கவும், அதன் மூலம் அதிகரித்து வரும் விலைவாசியினை தடுக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.

சமையல் எண்ணெய் விலை சரிவு ஏன்
இது குறித்து நுகர்வோர் அமைச்சகம் அறிவித்துள்ளது. ஏற்கனவே சமையல் எண்ணெய் விலையினை கட்டுக்குள் வைக்க அரசு சுங்க வரியினை ரத்து செய்தது. ரஷ்யா உக்ரைன் பிரச்சனைக்கு மத்தியில் சன் பிளவர் ஆயில் இறக்குமதியானது வெகுவாக குறைந்துள்ளது. இதற்கிடையில் பால்ம் ஆயில் இறக்குமதிக்கும், அந்த சமயத்தில் இந்தோனேசியா தடை விதித்து பின்னர் தற்போது ஏற்றுமதி செய்ய ஆரம்பித்துள்ளது. இது சமையல் எண்ணெய் விலையை கட்டுக்குள் கொண்டு வர வழிவகுத்துள்ளது.

அனுமதியுடன் ஏற்றுமதி
மொத்தத்தில் உணவு பணவீக்கத்தினை கட்டுக்குள் கொண்டு வர அடுத்த மாதம் முதல் சர்க்கரை ஏற்றுமதியினை 100 லட்சம் மெட்ரிக் டன்னாக கட்டுப்படுத்துவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. எனினும் DGFT உத்தரவின் படி உணவு மற்றும் பொது விநியோகத் துறை இயக்குனரகத்தின் ஒப்புதலுடன் சர்க்கரை ஏற்றுமதி பகுதியளவு செய்யபடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வட்டி அதிகரிக்கலாம்
மொத்தத்தில் பணவீக்கத்தினை கட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசு எடுக்கும் முயற்சிகள் கைகொடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் பெட்ரோல், டீசல் மீதான வரியினை இன்னும் குறைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும், கோரிக்கையும் இருந்து வருகின்றது. இதற்கிடையில் இந்திய ரிசர்வ் வங்கியும் வரவிருக்கும் கூட்டத்தில் வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் இருந்து வருகின்றது. ஆக இதுவும் பணவீக்கத்தினை கொண்டு வர உதவிகரமாக இருக்கலாம்.

இதுவும் ஒரு காரணம்
முன்னதாக பல நிபுணர்களும் பணவீக்கத்தினை கட்டுக்குள் கொண்டு வர வட்டி அதிகரிப்பு மட்டுமே போதாது. அதனுடன் வரி விகிதங்களை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். இல்லையெனில் வட்டியினை குறைத்தாலும் அது பெரியளவில் கைகொடுக்காது. ஆக அரசு இதனையும் கருத்தில் கொள்ள வேண்டும் என எச்சரிக்கை விடுத்திருந்தனர். இப்படி பல்வேறு காரணங்களுக்கு மத்தியில் தான் அரசு பணவீக்கத்தினை கட்டுக்குள் கொண்டு வர தீவிர முயற்சிகளை எடுத்து வருகின்றது.