சீனாவுக்கு செக் வைக்கும் இந்தியா! அரசு என்ன சொல்கிறது?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியா நாட்டின் அண்டை நாடுகளான சீனா மற்றும் பாகிஸ்தானுடன், எப்போதுமே நமக்கு உறவுகள் மிக சிறப்பாக இருந்ததில்லை.

எதிரிக்கு எதிரி நண்பன் என்கிற கணக்கில், எப்போதும் பாகிஸ்தான் மற்றும் சீனாவுக்கான உறவு நன்றாகத் தான் இருக்கிறது.

கொரோனா வைரஸ் உலகத்தையே பிய்த்து எரிந்து கொண்டு இருக்கும் போதும் இந்தியாவின் DPIIT-யிடம் இருந்து ஒரு செய்தி வந்திருக்கிறது.

அனுமதி
 

அனுமதி

ஒரு நிறுவனம் அல்லது ஒரு நபர், இந்தியாவின் எல்லைகளை பகிர்ந்து கொள்ளும் நாட்டில் இருந்து, இந்தியாவில் வந்து முதலீடு செய்ய விரும்புகிறார்கள் என்றால், அவர்கள் அல்லது அந்த நிறுவனங்கள் அரசின் அனுமதி பெற வேண்டும் என மத்திய வணிக அமைச்சகத்தின் கீழ் இயங்கும் (Department for Promotion of Industry and Internal Trade) - DPIIT சொல்லி இருக்கிறது. புரியவில்லையா? இதோ விளக்கம்.

விளக்கம்

விளக்கம்

1. இந்தியா உடன் எல்லைப் பகுதிகளைப் பகிர்ந்து கொள்ளும் நாட்டைச் சேர்ந்த கம்பெனிகள்

(அல்லது)

2. இந்தியாவில் செய்ய இருக்கும் முதலீடுகளால் பயன் பெற இருக்கும் நபர் வாழும் நாடு, இந்தியா உடன் எல்லைப் பகுதிகளை பகிர்ந்து கொண்டால்

(அல்லது)

3. இந்தியா உடன் எல்லைப் பகுதிகளைப் பகிர்ந்து கொள்ளும் நாட்டின் குடிமகன்கள் இந்தியாவில் முதலீடு செய்ய விரும்பினால், அவர்கள் மத்திய அரசின் அனுமதி பெற்ற பின்னரே இந்தியாவில் முதலீடு செய்ய முடியும்.

ஏன் இந்த விதி

ஏன் இந்த விதி

மத்திய அரசு, இந்தியாவின் அந்நிய நேரடி முதலீட்டுத் திட்டங்களையும், கொள்கைகளையும் பரிசீலனை செய்யும் போது, இந்த கொரோன வைரஸ் தொற்று போன்ற சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக் கொண்டு, இந்திய கம்பெனிகளை வளைத்துப் போடுவதை (opportunistic takeovers/acquisitions) தவிர்க்கவே இந்த மாற்றங்களைக் கொண்டு வந்து இருப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள்.

அனுமதி
 

அனுமதி

ஏற்கனவே வங்க தேசத்தில் இருந்து யாராவது அல்லது எந்த கம்பெனியாவது இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டும் என்றால் அவர்கள் இந்திய அரசின் அனுமதி பெற வேண்டும். இதே போலத் தான் பாகிஸ்தானைச் சேர்ந்த தனி நபர் அல்லது பாகிஸ்தான் கம்பெனி இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டும் என்றால் மத்திய அரசின் அனுமதி தேவை.

சீன ஆதிக்கம்

சீன ஆதிக்கம்

சீனா டெக் முதலீட்டாளர்கள் இந்தியாவின் பல ஸ்ஆர்ட் அப் கம்பெனிகளில் சுமார் 4 பில்லியன் டாலர் வரை greenfield investments என்று சொல்லக் கூடிய ஒரு வகையான அந்நிய நேரடி முதலீட்டைச் செய்து இருக்கிறார்களாம். இந்த வகை முதலீடுகள், முதலீட்டாளர்களுக்கு, கம்பெனியில் கூடுதல் அதிகாரம் கொடுக்கக் கூடிய வகையில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

1 பில்லியன் டாலருக்கு மேல்

1 பில்லியன் டாலருக்கு மேல்

இந்தியாவில் மொத்தம் 30 ஸ்டார்ட் அப் கம்பெனிகளின் மதிப்பு 1 பில்லியன் டாலருக்கு மேல் இருக்கிறது. இப்படி ஒரு பில்லியன் டாலருக்கு மேல் மதிப்பு கொண்ட கம்பெனிகளை யுனிகார்ன் கம்பெனிகள் என்போம். இந்தியா இந்த 30 ரத்தின ஸ்டார்ட் அப் கம்பெனிகளில் 18 கம்பெனிகளில் சீனர்கள் முதலீடு செய்து இருக்கிறார்களாம்.

சீன முதலீடு

சீன முதலீடு

இதுவரை சீனா கடந்த ஏப்ரல் 2000-ம் ஆண்டில் இருந்து டிசம்பர் 2019 வரை சுமார் 2.34 பில்லியன் டாலர் (14.846 கோடி ரூபாய்) முதலீடு செய்து இருக்கிறார்களாம். இந்த புதிய விதியால் இனி, வங்க தேசம், சீனா, பாகிஸ்தான், பூடான், நேபாளம், மியான்மர் போன்ற நாடுகளில் இருந்து இந்தியாவில் முதலீடு செய்ய மத்திய அரசின் அனுமதி வேண்டுமாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Indian Govt tightening rules for border sharing countries like china to Invest in india

China, Bhutan, Nepal, Myanmar like border sharing countries have to get permission to invest in india. Indian Govt tightening rules for border sharing countries to Invest in india.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X