செம சரிவில் சீன இறக்குமதி! கணக்கு சொன்ன மத்திய அமைச்சர்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையில் கலாச்சார ரீதியாகவும், வரலாற்று ரீதியாகவும் ஒற்றுமைகள் இருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது.

 

ஆனால், இன்று பொருளாதார ரீதியாகவும், வியாபார ரீதியாகவும், நாட்டின் பாதுகாப்பு கருதியும், இரு பெரும் நாடுகள் எதிரும் புதிருமாக இருக்கிறோம்.

பேச்சுவார்த்தைகள், அவ்வப்போது சின்ன சின்ன சச்சரவுகள் என்று மட்டும் போய்க் கொண்டு இருந்த இந்திய சீன உறவு முறை, கடந்த ஜூன் 2020 காலத்தில் வேறு ஒரு பரிமாணத்துக்கு மாறியது.

வீடு தேடி வரும் சியோமி ஸ்டோர்.. புதுப்புது ஐடியாவுடன் சீன நிறுவனம்..!

 இந்தியாவின் நடவடிக்கைகள்

இந்தியாவின் நடவடிக்கைகள்

சீன கம்பெனிகளுக்கு கொடுத்திருந்த ஒப்பந்தங்களை ரத்து செய்தது, சீன கம்பெனிகளுக்கு ஒப்பந்தம் கொடுக்கப்படாது என்றது, டிக் டாக் போன்ற 59 சீன செயலிகளுக்கு இந்தியா தடை விதித்தது, பப்ஜி போன்ற 119 சீன செயலிகளுக்கு தடை விதித்தது என இந்தியா எடுத்த முடிவுகள் எல்லாமே அதிரடி ரகம் தான். அதோடு சீனாவைச் சார்ந்து இருப்பதையும் குறைத்துக் கொள்ள இந்தியா தன்னை தயார்படுத்திக் கொண்டு இருக்கிறது.

சீன இறக்குமதிகள்

சீன இறக்குமதிகள்

சீனாவில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் சோலார் உபகரணங்களுக்கு கூடுதல் வரி விதித்தது, டிவி-க்களை இறக்குமதி செய்ய வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகரத்தில் இருந்து என் ஓ சி பெற வேண்டும் என மாற்றியது, இந்தியாவுக்குத் தேவையான முக்கிய ரசாயனங்களை இந்தியாவிலேயே தயாரிக்க உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகை (Production Linked Incentive) திட்டங்களை ஆலோசித்து கொண்டு இருப்பது என, சீனாவைச் சார்ந்து இருப்பதைக் குறைக்க பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது மத்திய அரசு.

இறக்குமதி சரிவு
 

இறக்குமதி சரிவு

இப்படி ஒரு பக்கம் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டு இருக்கும் போது, மறு பக்கம், சீனாவில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் மதிப்பு சரிந்து இருப்பதாக மத்திய வணிக அமைச்சர் பியுஷ் கோயல் பாராளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாகச் சொல்லி இருக்கிறார்.

என்ன கணக்கு

என்ன கணக்கு

ஆகஸ்ட் 2020-ல் சீனாவில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு 4.98 பில்லியன் டாலர். ஜூலையில் 5.58 பில்லியன் டாலர். ஆக மாத ரீதியாகப் பார்த்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக, இந்தியாவின் சீன இறக்குமதி குறைந்து கொண்டே வருகிறது. 2020-ம் ஆண்டின் ஏப்ரல் - ஆகஸ்ட் வரையான காலத்தில், இந்தியாவில் சீன இறக்குமதி 21.58 பில்லியன் டாலராக குறைந்து இருக்கிறது.

27.63 % சரிவு

27.63 % சரிவு

2020 - 21 நிதி ஆண்டில் (ஏப்ரல் - ஆகஸ்ட்), இந்தியா, சீனாவிடம் இருந்து இறக்குமதி செய்த மதிப்பை, கடந்த 2019 - 20 நிதி ஆண்டில் (ஏப்ரல் - ஆகஸ்ட்) செய்யப்பட்ட இறக்குமதியோடு ஒப்பிட்டால் 27.63 சதவிகிதம் இறக்குமதி சரிந்து இருக்கிறது எனச் சொல்லி இருக்கிறார் மத்திய வணிக அமைச்சர் பியுஷ் கோயல்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Indian imports from China down 27.63 percent in 2020 -21 April August Piyush goyal

Central Commerce & Industry minister Piyush goyal said that the Indian imports from China down 27.63 percent in Financial year 2020 - 21 April August period.
Story first published: Tuesday, September 22, 2020, 13:18 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X