IT ஊழியர்களுக்கு இது மிக நல்ல செய்தி.. ஜோ பிடன் சொன்ன விஷயம்.. என்ன அது?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமெரிக்கா அதிபர் தேர்தலுக்கும் நமக்கு என்ன சம்பந்தம்? யார் ஜெயித்தால் நமக்கென்ன? இப்படி நம்மில் பலர் நினைத்திருக்கலாம். ஆனால் இது இந்தியா ஐடி ஊழியர்களுக்கு தேவையான ஒரு நல்ல விஷயமாகவே உள்ளது.

 

நடப்பு ஆண்டில் கொரோனாவை விட மிக அதிகமாக இந்திய ஐடி ஊழியர்களின் மனதினை பாதித்தது, அமெரிக்காவின் ஹெச் 1பி விசா முடக்கம் தான்.

மீண்டும் எப்போது இந்த தடை நீக்கப்படும்? விசா கிடைக்குமா? கிடைக்காதா? ஹெச்1பி விசா? அமெரிக்கா வேலை? என இந்திய ஐடி ஊழியர்களின் பலரின் கனவாகவே இது உள்ளது.

மோசமான விஷயம்

மோசமான விஷயம்

அமெரிக்காவில் தொடர்ந்து வேலையின்மை விகிதம் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், அங்கு குரியுரிமை அல்லாத விசாவான ஹெச் 1பி உள்ளிட்ட பல விசாக்களை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தடை விதித்தார். இது இந்த ஆண்டு இறுதி வரையில் தடை அமலில் இருக்கும் என்றும் கூறியிருந்தார். இது உண்மையில் இந்திய ஐடி ஊழியர்களுக்கு ஒரு மோசமான விஷயமாகவே பார்க்கப்பட்டது.

யாருக்கு பாதிப்பு அதிகம்?

யாருக்கு பாதிப்பு அதிகம்?

இந்த ஹெச் 1பி விசாவினால் அதிகம் அமெரிக்காவிற்கு செல்வது இந்தியர்களும் சீனர்களும் தான். இந்த தடையினால் மிக பாதிப்பு இந்திய ஊழியர்களுக்கு தான். அமெரிக்கா மக்களுக்கு வேலை வாய்ப்பினை அதிகரிக்கும் பொருட்டு அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் இந்த அதிரடியான நடவடிக்கையினை எடுத்ததாக அப்போதே கூறினார்.

விசா குறித்தான நடவடிக்கை
 

விசா குறித்தான நடவடிக்கை

இந்த நிலையில் தற்போது ஜனநாயக் கட்சியின் வேட்பாளரும், முன்னாள் அமெரிக்கா துணை அதிபருமான ஜோ பிடன் அதிரடியான ஒரு அறிவிப்பினை கொடுத்துள்ளார். அது ஹெச் 1பி விசா மற்றும் மற்ற விசா தடையை நீக்குவது தான். மேலும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தகுதி வாய்ந்த பணியாளர்களை காக்க உடனடியாக நடவடிக்கை எடுப்பேன் என்றும் கூறியுள்ளார்.

ஐடி ஊழியர்களுக்கு இது மிக நல்ல விஷயம்

ஐடி ஊழியர்களுக்கு இது மிக நல்ல விஷயம்

ஆக இது இந்தியாவில் உள்ள ஐடி ஊழியர்களுக்கு மிக நல்ல விஷயமாகவே பார்க்கப்படுகிறது. இது குறித்து ஒரு அறிக்கையில், குடியேற்றக் கொள்கை என்பது ஒன்றாக வைத்திருப்பது. குடும்பங்களை ஒண்றினைத்தல் மற்றும் பன்முகத்தன்மையை பாதுகாப்பதன் மூலம் குடியேற்ற முறையை நவீனமயமாக்குவது போன்றவற்றவற்றில் கட்டமைக்கப்பட்டுள்ளது என்று 77 வயதான பிடன் தெரிவித்துள்ளார்.

வருடத்திற்கு எவ்வளவு?

வருடத்திற்கு எவ்வளவு?

கடந்த ஏப்ரல் மாதத்தில் கிரீன் கார்டுகளை 90 நாட்கள் நிறுத்தி வைக்க டிரம்ப் உத்தரவிட்டிருந்தார். ஜூன் மாதத்தில் மீண்டும் ஒரு அறிவிப்பினை வெளியிட்டார். அது டிசம்பர் 31 தடையை நீட்டித்தது. அமெரிக்கா ஒவ்வொரு ஆண்டும் 1,40,000 கீரின் கார்டுகளை மட்டுமே வேலைவாய்ப்புக்காக வரும் புலம் பெயர்ந்தோருக்காக ஒதுக்கிறது. இதில் குடும்ப உறுப்பினர்களும் அடங்குவர்.

தடையை நீக்குவேன்

தடையை நீக்குவேன்

தற்போது கிட்டதட்ட 10 லட்சம் வெளி நாட்டவர்கள் தங்களது குடும்பத்துடன் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். ஆனால் இன்னும் பலர் கீரின் கார்டு பெறவில்லை. ஜனாதிபதி தேர்தலில் நான் வெற்றி பெற்றால், இந்திய தகவல் தொழில் நுட்ப வல்லுனர்களால் அதிகம் விரும்பப்படும் ஹெச் 1பி விசாக்களுக்கான தற்காலிக விசாவினை இடை நீக்கம் செய்வேன் என்றும் பிடன் கூறியுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Indian IT employees have one good news

H 1B visa update.. US democratic presidential candidate joe biden who has promised to restore H 1B visa policy, also he said clear green card problems if voted to power.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X