ஐடி துறைக்கு இது 'Great Resignation' காலம்.. என்ன காரணம்..?!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய ஐடி துறையில் இருக்கும் முன்னணி நிறுவனங்கள் எப்போது இல்லாத வகையில் அதிகளவிலான வர்த்தகத்தை உள்நாட்டில் மட்டும் அல்லாமல் வெளிநாட்டில் இருந்து பெற்று வரும் நிலையில் திறன் வாய்ந்த ஊழியர்களின் பற்றாக்குறை அதிகரித்துள்ளது.

 

பிபிஓ துறைக்கு ஆறுதல் கிடைக்குமா.. ஜிஎஸ்டி குறித்த முக்கிய முடிவுகள் வெளியாகுமா..!

இதனால் ஐடி வேலைவாய்ப்புச் சந்தையில் டிமாண்ட் மற்றும் சப்ளை அளவீடுகளில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டு உள்ள காரணத்தால் ஐடி வேலைவாய்ப்பு சந்தை வல்லுனர்கள் இதை 'Great Resignation' காலம் என அழைக்கின்றனர். இதற்கு முக்கியக் காரணம் உண்டு.

இந்திய ஐடி சந்தை

இந்திய ஐடி சந்தை

இந்திய ஐடி சந்தையில் அளவுக்கு அதிகமான திறன் வாய்ந்த ஊழியர்கள் தேவைப்படும் காரணத்தாலும், பெரிய நிறுவனங்கள் மத்தியில் திறன் வாய்ந்த ஊழியர்களைக் கைப்பற்றுவதில் அளவுக்கு அதிகமாகப் போட்டி இருக்கும் காரணத்தால் ஊழியர்கள் 70 சதவீதம் வரையில் சம்பள உயர்வு அளிக்கப்படுகிறது.

'Great Resignation' காலம்

'Great Resignation' காலம்

இவ்வளவு பெரிய சம்பள உயர்வு யாருக்குத் தான் பிடிக்காது, ஐடி நிறுவனத்தில் 5 முதல் 12 சதவீத சம்பள உயர்வு கிடைக்கும் நேரத்தில் 70 சதவீதம் வரையிலான சம்பளம் அளிக்கப்படும் காரணத்தால் ஐடி ஊழியர்கள் அதிகளவில் பணிகளை ராஜினாமா செய்துவிட்டு புதிய வேலையில் சேர துவங்கியுள்ளனர், இதைத் தான் ஐடி துறை வல்லுனர்கள் தற்போது 'Great Resignation' காலம் என அழைக்கிறது.

ஐடி நிறுவனங்களுக்குச் செலவு
 

ஐடி நிறுவனங்களுக்குச் செலவு

இந்தப் பிரச்சனை காரணமாகத் தற்போது ஐடி நிறுவனங்கள் ஊழியர்களைப் புதிதாகப் பெறுவதில் செலவு செய்வது மட்டும் அல்லாமல் ஊழியர்களைத் தக்க வைப்பதிலும் அதிகளவிலான செலவுகளைச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

வேலைவாய்ப்பு எண்ணிக்கை உயர்வு

வேலைவாய்ப்பு எண்ணிக்கை உயர்வு

இந்தியாவில் தற்போது ஐடி துறை வேலைவாய்ப்பு எண்ணிக்கை கொரோனாவுக்கு முந்தைய காலகட்டத்தை ஒப்பிடுகையில் 52 சதவீதம் அதிகரித்துள்ளது. இதேபோல் ஜூன் 2020 ஒப்பிடுகையில் ஜூன் 2021ல் 163 சதவீதம் அதிகரித்துள்ளது என QUESS தனது ஆய்வுகளை வெளியிட்டுள்ளது.

பெரு நகரங்கள்

பெரு நகரங்கள்

இதேபோல் இந்தியாவில் அதிகளவிலான ஐடி நிறுவனங்கள் இருக்கும் பெங்களூர், புனே, ஹைதராபாத் மற்றும் சென்னை ஆகிய நகரங்களில் ஐடி துறையில் வேலைவாய்ப்புகளில் சேர்வோர் எண்ணிக்கை இரண்டு இலக்கு அளவில் உள்ளது.

2ஆம், 3ஆம் தர நகரங்கள்

2ஆம், 3ஆம் தர நகரங்கள்

இதேவேளையில் ஐடி நிறுவனங்கள் செலவுகளைக் குறைக்கப் பெரு நகரங்களைக் காட்டிலும் 2ஆம் மற்றும் 3ஆம் தர நகரங்களில் அதிகளவிலான ஊழியர்களைப் பணியில் அமர்த்தி வருகிறது. இதன் மூலம் ஐடி துறையில் வேலைவாய்ப்பு சந்தை மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது.

பிலிப்பைன்ஸ், வியட்நாம் & இலங்கை

பிலிப்பைன்ஸ், வியட்நாம் & இலங்கை

இதுமட்டும் அல்லாமல் இந்திய ஐடி நிறுவனங்கள் தற்போது உலகம் முழுவதிலும் அலுவலகத்தை அமைத்திருக்கும் காரணத்தால் தற்போது பிலிப்பைன்ஸ், வியட்நாம் & இலங்கை ஆகிய நாடுகளிலும் அதிகளவிலான ஊழியர்களை நியமித்துள்ளது, இது தொடர்ந்தால் இந்திய ஊழியர்கள் தங்களது வேலைவாய்ப்புகளை மெல்ல மெல்ல இழக்கக் கூடும்.

புதிய முறை

புதிய முறை

இதுமட்டும் அல்லாமல் இந்திய ஐடி நிறுவனங்கள் தற்போது Hire-Train-Deploy திட்டத்தைக் காட்டிலும் 3ஆம் தரப்பு நிறுவனங்கள் மூலம் ஊழியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுத் திறன் சார்ந்த வேலைவாய்ப்பு நியமனத்தைச் செய்கிறது. இது ஐடி சந்தையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கியத் தொழில்நுட்பம்

முக்கியத் தொழில்நுட்பம்

மார்ச் - ஆகஸ்ட் 2021 காலகட்டத்தில் இந்திய ஐடி துறையில் Full Stack, ரியாக்ட் ஜேஎஸ், ஆண்டுராய்டு, ஆன்குலார் ஜேஎஸ், கிளவுட் இன்பரா டெக்னாலஜிஸ், சைபர் செக்யூரிட்டி ஆகிய தொழில்நுட்பத்தில் அதிகளவிலான டிமாண்ட் இருந்துள்ளது. 2020 முதல் 2021 வரையில் இந்திய ஐடி துறையில் தொழில்நுட்ப தேவைகள் பெரிய அளவில் மாற்றம் கண்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Indian IT Sector in 'Great Resignation' period, hiring activity peaks

Indian IT Sector in 'Great Resignation' period, hiring activity peaks
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X