சீனா உடன் போட்டிபோட இந்திய உற்பத்தி துறைக்கு ரூ.2 லட்சம் கோடி நிதியுதவி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பொருளாதாரத்தை மேம்படுத்த மத்திய அரச பல புதிய திட்டங்களை அறிவித்து வரும் நிலையில் அனைத்துத் தரப்பு மக்களும், வர்த்தகர்கள் தொழிலதிபர்கள் எதிர்பார்த்து வரும் நிலையில் இன்று மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் 3வது பொருளாதார ஊக்குவிப்புத் திட்டத்தை அறிவித்துள்ளார்.

 

3வது பொருளாதார ஊக்குவிப்புத் திட்டத்தில் நாட்டின் உற்பத்தி துறையை ஊக்குவிக்கவும், உற்பத்தி துறையில் வேகமாக வளர்ந்து வரும் வியட்நாம், பங்களாதேஷ் ஆகிய நாடுகளுடன் போட்டிப்போடவும், சீனாவின் உற்பத்தி வர்த்தகத்தை ஈர்த்து, உற்பத்தி துறையில் நேருக்கு நேர் போட்டி போடும் நோக்குடன் உற்பத்தி துறையைச் சார்ந்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார் நிதியமைச்சர்.

கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ள பொருளாதாரத்தை மேம்படுத்த Atmanibhar Bharat 3.0 திட்டத்தின் கீழ் சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் அளவிலான நிதி ஒதுக்கீடு செய்துள்ளார் நிர்மலா சீதாராமன்.

ரூ.2 லட்சம் கோடி

ரூ.2 லட்சம் கோடி

இந்தியாவின் உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்பை மேம்படுத்தும் நோக்குடன் Atmanibhar Bharat 3.0 திட்டத்தின் கீழ் 2 லட்சம் கோடி ரூபாய் அளவிலான நிதி ஒதுக்கீடு செய்து பொருளாதார வளர்ச்சிக்கு பாதையை அமைத்துள்ளார் மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன்.

 பிஎல்ஐ திட்டம்

பிஎல்ஐ திட்டம்

மத்திய அரசு அறிவித்துள்ள 5 ஆண்டு உற்பத்தி சார்ந்த ஊக்குவிப்புத் திட்டம் புதிதாக 10 துறைக்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்ட விரிவாக்கம் நாட்டின் உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பது மட்டும் அல்லாமல் ஆசியாவில் மாற்று உற்பத்தி தளமாக இந்தியாவை உருவாக்கும் முயற்சியின் முதல் படியாக இருக்கும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்புச் சீனாவில் இருந்து உற்பத்தியை வேறு நாடுகளுக்கு மாற்ற விரும்பும் நிறுவனங்களை ஈர்க்க பெரிய அளவில் பயன்படும்.

முக்கியத் துறை
 

முக்கியத் துறை

இன்று அறிவிக்கப்பட்டுள்ள உற்பத்தி சார்ந்த ஊக்குவிப்புத் திட்டம் புதிதாக 10 துறைக்கு விரிவாக்க அறிவிப்பின் மூலம் சன்ரைஸ் துறை மற்றும் அதிக ஊழியர்களை நம்பி வர்த்தகம் செய்யும் துறைகளுக்குப் பெரிய அளவில் உதவும். இதுமட்டும் அல்லாமல் சர்வதேச உற்பத்தி சந்தையில் இந்தியாவிற்குத் தனியிடம் பெற்றுதர உதவும்.

புதிய 10 துறை

புதிய 10 துறை

இன்று PLI திட்டத்தில் கீழ் சேர்க்கப்பட்ட புதிய 10 துறைகளுக்கு 1,45,980 கோடி ரூபாய் மதிப்பிலான ஊக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

  • Advance Chemistry Cell (ACC) battery (ரூ.18,100 கோடி)
  • Electronics and technology products (ரூ.5,000 கோடி)
  • Automobiles and auto components (ரூ.57,042 கோடி)
  • Pharmaceuticals and drugs (ரூ.15,000 கோடி)
  • Telecom and networking products (ரூ.12,195 கோடி)
  • Textiles products (ரூ.10,683 கோடி)
  • Food products (ரூ.10,900 கோடி)
  • High-efficiency solar PV modules (ரூ.4,500 கோடி)
  • White goods (ரூ.6,238 கோடி)
  • Speciality steel (ரூ.6,322 கோடி)
3 முக்கியத் திட்டங்கள்

3 முக்கியத் திட்டங்கள்

தற்போது இந்தியாவில் உற்பத்தி நிறுவனங்களை அமைக்க ஆர்வமாக இருக்கும் நிறுவனங்களுக்கு மிகவும் குறைவான கார்ப்ரேட் வரி (25%), PLI திட்ட நன்மைகள், PMP என்படும் phased manufacturing plan ஆகிய 3 திட்டங்களின் நன்மை எவ்விதமான தடையுமின்றி அனைத்து நிறுவனங்களுக்கும் கிடைக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Indian Manufacturing sector gets Rs 2 lakh crore Stimulus

Indian Manufacturing sector gets Rs 2 lakh crore Stimulus
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X